சேலம்.மார்ச்.14., சேலம் மாவட்டத்தை சேர்ந்த முத்துகிருஷ்ணன் JNU பல்கலைக்கழகத்தில் தற்கொலை செய்துகொண்ட உண்மை நிலை அறிய மாணவர் இந்தியா சேலம் மாவட்ட செயலாளர் அப்ரார் பாஷா மற்றும் மாவட்ட துணை செயலாளர் பியாஸ் தலைமையில் மாவட்ட நிர்வாகிகள் மாணவர் முத்துகிருஷ்ணன் அவர்களது இல்லத்திற்க்கு சென்றனர். பெரும் சோகத்தை சூழ்ந்துகொண்ட சாமிநாதபுரம் மருதநாயகம் தெருவில் முத்துகிருஷ்ணனின் அண்ணனிடம் நடந்த விபரங்களை கேட்ட பொழுது தன் தம்பி தற்கொலை செய்து கொள்ள வாய்ப்பு இல்லை என்று கூறினார்.மேலும் பல்கலைக்கழகத்தில் சிறுபான்மை,தலித் மாணவர்களின் சுயமாரியாதைக்கு என்றும் பாதுகாப்பு இல்லை என்று முத்துகிருஷ்ணனின் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். முத்துகிருஷ்ணனின் தற்கொலையில் நீதி கிடைக்கும் வரை மாணவர் இந்தியா போராடும் என்று ஆறுதல் கூறினர். இச்சந்திப்பில் பாபு, சதாம், அம்ஜத்,சாந்த் பாஷா உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர். தகவல்: ஊடக பிரிவு, மாணவர் இந்தியா, சேலம் மாவட்டம். #Maanavar_India
மனிதநேய ஜனநாயக கட்சி (மஜக)
மஜக-மாணவர் இந்தியா கோரிக்கையை ஏற்று சாலை அமைப்பு…
திருவள்ளூர்.மார்ச்.13., திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் திருவொற்றியூர் பகுதி தியாகி சத்தியமூர்த்தி நகர் 6வது தெரு குறுகிய தெருவென்பதால் நீண்ட நாட்களாக சாலை அமைக்கப்படாமல் இருந்தது. பின்னர் மாணவர் இந்தியா மாநில செயலாளர் முஹம்மது அஸாருதீன் மற்றும் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலாளர் நாசர் முயற்சியில் முதலமைச்சரின் தனி பிரிவில் புகார் செய்யப்பட்டது. தேர்தல், வர்தா புயல், நகராட்சி தேர்தல் தாமதம் என நீண்ட முயற்சிகளுக்கு பிறகு இத்தெருவில் சிமென்ட் சாலை அமைக்கப்பட்டது. மனிதநேய ஜனநாயக கட்சி மற்றும் மாணவர் இந்தியாவின் கோரிக்கையை ஏற்று சாலை அமைத்து தந்த அரசு நிர்வாகிகளுக்கு எங்கள் மனமார்ந்த நன்றிகள் பல... தகவல்: தகவல் தொழில்நுட்ப அணி, மனிதநேய ஜனநாயக கட்சி, #MJK_IT_WING திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் 13.03.2017
சேலம் மாவட்ட ஆலோசனை கூட்டம்!
சேலம்.மார்ச்.13., மனிதநேய ஜனநாயக கட்சியின் சேலம் மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் மாவட்ட செயலாளர் சாதிக் பாட்சா தலைமையில் 12-03-2017 அன்று நடைபெற்றது. மாவட்ட துணை செயலாளர்கள் மெஹபூப் அலி, முஸ்தபா, சேக் ரபீக், அம்ஜத் அலி, பாபு உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர். கட்சியின் இரண்டாம் ஆண்டு துவக்கத்தை முன்னிட்டு எதிர்வரும் 20-03-2017 திங்கள் கிழமை மாலை பொதுக்கூட்டம் நடத்துவது என ஏக மனதாக முடிவு செய்யப்பட்டது. தகவல் : தகவல் தொழில்நுட்ப அணி மனிதநேய ஜனநாயக கட்சி #MJK_IT_WING சேலம் மாவட்டம்
குவைத் மண்டலம் மனிதநேய கலாச்சார பேரவை நிர்வாகிகள் நியமனம்…
குவைத் மண்டலம் மனிதநேய கலாச்சார பேரவையின் மண்டல து.செயலாளராக சகோ. நெல்லை அப்துல் வாஹிது அவர்களும், மக்கள் தொடர்பு செயலாளராக (PRO) சகோ. பொதக்குடி சதக்கத்துல்லாஹ் அவர்களும் நியமனம் செய்யப்பட்டுள்ளது. மண்டல, கிளை நிர்வாகிகள் மற்றும் மனிதநேய சொந்தங்கள் அனைவரும் ஒத்துழைப்பு தறுமாறு கேட்டு கொள்ளபடுகிறது. புதிதாக பொறுப்பேற்ற நிர்வாகிகள் பணி சிறக்க வல்ல ரஹ்மான் உதவி செய்வானாக. மனிதநேய கலாச்சார பேரவை மனிதநேய ஜனநாயக கட்சி #MJK_IT_WING குவைத் மண்டலம் 55278478 - 55260018 - 60338005 E-mail: mjkkuwait@gmail.com
தாமிரபரணியை பாதுகாக்க மஜக கண்டன ஆர்ப்பாட்டம்!
தூத்துக்குடி. மார்ச்.13., தூத்துக்குடி மாவட்ட மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் "தாமிரபரணி ஆற்றில் நீர் எடுக்கும் பன்னாட்டு ஆலைகளுக்கு நிரந்தர தடைவிதிக்க கோரியும்"", ""தூத்துக்குடி மாவட்டத்தை சுடுகாடாக மாற்றத்துடிக்கும் ஸ்டெர்லைட் மற்றும் DCW ஆலைகள் தண்ணீர் எடுக்க தடை கோரியும்"", ""மீனவ இளைஞர் பிரிட்சோவை சுட்டுக்கொன்ற இலங்கை அரசின் மீது நடவடிக்கை எடுக்காத மத்திய மோடி அரசை கண்டித்தும்"" நேற்று 12-03-2017 மாலை ஆத்தூரில் கண்டன ஆர்ப்பாட்டம் மாவட்ட செயலாளர் ஜாஹீர் உசேன் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட பொருளாளர் நவாஸ், மாவட்ட துணை செயலாளர் காதர் பாட்சா ஆகியோர் முன்னிலை வகிக்க மாவட்ட துணை செயலாளர் முகம்மது நஜீப் வரவேற்புரையாற்றினார். மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது.Mcom., அவர்களும், திராவிட விடுதலைக் கழகத்தின் பரப்புரைச் செயலாளர் #பால்_பிரபாகரன் அவர்களும், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நாடாளுமன்ற தொகுதி செயலாளர் #அகமது_இக்பால் அவர்களும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் #அழகு_முத்துப்பாண்டியன் அவர்களும், மஜகவின் நெல்லை மேற்கு மாவட்ட செயலாளர் #மீரான் அவர்களும், நெல்லை கிழக்கு மாவட்ட செயலாளர் #கலீல்_ரஹ்மான் ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினர். இறுதியாக ஆத்தூர் நகர் செயலாளர் அன்வர் நன்றி கூறினார். தகவல்