பஹ்ரைன்.அக்.06,.மனிதநேய ஜனநாயக கட்சியின் (மஜக) பஹ்ரைன் மண்டல மாதாந்திர ஆலோசனைக் கூட்டம் மஜகவின் அலுவலகத்தில் மண்டல செயலாளர் வல்லம் ரியாஸ் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் வரும் நவம்பர் 3ஆம் தேதி பஹ்ரைன் மண்டலத்தின் சார்பில் நடக்கவிருக்கும் " சமூக நீதி மாநாடு " பற்றியும், அதற்கான ஏற்பாடுகள் குறித்தும் மண்டல செயலாளர் வல்லம் ரியாஸ் அவர்கள் விளக்கினார். மஜக வின் செயல்பாடுகள் கண்டு சில சகோதரர்கள் தங்களை இக்கூட்டத்தில் மஜக-வில் இணைத்துக்கொண்டனர். புதிய பாதை, புதிய பயணத்தின் தொடக்கமாக பஹ்ரைன் மண்டலம் நடத்தவிருக்கும் சமூக நீதி மாநாட்டை சிறப்பாக நடத்திட மஜகவின் இளம் செயல்விரர்களும், தொண்டர்களும் உற்சாகமாக கிளம்பிவிட்டனர். மாலை 7:30 மணியளவில் கூட்டம் இனிதே நிறைவுபெற்றது. தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #பஹ்ரைன்_மண்டலம் 06-10-2017
மஜக பொதுக்கூட்டம்
மஜக பொதுக்கூட்டம்
துப்பாக்கி சூட்டில் 58 பேர் பலி..!! அமெரிக்க மக்களுக்கு அனுதாபங்கள்!
(மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயளாளர் M.தமிமுன் அன்சாரி MLA அவர்களின் இணையதள பதிவு..) அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் நடந்த இசை நிகழ்ச்சியில் 67-வயதான ஸடீபன் பேட்காக் என்பவர் கண்மூடித்தனமாக சுட்டதில் 58 பேர் அநியாயமாக கொல்லப்பட்டுள்ளனர். இதில் 500-க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்துள்ளனர். இது ஓரு மோசமான வெறிச்செயல் என்பதில் ஐயமில்லை. இச்சம்பவத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம். படுகாயம் அடைந்தவர்கள் அந்த துன்பத்திலிருந்து மீண்டுவர பிரார்த்திக்கின்றோம். இது ஒரு தனிநபரின் வெறித்தனமான செயலா? அல்லது இதற்கு வேறு பின்னனியா? என்பது குறித்து புலனாய்வு செய்யப்பட வேண்டும். இத்துயர சம்பவத்தால் அதிர்ச்சியில் ஆழ்ந்திருக்கும் அமெரிக்க மக்களுக்கு எமது ஆறுதலை தெரிவித்துக்கொள்கி்றோம். இவண்; M. தமிமுன் அன்சாரி MLA பொதுச் செயலாளர் மனிதநேய ஜனநாயக கட்சி 03-10-2017
மனிதநேய ஜனநாயக தொழிற்சங்க கொடி மற்றும் பெயர் பலகை அறிமுக விழா!
கோவை.செப்.25., மனிதநேய ஜனநாயக கட்சியின் தொழிற்சங்க பிரிவான மனிதநேய ஜனநாயக தொழிற்சங்கத்தின் கொடி மற்றும் பெயர்பலகை நேற்று கோவையில் அறிமுகப்படுத்தப்பட்டது. மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் தொழிற்சங்க கொடியையும் பெயர் பலகையும் அறிமுகப்படுத்தினார். இந்நிகழ்ச்சியில் கொங்கு இளைஞர் பேரவை நிறுவனர் தனியரசு MLA, முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் MLA, கோவை மாவட்ட செயலாளர் M.H.அப்பாஸ், தொழிற்சங்க மாவட்ட செயலாளர் A.B.S.அப்பாஸ், மாவட்ட பொருளாளர் காஜா மற்றும் நிர்வாகிகள் மக்கான் ஜாபர், ஹக்கீம், ரியாஸ், சுதீர் ஆகியோர் கலந்துகொண்டனர். தகவல்:- #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #கோவை_மாநகர்_மாவட்டம் 24/09/2017
கண்ணுக்கெட்டிய தூரம் வரை மக்கள் கூட்டம்! கோவை மஜக பொதுக் கூட்டத்தில் பேரெழுச்சி! தமிமுன் அன்சாரி, தனியரசு, கருணாஸ் முழக்கம்!
