இந்திய அரசே..!
காவிரி தீர்ப்பாயம் கூறிய கூட்டமைப்பும், அதிகாரமும் கொண்ட காவிரி மேலாண்மை வாரியம் உடனே அமைத்திடு..!
காவிரிச் சமவெளியை இராணுவ முகாம் ஆக்காதே!
உச்சநீதிமன்றமே..!
இந்திய அரசமைப்புச் சட்டம் மற்றும் 1956 ஆற்று நீர் பகிர்வு சட்டம் இரண்டிற்கும் முரணாகத் தீர்ப்புச் சொல்லாதே!
காவிரி வழக்கில் கட்டப் பஞ்சாயத்து செய்யாதே..!
தமிழ்நாடு அரசே..!
இந்திய அரசின் இனப்பாகுபாட்டு அரசியலுக்கு துணை போகாதே..!
காவிரிச் சமவெளியில் இராணுவத்தை அனுமதிக்காதே!
காவிரிச் சமவெளியைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்திடு!
என்ற கோரிக்கைகளை முன்னிறுத்தி காவிரி உரிமை மீட்புக் குழு சார்பாக இன்று தஞ்சையில் விமானப் படைத்தளம் முற்றுகை போராட்டம் நடைபெற்றது.
#காவிரி_உரிமை_மீட்புக்_குழு ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன் தலைமையில் இன்று காலை 11 மணியளவில் தஞ்சை வஸ்தா சாவடியில் இருந்து பேரணியாக விமானப் படைத்தளத்தை நோக்கி புறப்பட்டனர்.
சிறிது தூரம் சென்றதும் மேல வஸ்தா சாவடி, திருச்சி-புதுக்கோட்டை பிரிவு சாலை அருகே காவல்துறையினர் பேரணியை தடுத்தி நிறுத்தினர். அதைத் தொடர்ந்து அனைவரும் சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தினர். பின்னர் ஒரு மணி நேர போராட்டத்திற்குப் பிறகு அனைவரும் கைதாகினர்.
கொளுத்தும் வெயிலில் உருகும் தார்ச்சாலையில் நூற்றுக்கு மேற்பட்ட பெண்கள் உட்பட ஆயிரத்திற்கு மேற்பட்ட விவசாய- உழவர் பெருமக்கள் நடந்தும், அமர்ந்தும் நடத்திய போராட்டம் காவல்துறையினரைக் கூட கசிய வைக்கும் அளவிற்கு இருந்தது.
பல்வேறு விவசாய சங்கங்களின், அமைப்புகளின் தலைவர்களும், பிரதிநிதிகளும் பங்கேற்ற உணர்ச்சி மிக்க போராட்டத்தில் #மனிதநேய_ஜனநாயக_கட்சி-யின் சார்பாக தலைமை நிர்வாகக் குழு உறுப்பினர் #AS_அலாவுதீன், அவர்கள் தலைமையில் மாநிலச் செயலாளர் #நாச்சிக்குளம்_தாஜுதீன், தஞ்சை மாநகர மாவட்ட செயலாளர் அகமது கபீர், தஞ்சை வடக்கு மாவட்ட செயலாளர் மஃரூப், புதுக்கோட்டை மேற்கு மாவட்ட துணைச் செயலாளர் முகமது ஜான், தலைமையில் திரளான மஜகவினர். பங்கேற்று கைதாகினர்.
கைதான அனைவரும் தஞ்சை E B காலனியில் தற்போது அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.
தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#மஜக_தஞ்சை_மாநகர்_மாவட்டம்
12.05.2018