கூம்பு வடிவ ஒலிபெருக்கி விவகாரம்! மஜக நடவடிக்கை!

அனைத்து மத வழிபாட்டு தலங்களிலும் கூம்பு வடிவ ஒலிப்பெருக்கிகளை அகற்றுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டதை காரணம் கூறி திருச்சி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் காவல்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

பள்ளிவாசல்களில் பலவந்தமாக, அவகாசம் அளிக்காமல், கூம்பு வடிவ ஒலிப்பெருக்கிகளை அகற்றுவதாக உலமாக்கள் சார்பில் மஜக பொதுச்செயலளர்
M. தமிமுன் அன்சாரி MLA அவர்களிடம் புகார் கூறப்பட்டது.

இது குறித்து அரசு உயர் தரப்புக்கும், அதிகாரிகளிடமும் பொதுச்செயலாளர் அவர்கள் பேசினார்கள்.

நீதிமன்ற உத்தரவை மதிக்கிறோம். அதே நேரம் கூம்பு வடிவ ஒலிப்பெருக்கிகளை அகற்றவும், புதிய குறைந்த சக்தி ஒலிப்பெருக்கிகளை மாற்றி வைக்கும் வரை சப்தத்தை குறைத்து பயன்படுத்தவும் அவகாசம் அளிக்க வேண்டும் என்றும், அதுவரை
காவல்துறை நடவடிக்கைகளை எடுப்பதை தவிர்க்க வேண்டும் என்றும்,
மஜக சார்பில் எடுத்துவைத்த கருத்தை அதிகாரிகள் ஏற்றுக் கொண்டனர்.

தற்போது இப்பிரச்சனை சுமூகமாக முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

தகவல்:
மஜக ஊடகப் பிரிவு.