நவ 22,
மஜக வின் மாநில துணைச் செயலாளர் பாபு ஷாகின்ஷாவின், மகள் ஷாநாஸ் அம்ரின் அவர்களுக்கும் , மணமகன் அசார் ஜாவீத், அவர்களுக்கும் இன்று மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA தலைமையில் இன்று ஈரோட்டில் திருமணம் நடைபெற்றது.
இதில் ‘மஜகவின் 75 நாட்கள் உறுப்பினர் சேர்ப்பு முகாம்’ நடைபெற்றது.
முதலாவதாக மணமகன் அசார் ஜாவித் உறுப்பினர் படிவத்தில் கையெழுத்திட்டார். அதுபோல் திருமணத்திற்கு வந்த பலரும் கையெழுத்திட்டு தங்களை மஜக வின் உறுப்பினராக இணைத்துக் கொண்டனர்.
இந்நிகழ்வில் துணைப் பொதுச் செயலாளர் செய்யது முகம்மது பாரூக், மாநில செயலாளர் நாச்சிக்குளம் தாஜ்தீன், ஆகியோரும் மணமக்களை வாழ்த்தினர்.
இதில் மாநில துணைச் செயலாளர் நாகை முபாரக், ஈரோடு கிழக்கு மாவட்ட செயலாளர் ஷபி, மற்றும் கட்சியின் பல்வேறு பொறுப்புகளில் உள்ள நிர்வாகிகளும் பங்கேற்றனர்.
தகவல்,
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#ஈரோடு_கிழக்கு_மாவட்டம்
22.11.2020