வானிலை நிபுணர் செல்வக்குமார் அவர்களுடன் மஜக பொதுச்செயலாளர் மு தமிமுன் அன்சாரி MLA சந்திப்பு!


நவ. 21,

பிரபல வானிலை நிபுணர் செல்வக்குமார் அவர்கள் சமீப வருடங்களாக வானிலை முன் அறிவிப்புகளை துல்லியமாக கணித்து வெளியிட்டு வருகிறார்.

சேட்டிலைட் போன்ற நவீன அறிவியல் சாதனங்களின்றி அவர் கணிக்கும் அறிவிப்புகள், அவ்வாறே நிகழ்வதால் இவரது முடிவுகளை பொதுமக்கள் மட்டுமின்றி அரசும் கூர்ந்து கவனித்து வருகிறது.

இன்று மன்னார்குடியில் அவரை மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் சந்தித்து சால்வை அணிவித்து சிறப்பு செய்தார். அப்போது மாநிலச் செயலாளர் நாச்சிக்குளம். தாஜ்தீன், மாநில துணைச் செயலாளர் நாகை முபாரக் ஆகியோரும் உடனிருந்தனர்.

ஆசிரியர் பணியாற்றி வரும் அவர், கடந்த 25 ஆண்டு காலமாக வானிலை சேவை ஆற்றி வருவதாக கூறினார்.

இம்மாதம் 25 முதல் டிசம்பர் 15 வரை அடுத்தடுத்து 3 புயல்கள் தாக்க வாய்ப்பு இருப்பதாக தெரிய வருவதாகவும், அவற்றின் நகர்வுகளை கவனித்து வருவதாகவும் அவர் கூறினார்.

மக்களுக்கும், அரசுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் இச்சேவையை மஜக சார்பில் மனமார பாராட்டுவதாக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA கூறினார்.

தகவல்,

#மஜக_தகவல்-தொழில்நுட்ப_அணி,
#MJKitWING
#திருவாரூர்_மாவட்டம்.