
சென்னை.நவ.26..,
வீடுகளில் வேலை செய்யும் வீட்டு பணியாளர்களின் நலன்களை காக்கும் ஒரு நாள் NGO அமைப்புகளின் மாநாடு சென்னையில் நடைப்பெற்றது.
அவர்களுக்கான பணி வரையறை, முறையான சம்பளம் ஆகியன குறித்த தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில் பெல்ஜியம், ஹாங்காங் உள்ளிட்ட நாடுகளின் சமூக ஆர்வலர்களும், வெளி மாநில பிரதிநிதிகளும் பங்கேற்றனர்.
இதில் நாகை சட்டமன்ற உறுப்பினரும், மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளருமான மு.தமிமுன் அன்சாரி MLA கலந்துக் கொண்டு அவர்களின் கோரிக்கைகளை வழிமொழிந்து பேசினார்.
தகவல்,
#மஜகதகவல்தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#சென்னை
26-11-2019