தம்மாம்.நவ.13., கடந்த வெள்ளிகிழமை 10/11/2017 அன்று தம்மாம், மீனா பகுதியில் உள்ள குளோப் மெரின் கம்பெனி கேம்பில் இஸ்லாமிய கலாச்சாரப் பேரவை (IKP) தம்மாம் மண்டல கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் மண்டல செயலாளர் செய்யது அலி, பொருளாளர் ஹஜ் முஹம்மது, துணை செயலாளர் ஆவூர் ஜாகிர் உசேன் மற்றும் கிளை உறுப்பினர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.. இந்த கூட்டத்தில் அல் மீனா குளோப் மெரின் புதிய கிளை தொடங்க பட்டது. கிளை நிர்வாகிகள் கீழ் கண்டவாறு ஒரு மனதாக தேர்வு செய்ய பட்டார்கள். 1) கிளை செயலாளர் : Y.சாகுல் ஹமீது அவர்கள் (கோட்டைபட்டிணம்). 2) பொருளாளர் : K. முஹம்மது மைதீன் அவர்கள் (தஞ்சாவூர்). 3) துணை செயலாளர்: முஹம்மது நிஜாம் அவர்கள் (தென்காசி). 4) துணை செயலாளர் : முஹம்மது ஹனீப் அவர்கள் (மேலப்பாளையம்). 5) துணை செயலாளர் : K. தமிமுன் அன்சாரி அவர்கள் (மேலப்பாளையம்) 6) துணை செயலாளர் : K. முஹம்மது சித்திக் அவர்கள் (தஞ்சாவூர்). புதிதாக பொறுப்பேற்றுள்ள நிர்வாகிகளுக்கு மண்டல செயலாளர் மற்றும் மண்டல நிர்வாகிகள் வாழ்த்துக்களையும் அறிவுரைகளையும் வழங்கினார்கள். நிகழ்வுக்கு பிறகு கூட்டம் இனிதே நிறைவு பெற்றது. #தகவல்; #IKP_தம்மாம்_மண்டல_ஊடக_பிரிவு #IKP_IT_WING 12/11/2017
செய்திகள்
வாணியம்பாடி நகரில் உற்சாகத்துடன் மஜகவில் இணைந்த இளைஞர்கள்…!
வேலூர்.நவ.13., வேலூர் மேற்கு மாவட்டம் வாணியம்பாடி நகரில் நேற்று மாவட்ட அமைப்பு குழு உறுப்பினர் S.M.ஷாநவாஸ் அவர்கள் வாணியம்பாடி நகர நிர்வாகிகளுடன் சென்று கிளைகளை ஆய்வு செய்தபோது இளைஞர்கள் தங்களை உற்சாகத்துடன் மனிதநேய ஜனநாயக கட்சியில் இணைத்து கொண்டனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #வாணியம்பாடி_நகரம் #வேலூர்_மே_மாவட்டம் 12.11.2017
சிறப்பாக நடைபெற்ற மஜக திருப்பூர் மாநகர் மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம்!
திருப்பூர்.நவ.12., இன்று மனிதநேய ஜநாயக கட்சியின் திருப்பூர் மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் திருப்பூர் மாவட்ட அலுவலகத்தில் சிறப்பாக நடைபெற்றது. மாவட்ட செயலாளர் இ.ஹைதர் அலி அவர்கள் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், மாநில செயற்குழு உறுப்பினர் இக்பால் அவர்கள் முன்னிலை வகிக்க, மாவட்ட பொருளாளர் முஸ்தாக் அஹமது அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார். இக்கூட்டத்தில் கட்சியின் வளர்ச்சி குறித்தும் டிசம்பர்-6 இரயில் மறியல் போராட்டம் குறித்து விரிவாக ஆலோசனை செய்யப்பட்டது. சீரிய திட்டத்தோடு சிறப்பாக நடைபெற்ற இந்த கூட்டத்தில் தகவல் தொழில்நுட்ப அணி மாநில துணை செயலாளர் காதர்கான், மாவட்ட துணைச் செயலாளர் அக்பர் அலி, மாணவர் இந்தியா மாவட்ட செயலாளர் நெளஃபில் ரிஸ்வான், திருப்பூர் மீரான், செரங்காடு செளகத் அலி, பெரிய தோட்டம் அபு, அஸ்கர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியின் இறுதியில் மாவட்ட துணைச்செயலாளர் அப்பாஸ் அவர்கள் நன்றியுரைக்கு பின்பு கூட்டம் நிறைவுபெற்றது. தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #திருப்பூர்_மாநகர்_மாவட்டம். 12/11/2017.
மதுக்கூரில் மனித உரிமை மீறல்களை நிறுத்துக..! காவல் துறையினரிடம் மஜக பொதுச்செயலாளர் வேண்டுகோள்..!!
