எண்ணூர்.நவ.26..,
இலங்கையில் தமிழர் உரிமைகளுக்காக போராடி உயிர் நீத்த தியாகிகள் நினைவு நாள் உலகம் முழுக்க இன்று மாவீரர் தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது.
இன்று சென்னையில் அசோக் லேலண்ட் தொழிற்சாலையில் பணிபுரியும் தமிழ் இன உணர்வு கொண்ட தொழிலாளர்களால், ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வில்.
மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA, தமிழக கொங்கு இளைஞர் பேரவை தலைவர் உ.தனியரசு MLA, மதிமுக-வின் தீர்மானக் குழு தலைவர் வழக்கறிஞர் ஆவடி அந் திரிதாஸ், இயக்குனர் புகழேந்தி, வழக்கறிஞர் கயல்விழி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பிறகு பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் பேசிய மு.தமிமுன் அன்சாரி மற்றும் தனியரசு ஆகியோர், இலங்கையின் புதிய ஆட்சியாளர்கள் தமிழர் வாழும் பகுதிகளில் நெருக்கடிகளை ஏற்படுத்தியிருப்பதற்கு கடும் கண்டனங்களை தெரிவித்ததோடு, அங்கு மொழி, இன, மத சிறுபான்மையினரின் நலன்களை காக்க இந்திய அரசு தலையிட வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் இயக்குனர் புகழேந்தி தங்கராஜ் எழுதிய பாஸிஸ்டுகளை தோலுரிக்கும் “காந்தி 1 %” என்ற நூல் அனைவருக்கும் விநியோகிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் இளைஞரணி மாநிலச் செயலாளர் அஸாருதீன், திருவள்ளூர் கிழக்கு மாவட்டச் செயலாளர் நாசர், மாவட்டப் பொருளாளர் ஜாஃபர், அக்மல், திருவொற்றியூர் மேற்கு பகுதிச் செயலாளர் ஜீலாணி, கிழக்கு பகுதி செயலாளர் வெங்கடேசன், மாத்தூர் பகுதி நிர்வாகிகள் மற்றும் தமிழீழ உணர்வு இயக்கத் தோழர்கள் விஜயகுமார், வந்தியதேவன், ஜெயச்சந்திரன் உள்ளிட்ட பலர் கலந்துக்கொண்டனர்.
தகவல்;
#மஜகதகவல்தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#திருவள்ளூர்_கிழக்கு
26-11-2019
https://m.facebook.com/story.php?story_fbid=2115578641875233&id=700424783390633