நவ-22
இன்று மனிதநேய ஜனநாயக கட்சியின் ஈரோடு கிழக்கு மாவட்ட அலுவலகத்தை பொதுச்செயலாளார் மு.தமிமுன் அன்சாரி MLA திறந்து வைத்தார்.
மாவட்ட செயலாளர் ஷஃபி தலைமையில் நடைப்பெற்ற இந்நிகழ்வில் துணைப் பொதுச் செயலாளர் செய்யது முகம்மது ஃபாருக், மாநில செயலாளர் நாச்சிக்குளம் தாஜுதீன், மாநில துணைச் செயலாளர் நாகை முபாரக் ஆகியோர் உடனிருந்தனர்.
அப்போது கொரோனாவால் பணியாற்றிய தன்னார்வலர்களுக்கு ஈரோடு மாவட்ட மஜக சார்பில் தயாரிக்கப்பட்ட பாராட்டு கேடயங்களை பொதுச் செயலாளர் வழங்கினார்.
அதன் பிறகு நடைப்பெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில் அவர்களின் கேள்விகளுக்கு பொதுச்செயலாளர் பதிலளித்தார்.
அதிமுக- பாஜக கூட்டணி உறுதியானது குறித்த கேள்விக்கு பதிலளிக்கையில், மராட்டியத்தில் தனது கொள்கை பங்காளி சிவசேனையை பாஜக எவ்வாறு வீழ்த்தியது என்றும், பீஹாரில் ஐக்கிய ஜனதா தளத்தையும், நிதிஷ் குமாரையும் அவர்கள் எவ்வாறு பலகினப் படுத்தினார்கள் என்பதையும் அனைவரும் அறிவர். இதே நிலை பாஜகாவால் தமிழகத்தில் அதிமுகவுக்கு ஏற்படும் என கருதுகிறோம். இது குறித்து அதிமுக தொண்டர்கள்தான் கவலைப்பட வேண்டும் என்றார்.
எமது அடுத்த கட்ட அரசியல் நகர்வுகளை விரைவில் அறிவிப்போம் என்றும் கூறினார்.
முன்னதாக மாவட்ட அலுவலக வளாகத்தில் கட்சி கொடியினை பொதுச்செயலாளர் அவர்கள் ஏற்றிவைத்தார்கள்.
பின்னர் 75 நாட்கள் மஜகவின் உறுப்பினர் சேர்க்கை குறித்தும், கட்சியின் வளர்ச்சி குறித்தும் பொதுச்செயலாளரும், துணைப்பொதுச்செயலாரும், மாநில செயலாளரும் தொண்டர்களுடன் கலந்துரையாடினர்.
இந்நிகழ்வில் மாவட்ட பொருளாளர் முகம்மது அலி, மாவட்ட துணை செயலாளர்கள் பக்கிர் முகம்மது, பாபு, ஜாபர், ரியாஸ், முஸ்தபா, நிர்வாகிகள் சபிர் அலி, பசிர், யாசர், பயாஸ், ஹாரிஸ், ஜாவித் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKITWING
#ஈரோடு_கிழக்கு_மாவட்டம்.
22.11.2020