கடலூர்.மே.13., இன்று (13-05-2018) மாலை 6மணி அளவில் கடலூர் வடக்கு மாவட்டம் துறைமுகம் கிளையில் #மனிதநேய_ஜனநாயக_கட்சி-யின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் KMY SeaFoods அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டம் மாவட்ட செயளாளர் நெய்வேலி N.இப்ராஹிம், தலைமையில் நடைபெற்றது. மாவட்ட துணை செயலாளர் முஹம்மது யூசுப், மாவட்ட மீனவரணி செயலாளர் A.K.முஹம்மது சேட், மாவட்ட இளைஞர் அணி துணை செயலாளர் நெய்வேலி மன்சூர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். புதிய கிளை நிர்வாகம் அமைக்கப்பட்டு கீழ்கண்ட நிர்வாகிகள் ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டனர். கிளை செயலாளர் : A அப்துல் ரஹீம், கிளை பொருளாளர் : H யூசுப் கான், துணை செயலாளர்கள் : S.ஹாஜா மொய்தீன், M.முஹம்மது ரஃபி, A முஹம்மது ரஃபி, மீனவரணி செயலாளர் : குமார், மீனவரணி பொருளாளர் : ராதா, தொழிலாளர் அணி செயலாளர் : இலியாஸ் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். மேலும் நகர இளைஞர் அணி செயலாளராக : A முஹம்மது ரஃபி மற்றும் மாவட்ட மீனவரணி பொருளாளராக : சுல்தான், ஆகியோரும் மாவட்ட நிர்வாகத்தால் தேர்ந்தெடுக்கப்பட்டனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #மஜக_கடலூர்_வடக்கு_மாவட்டம்
செய்திகள்
MKP துபை மண்டல ஆலோசனை கூட்டம்..! புதிய நிர்வாகிகள் தேர்வு..!!
துபாய்.மே.12., #மனிதநேய_ஜனநாயக_கட்சி-யின் அயல்நாட்டு பிரிவான #மனிதநேய_கலாச்சார_பேரவை துபை மண்டல ஆலோசனை கூட்டம் நேற்று ( 11/05/2018) வெள்ளிக்கிழமை மாலை அல்பரஹா பார்க்கில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு ஐக்கிய அரபு அமீரக MKP செயலாளர் மதுக்கூர். அப்துல் காதர் தலைமை வகித்தார், அமீரக பொருளாளர் அதிரை.அஸ்ரப் அலி மற்றும் அமீரக துணை செயலாளர்கள் அபுல் ஹசன், Y.அப்துல் ரெஜாக் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் புதிய நிர்வாகம் கீழ்கண்டவாறு தேர்தெடுக்கபட்டுள்ளது. மண்டல செயலாளர் : லால்பேட்டை B.ரஹ்மத்துல்லாஹ்., மண்டல பொருளாளர் : லால்பேட்டை V.சபீக் ரஹ்மான்., மண்டல துணை செயலாளர்கள் : பண்டாரவாடை A.ஷாஹுல் ஹமீது (எ) ஆசிப் நாகர்கோவில் சித்திக். தோப்புத்துறை H.ஹம்தான் கட்டிமேடு ஜாஹிர் ஹுசைன் காயல்பட்டினம் J.முகம்மது சபீர் அலி அதிரை A.B.ஷாஹுல் ஹமீத் புலிவலம் M.ஜகபர் சாதிக் லால்பேட்டை M.Y.முகம்மது ஜாசிம் ஆகியோர் நிர்வாகிகளாக தேர்வுசெய்யப்பட்டனர், எனவே அனைத்து மண்டல நிர்வாகிகள் மற்றும் மனிதநேய சொந்தங்கள் இவர்களுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம். தகவல் : #MKP_தகவல்_தொழில்நுட்ப_அணி #MKP_IT_WING #மனிதநேய_கலாச்சார_பேரவை #MKP_ஐக்கிய_அரபு_அமீரகம்
கத்தார் MKPயின் முக்கிய அறிவிப்பு..!
