சவூதிவாழ் தமிழர்களின் சிறப்பு விமானம் தரைஇறங்க விரைந்து அனுமதி தேவை! தமிழக அரசிடம் மஜக பொதுச்செயலாளர் மு தமிமுன் அன்சாரி MLA கோரிக்கை!

ஜூலை 03,

சவூதியில் உள்ள தமிழ் நாடு (NRI ) பெற்றோர்கள் சங்கம் சார்பில் தாயகம் திரும்ப சார்ட்டர்டு விமானம் (6E 8929) தம்மாமிலிருந்து புறப்பட்டு திருச்சி வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆனால் தரை இறங்கும் அனுமதி இன்னும் கிடைக்கவில்லை.

இது தொடர்பாக முகவை.சீனி அவர்கள் மஜகவின் கவனத்திற்கு கொண்டு வந்தார்.

பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA அவர்கள், இது குறித்து தமிழக அரசின் சிறப்பு அதிகாரி திரு.செந்தில் IAS மற்றும் முதல்வர் அலுவலகத்தின் கவனத்திற்கும் கொண்டு சென்றார்.

விரைந்து ஏற்பாடு செய்வதாக அவர்கள் பதில் அளித்துள்ளனர்.

இது போல் சவூதியிலிருந்து மனிதநேய சொந்தங்களால், IKP ஏற்பாட்டில் அங்குள்ள தமிழர்கள் தாயகம் திரும்ப ஒரு சிறப்பு விமானம் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

வளைகுடா நாடுகளில் மஜக சார்பு அமைப்பான மனிதநேய கலாச்சாரப் பேரவை (MKP) சார்பில் ஐக்கிய அரபு அமீரகம், கத்தார் ஆகிய நாடுகளிலிருந்தும் சிறப்பு விமானங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

குவைத்திலிருந்து MKP சார்பில் கடந்த வாரம் முதல் சிறப்பு விமானம் திருச்சி வந்த நிலையில், இரண்டாவது சிறப்பு விமானம் ஏற்பாடாகி வருவது குறிப்பிடத்தக்கது.

கட்டணம் உள்ளிட்ட அனைத்து செலவுகளுடன் பயணிகள் சிறப்பு சார்ட்டர்ட் விமானங்களை பதிவு செய்து வருகின்றனர்.

வந்தே பாரத் திட்டம் மூலம் கூடுதல் விமான சேவைகளை மத்திய அரசு தமிழர்களுக்கு வழங்கினால், சார்ட்டர்ட் விமானம் மூலம் ஆகும் கூடுதல் செலவுகள் தவிர்க்கப்படும் என வெளிநாடு வாழ் தமிழர்கள் மத்திய, மாநில அரசுகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

தகவல் ;
#மஜகதகவல்தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#தலைமையகம்.