தஞ்சை.நவம்பர்.12., தஞ்சை மாவட்டம் மதுக்கூரில் கடந்த 30/10/2017 அன்று இஸ்லாமிய ஜனநாயக முன்னனியின் நிறுவனர் மதுக்கூர் மைதீன் என்பவர் படுகொலை செய்யப்பட்டார். அது குறித்து கொலையாளிகள் தரப்பில் காவல் துறையினர் குற்றவாளிகள் 10 பேரை கைது செய்தனர். இந்நிலையில் மதுக்கூர் மைதீன் அவர்களுடன் இணைந்து செயல்பட்டார்கள் என்ற காரணம் காட்டி ஏராளமானோர் மீது பொய் வழக்கு போடுவதாகவும், நள்ளிரவில் வீடு புகுந்து பெண்களை தொந்தரவு செய்வதாகவும், பெற்றோர்களை காவல் நிலையத்திற்கு அழைத்து மிரட்டுவதாகவும் புகார்கள் எழுந்துள்ளது. குறிப்பாக மதுக்கூர் காவல் நிலையத்தில் உளவு துறையில் பணியாற்றும் ரவி என்பவர் உயர் அதிகாரிகளுக்கு தவறான தகவல்களை தெரிவிப்பதாகவும், சமூக ஆர்வலர்கள் மற்றும் பல்வேறு இயக்கத்தை சேர்ந்தவர்களை கேவலமாக பேசுவதாகவும் இதனால் மதுக்கூரில் பதற்றமான நிலை ஏற்பட்டுள்ளதாகவும் மஜக நிர்வாகிகளிடம் ஊர் மக்கள் தரப்பில் கூறப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட குடும்பத்தினர், உறவினர்கள் மீது காவல்துறையினர் பொய் வழக்கு போடும் காவல்துறையினரை கண்டித்து மதுக்கூர் மைதீன் தாயார் காவல் நிலையம் எதிரே தீக்குளிக்க சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. இதற்கிடையே மஜக துணை பொதுச்செயலாளர் ராவுத்தர்ஷா அவர்கள் அழைத்ததின் பேரில் பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA அவர்களுடன் மாநில செயலாளர் நச்சிக்குளம் தாஜுதீன்
பேராவூரணியில் மஜக அலுவலகத்தை திறந்து வைத்தார் மஜக பொதுச்செயலாளர்..! புதிதாக இணைந்தவர்களால் கலை கட்டுகிறது தஞ்சை தெற்கு..!!
தஞ்சை.நவ.12., தஞ்சை மாவட்டம் நிர்வாக ரீதியாக தஞ்சை வடக்கு, தெற்கு, மாநகர் என நிர்வாக ரீதியாக மூன்றாக பிரிக்கப்ட்டுள்ளது. மமக உள்ளிட்ட பல்வேறு கட்சியிலிருந்து ஏராளமான இளைஞர்கள் மற்றும் மணவர்கள் இணைந்துள்ள நிவையில், இன்று 12/11/17 பேராவூரணியில் ம.ஜ.க அலுவலகத்தை பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA திறந்து வைத்தார். ECR சாலை சேதுபவாசத்திரத்திலிருந்து பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA, துணை பொதுச்செயலாளர் மன்னை செல்லச்சாமி, ராவுத்தர்ஷா, மாநிலச் செயலாளர் நாச்சிக்குளம் தாஜ்ஜுதீன், தகவல் தொழில்நுட்ப அணி மாநில செயலாளர் ஆகியோரை ஏராளமான கார், பைக்களில் பேராவூரணி வரை ஊர்வலகமாக அழைத்து வந்தனர். இந்நிகழ்வுக்கு மாவட்ட பொதுக்குழு தலைவர் பேராவூரணி அப்துல் சலாம் தலைமை வகித்தார். இந்நிகழ்வில் வாழ்த்துரை வழங்கிய தமிழக மக்கள் புரட்சி கழகம் கொள்கை பரப்புச் செயலாளர் R.நீலகண்டன் பேசும்போது, சிறுபான்மையினர் அல்லது தலித்துகள் கட்சி தொடங்கினால் அவர்களது சமுதாயக் கட்சி என்கிறார்கள், மற்றவர்கள் ஆரம்பித்தால் அது பொதுவான கட்சி என்கிறார்கள். ஆனால் மனிதநேய ஜனநாயக கட்சி அனைத்து சமுதாயத்தவர்களையும் ஜனநாயகம் காக்கும் வகையில் இணைத்திருப்பதால், மஜகவை அப்படி யாராலும் கூறமுடியவில்லை. தமிழ் தேசியம், திராவிடம், தமிழ்நாட்டின் வாழ்வதாரம் ஆகியற்றிக்காக மஜக பொதுச்செயலாளர் தொடர்ந்து