மமக முன்னாள் MLA அஸ்லம் பாஷாவை நலம் விசாரித்த மஜக தலைவர்கள்..

image

image

சென்னை.ஜூலை.26., சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் உடல்நல குறைவால் சிகிச்சை பெற்று வரும் மமக மாநில அமைப்பு செயலாளர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சகோதரர் அஸ்லம் பாஷா அவர்களை மனிதநேய ஜனநாயகக் கட்சியின் பொதுச் செயலாளர் எம்.தமிமுன்அன்சாரி MLA அவர்களும், மாநில செயலாளர் சாதிக் பாட்சா மற்றும் மாநில துணைச்செயலாளர் திருமங்கலம் ஜெ.ஷமீம் அஹ்மத் உள்ளிட்ட கட்சியினர் சந்தித்து ஆறுதல் கூறினர்.

பொதுச்செயலாளரின் ஊடக நேர்காணல் பதில்கள் மிகவும் நேர்த்தியாகவும் நிதானமாகவும் இருப்பதாக உற்சாகம் ததும்ப பேசியவர், பொதுச்செயலாளரின் உடல்நலத்திலும் கவனம் எடுக்க வேண்டும் என கவலை பொங்க தனது விருப்பத்தையும் தெரிவித்தார், மேலும் இறைவன் அருளாலும், பல்வேறு சகோதரர்களின் பிராத்தனை உதவியுடன் தற்பொழுது விரைந்து குணம் அடைந்து வருவதாகவும் தெரிவித்தார்.

தகவல்;
மஜக தகவல் தொழில்நுட்ப அணி
#MJK_IT_WING
சென்னை.
26.07.2017