காரைக்கால்.டிச.29., நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று 29.12.2017 காரைக்கால் மாணவர் கூட்டமைப்பு சார்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது. இதில் மனிதநேய ஜனநாயக கட்சி (மஜக) சார்பாக மாவட்ட செயலாளர் A.R. பாவா பஹ்ருதீன் கண்டன உரை நிகழ்த்தினார். இதில் மாவட்ட துனை செயலாளர் ஹாஜா பகுருதீன், டேவிட் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் 100க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #மஜக_காரைக்கால்_மாவட்டம்
செய்திகள்
வேலூரில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி..! மஜக மாநில நிர்வாகிகள் பங்கேற்ப்பு..!!
வேலூர்.டிச.29., வேலூர் கிழக்கு மாவட்டம் முன்னாள் இளைஞரணி செயலாளர் முஹம்மத் சலீம் அவர்களின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி இன்று 29/12/17 வேலூரில் தண்டபாணி திருமண மண்டபத்தில் நடைபெற்றது. மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில பொதுசெயலாளர் M.தமிமுன் அன்சாரி MA.MLA., மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாருன்ரசீது M.COM., தலைமை ஒருங்கிணைப்பாளர் மொளலா நாசர், மாநில அவைத்தலைவர் சம்சுதீன் நாசர் உமரி, மாநில நிர்வாக குழு உறுப்பினர் J.S.ரிஃபாயி, மாநில துணை பொதுசெயலாளர் மண்டலம் ஜெய்னுலாப்தீன், மாநில செயலாளர்கள் N.A.தைமியா, நாச்சிகுளம் தாஜூத்தீன், சாதிக் பாட்ஷா, மாநில துணை செயலாளர்கள் புதுமடம் அனிஸ், வசீம்அக்ரம், இளைஞரனி மாநில பொருளாளர் மன்சூர்அகமத், மாநில இளைஞரனி துணை செயலாளர் N.அன்வர் பாஷா, மாணவர் இந்தியா மாநில துனை செயலாளர் அப்சர் சைய்யத், தகவல் தொழில்நுட்ப அணி மாநில துனை செயலாளர் சிக்கந்தர் பாஷா, மாநில செயற்குழு உறுப்பினர் செய்யதுஅபுதாஹிர், மேலும் வேலூர் கிழக்கு மாவட்ட பொருப்புகுழு நிர்வாகிகள் முஹம்மது ஜாபர், முஹம்மது வசீம், முஹம்மத் யாசீன், ஜாஹிர் உசேன், முஹம்மது யாசின், சையது உசேன், மாவட்ட மருத்துவ சேவை அணி செயலாளர் ரபிக் ரப்பானி, முன்னாள் மாவட்ட துணைச்செயலாளர் செயலாளர்
கூத்தாநல்லூரில் பிரதம மந்திரி மக்கள் மருந்தகம்..! மஜக பொதுச்செயலாளர் திறந்து வைத்தார்..!!
திருவாரூர்.டிச.29., திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூரில் மத்திய அரசின் மலிவு விலை மருந்து கடையான "பிரதம மந்திரி மக்கள் மருந்தகம்" கூத்தாநல்லூர் எமிரேட்ஸ் அமைப்பு (KEO) மூலம் கொண்டு வரப்படுகிறது. அதனை மஜக பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் நேற்று திறந்து வைத்து சிறப்புரையாற்றினார். பணம் வாங்கும் மனநிலை கொண்ட வாக்காளர்கள் நிறைந்து விட்ட அரசியல் உலகில் முற்போக்கு முயற்சிகள், புரட்சி சிந்தனைகள் எல்லாம் கேள்விக்குறியாகிவிட்டன. அரசியல், அரசியல்வாதிகள், அதிகாரிகள், பொதுமக்கள் என எல்லோரும் இதில் சிக்கி விட்ட நிலையில் KEO போன்ற தொண்டு நிறுவனங்கள் அரசின் திட்டங்களை மக்களுக்கு கொண்டு சேர்க்க வேண்டும் என்றார். சமூக நல்லிணக்கத்தை பாதுகாக்கும் வகையில், சமூக இணையதளங்களை பயன்படுத்த வேண்டும் என்றும், பிற சமூக மக்களோடு நல்லுறவை மேலும் வலிமைப்படுத்த ஜமாத்துகள் முன் முயற்சிகளை எடுக்க வேண்டும் என்றும், ஜும்மா மேடைகளை ஆலிம்கள் விழிப்புணர்வுக்காக பயன்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். இந்நிகழ்வில் சமூக ஆர்வலகளுக்கும், சாதனையாளர்களுக்கும் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. இதில் மஜக மாவட்ட செயலாளர் சீனி ஜெகபர், நெறியாளர் ஜம் ஜம் சாகுல், KEO நிர்வாகிகள் N.A.ஜாருல்லாஹ், செயலாளர் KNR, N.M.தாஹிர் செயலாளர்
முத்தலாக் மசோதா தாக்கல்..! மத்திய அரசுக்கு மஜக கடும் கண்டனம்..!!
(மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி வெளியிடும் அறிக்கை! ) முத்தலாக் கூறி மனைவியை விவாகரத்து செய்தால் அவருக்கு 3 ஆண்டு காலம் சிறை தண்டனை வழங்கும் மசேதாவை மத்திய அரசு நேற்று நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியிருப்பதை வண்மையாக கண்டிக்கின்றோம். இதை ஒரு குற்றவியல் வழக்காக சித்தரிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. இது முஸ்லீம்களுக்கு அரசியல் சாசனம் வழங்கியுள்ள உரிமைகளில் தலையிடுவதாகும். இவ்விசயத்தில் அகில இந்திய முஸ்லிம் சட்ட வாரியத்தை கலந்து ஆலோசிக்காமல், மத்திய அரசு எந்த முடிவையும் எடுக்க கூடாது என வலியுருத்தியதையும் மத்திய அரசு பொருட்படுத்தவில்லை . முத்தலாக் விசயத்தில் முஸ்லீம் பெண்களின் உரிமைகளும், கண்ணியமும் பாதுகாக்கப்படும் வகையில் அதை கையாள்வோம் என்று ஜமாத்துகளும், இஸ்லாமிய மார்க்க அறிஞர்களும் சொல்லிய பிறகும் மத்திய அரசு இவ்விசயத்தில் பிடிவாதம் பிடிப்பபதை ஏற்க முடியாது. மத்திய அரசு இச்சட்டத்தை திரும்பபெற வேண்டும். அல்லது அகில இந்திய முஸ்லிம் தனியார் சட்ட வாரியத்தோடு கலந்து ஆலோசித்து உரிய திருத்தங்களோடு கொண்டுவரவேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். இதை எதிர்த்து நாடாளுமன்றத்தில் பேசிய அதிமுக உறுப்பினர் அன்வர் ராஜா, AIIM தலைவர் அசாதுதீன் உவைசி, ராஸ்ட்ரிய ஜனதா தள உறுப்பினர் JPN யாதவ், முஸ்லிம்லீக்கை
பெண்ணுரிமையை நிலை நாட்டியவர் நபிகள் நாயகம் ஸல் அவர்கள்..! சாத்தான் குளம் முப்பெரும் விழாவில் மஜக பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA உரை..!!
இராமநாதபுரம். டிச.27., இராமநாதபுரம் மாவட்டம் சாத்தான் குளத்தில் ஜமாத்தினர் சார்பில் மீலாது விழா, மதரஸா மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா, பள்ளி சான்றிதழ் வழங்கும் விழா என முப்பெரும் விழா நடைபெற்றது. இதுவரை அரசியல் தலைவர்கள்யாரும் இவ்வூரில் அனுமதிக்காத மரபு இருந்தும் நிலையில், முதல் முறையாக மஜக பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA பங்கேற்றது குறிப்பிடத்தக்கது. சிங்கப்பூர், மலேசியா வாழ் பிரமுகர்களும் அதிக அளவில் பங்கேற்க இந் நிகழ்ச்சியில் 300 பெண்கள் உட்பட 500க்கும் மேற்பட்டோர் பகல் பொழுதில் மட்டும் கலந்துக் கொண்டனர். இந்நிகழ்வில் மஜக பொதுச் செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA ஆற்றிய உரையின் சுறுக்கம் பின்வருமாறு. பெண்ணுரிமையை நிலைநாட்டிய முதல் தலைவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்தான் என்பது உண்மையாகும். பெண்குழந்தைகளை உயிரோடு புதைத்த அரேபியர்கள், நபிகள் நாயகத்தின் போதனையில் மனம் மாறினர். அவர் பெண் குழந்தைகளை கொல்வதை தடை செய்தார்கள். மூன்று பெண் குழந்தைகளை பெற்றவர்கள் அவர்களுக்கு ஒழுக்கத்தையும், கல்வியையும் கற்றுக்கொடுத்து அவர்களுக்கு திருமணமும் செய்து கொடுத்தால் சுவர்க்கம் உறுதி என்றார்கள். பெண்களுக்கு தந்தையின் சொத்தில் பங்குண்டு என்றார்கள். முன்னுரிமை என்றபோது முதல் மூன்று இடங்களை தாய்க்குத்தான் கொடுத்தார்கள். பிறகுதான் தந்தைக்கு கொடுத்தார்கள். ஹீதைபியா உடன்படுக்கையின் போது ஹஜ் செய்ய