கத்தார்.மே.12., கத்தாரில் பரமக்குடியை சேர்ந்த வாலிபர் இளங்கோவன் (த/பெ. பெருமாள், வயது-24) என்பவர் கடந்த மே.05 அன்று சனிக்கிழமை மதியம் அல்கிஸ்ஸா என்னும் பகுதியில் நண்பர்களுடன் மதிய உணவு சாப்பிட்டுவிட்டு தான் வேலைசெய்யும் வீட்டிற்க்கு புறப்படும் போது நண்பர்களிடம் நெஞ்சுவலிக்கிது என்று கூறியுள்ளார் நன்பர்கள் விரைந்து அவரின் தங்குமிடத்திற்க்கு அழைத்துச்சென்று மருத்துவணைக்கு செல்லலாம் என்று சென்று அவர் இருப்பிடம் நோக்கி புறப்பட்டுள்ளனர் அருகில் நெருங்கி இருப்பிடம் உள்நுழைந்த போது திடீரென மயங்கி விழுந்து கண்கள் இரண்டும் மரணதருவாயிலிருந்துள்ளது உடனே மருந்துவமணைக்கு சென்றுள்ளனர் அங்கே மருத்துவர்கள் மரணம் அடைந்துவிட்டதாக தெரிவித்தனர். தகவல் அறிந்தவுடன் சம்பவ இடத்திற்கு கத்தார் #மனிதநேய_ஜனநாயக_கட்சி-யின் அயல்நாட்டு பிரிவான #மனிதநேய_கலாச்சார_பேரவை நிர்வாகிகள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். உடனே சம்பந்தப்பட்ட அதிகாரிகளை தொடர்புகொண்டு விசாரணையை தொடங்கச்சொல்லி அவரின் நண்பர்கள் மற்றும் இளங்கோவனுடைய உறவினர்களுக்கு விசயத்தை தெரியப்படுத்தினர். கத்தார் #மனிதநேய_கலாச்சார_பேரவை-யின் சகோதரர்கள் இறந்தவரின் முதழாலியை கண்டு அவரின் உதவியோடு அனைத்தையும் தீவிரமாக பின்பற்றி வருகின்றனர். இதுவரை களத்தில் நின்று ஏறக்குறைய அணைத்து வேலைகளும் முடித்துவிட்ட நிலையில், இன்னும் ஓரிரு நாட்களில் அவரது உடல் இறைவனின் உதவியோடு மதுரை விமான நிலையம் வந்து
தஞ்சை விமானப் படைத்தள முற்றுகை ஆயிரத்திற்கு மேற்பட்டோர் கைது!
இந்திய அரசே..! காவிரி தீர்ப்பாயம் கூறிய கூட்டமைப்பும், அதிகாரமும் கொண்ட காவிரி மேலாண்மை வாரியம் உடனே அமைத்திடு..! காவிரிச் சமவெளியை இராணுவ முகாம் ஆக்காதே! உச்சநீதிமன்றமே..! இந்திய அரசமைப்புச் சட்டம் மற்றும் 1956 ஆற்று நீர் பகிர்வு சட்டம் இரண்டிற்கும் முரணாகத் தீர்ப்புச் சொல்லாதே! காவிரி வழக்கில் கட்டப் பஞ்சாயத்து செய்யாதே..! தமிழ்நாடு அரசே..! இந்திய அரசின் இனப்பாகுபாட்டு அரசியலுக்கு துணை போகாதே..! காவிரிச் சமவெளியில் இராணுவத்தை அனுமதிக்காதே! காவிரிச் சமவெளியைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்திடு! என்ற கோரிக்கைகளை முன்னிறுத்தி காவிரி உரிமை மீட்புக் குழு சார்பாக இன்று தஞ்சையில் விமானப் படைத்தளம் முற்றுகை போராட்டம் நடைபெற்றது. #காவிரி_உரிமை_மீட்புக்_குழு ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன் தலைமையில் இன்று காலை 11 மணியளவில் தஞ்சை வஸ்தா சாவடியில் இருந்து பேரணியாக விமானப் படைத்தளத்தை நோக்கி புறப்பட்டனர். சிறிது தூரம் சென்றதும் மேல வஸ்தா சாவடி, திருச்சி-புதுக்கோட்டை பிரிவு சாலை அருகே காவல்துறையினர் பேரணியை தடுத்தி நிறுத்தினர். அதைத் தொடர்ந்து அனைவரும் சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தினர். பின்னர் ஒரு மணி நேர போராட்டத்திற்குப் பிறகு அனைவரும் கைதாகினர். கொளுத்தும் வெயிலில் உருகும் தார்ச்சாலையில் நூற்றுக்கு மேற்பட்ட பெண்கள் உட்பட ஆயிரத்திற்கு மேற்பட்ட விவசாய- உழவர் பெருமக்கள் நடந்தும், அமர்ந்தும் நடத்திய
பயணிகள் நிழலகம் திறப்பு விழா…! நாகை MLA பங்கேற்பு..!!
நாகை; 12.05.18. நாகை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட நாகை ஒன்றியம், அந்தனப்பேட்டை ஊராட்சி, புத்தூர் அண்ணாசிலை அருகில் நாகை சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூபாய் 5 லட்சம் மதிப்பீட்டில் பேருந்து பயணிகள் நிழலகத்தை சட்டமன்ற உறுப்பினர் #மு.தமிமுன்_ அன்சாரி MLA_அவர்கள் திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அதிகாரிகள், அரசியல் கட்சி பிரமுகர்களும், பொதுமக்களும் கலந்து கொண்டனர். தகவல்; #நாகை_சட்டமன்ற_உறுப்பினர்_ அலுவலகம். 12.05.18