நவ 22
திருச்சி தென்னூர் பெரிய பள்ளிவாசலின் புதிய மாடி பகுதி திறப்பு விழாவுடன் மீலாது விழாவும் இணைந்து நடைபெற்றது.
இதில் மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA பங்கேற்று பேசினார்.
நபிகள் நாயகத்தின் சிறிய தந்தை அபு தாலிப் அவர்களை எடுத்துக் காட்டி சமகால சூழலில் எவ்வாறு பிரச்சனைகளை அணுக வேண்டும் என்பது குறித்து பேசினார்.
அபு தாலிப் அவர்கள் மார்க்கத்தை தழுவா விட்டாலும், மார்க்க பணிகளுக்கும், இறைத்தூதருக்கும் துணையாக இருந்தார்கள். இப்போது அப்படிப்பட்ட உள்ளங்களை உருவாக்க வேண்டியது அவசியம் என்றும், சமூக நல்லிணக்கத்தை வளர்க்கும் வகையில், பள்ளிகளுக்கு சகோதர சமூக மக்களை அழைத்து உபசரிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
கொந்தளிப்பான காலக்கட்டத்தில் முதிர்ச்சியுடனும், நிதானத்துடனும் செயல்பட வேண்டும் என்றும் பிற சமூக மக்களுடனான உறவுகளை வளர்த்தெடுக்க வேண்டும் என்றும் , சமூக வலைதளங்களில் பொறுப்புணர்வோடு கருத்துகளை பதிவிட வேண்டும் என்றும் கூறினார்.
இந்நிகழ்வில் தலைவர்கள், உலமாக்கள், ஜமாத் பிரமுகர்கள் என பலரும் பங்கேற்றனர்.
பொதுச் செயலாளருடன், மாநிலச் செயலாளர் நாச்சிக்குளம் தாஜ்தீன், மாநில துணைச் செயலாளர் நாகை முபாரக், மாவட்ட மஜக பொறுப்புக் குழு தலைவர் பேரா. மொய்தீன், பொறுப்புக் குழு உறுப்பினர்கள் ஜமால், தர்ஹா பாரூக் உள்ளிட்ட மஜக வினரும் பங்கேற்றனர்.
தகவல்,
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#திருச்சி_மாவட்டம்
22.11.2020