கோவை.செப்.24., கோவையில் இன்று மனிதநேய ஜனநாயக கட்சி (மஜக) சார்பில் "பாஸிஸத்தை வீழ்த்துவோம் சமூக நீதியை பாதுகாப்போம்" என்ற முழக்கத்தோடு எழுச்சி மிகு பொதுக்கூட்டம் நடைப்பெற்றது. கோவை மாநகரம் முழுக்க மஜகவின் கொடிகளும், பேனர்களும், விதவிதமான சுவரொட்டிகளும் ஒரு மாநாட்டை நினைவூட்டும் வகையில் இருந்தது. 7 மணிக்கெல்லாம் வின்சென்ட் சாலையில் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. கட்டிடங்களின் மாடிகளில் மக்கள் கூட்டம் குடும்பம், குடும்பமாக நின்று வரவேற்றது. உணர்வுப்பூர்வமான தீர்மானங்களுடன் பொதுக்கூட்டத்தில் கவுண்டர் சமுதாய மக்களும், தேவர் சமுதாய மக்களும், முஸ்லிம் சமுதாய மக்களும், தலித் சமுதாய மக்களும் அண்ணன்-தம்பிகளாய் கூடி எழுச்சியை வெளிப்படுத்தியது. இது கோவையில் மிகப்பெரும் சமூக நல்லிணக்கத்தை வலிமைப்படுத்தும் விதமாக அமைந்தது. சங்பரிவார அமைப்புகள் அந்த மண்ணில் பிளவுகளை ஏற்படுத்திய காலம் போய், பல்வேறு சமுதாய மக்களும் சகோதரர்களாக ஒரு திருவிழாவில் ஒன்று கூடுவது போல கூடியிருந்தது. இந்த அரிய சாதனையை செய்த மஜகவை அனைவருமே பாராட்டினர். இதில் மஜக பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA, தமிழக கொங்கு இளைஞர் பேரவை தலைவர் உ.தனியரசு MLA, முக்குலத்தோர் புலிப்படை தலைவர் சேது கருணாஸ் MLA
மஜக திருப்பூர் மாவட்ட செயற்குழு கூட்டம்..!
திருப்பூர்.செப்.21., மனிதநேய ஜனநாயக கட்சி(மஜக) திருப்பூர் மாவட்ட செயற்குழு கூட்டம் மாவட்ட தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் இ.ஹைதர் அலி தலைமை வகித்தார். மாவட்ட பொருளாளர் S.A.முஸ்தாக் அஹமது வரவேற்புரை நிகழ்த்தினார். கூட்டத்தில் முக்கிய அஜண்டாவாக வருகின்ற 24_09_2017 ஞாயிற்றுக் கிழமை கோவை மாநகர் மாவட்டம் சார்பில் வின்செண்ட் ரோட்டில் நடைபெறும் பொதுக்கூட்டம் குறித்து விரிவாக பேசப்பட்டது. மாவட்ட செயலாளர் ஹைதர் அலி அவர்கள் பேசும் போது தற்போதைய அரசியல் அரங்கில் அதிர்வலைகள் ஏற்படுத்தி வரும் மூன்று MLA க்கள் நமது மஜக பொதுச்செயலாளர் #எம்_தமிமுன்_அன்சாரி_MLA, கொங்கு இளைஞர் பேரவை நிறுவனர் #உ=தனியரசு_MLA, முக்குலத்தோர் புலிப்படை நிறுவனர் #சேது_கருணாஸ்_MLA, ஆகியோரை சரியான நேரத்தில். இந்த முத்தான மூன்று சட்டமன்ற உறுப்பினர்களையும் ஒருங்கிணைத்து கோவை மாவட்ட நிர்வாகம் மிக பிரமாண்டமான பொதுக்கூட்டம் ஏற்பாடு செய்துள்ளார்கள், மேலும் கோவையில் நடைபெறும் பணிகளை பார்த்தால்., நடக்க இருப்பது பொதுக்கூட்டமா அல்லது மாநாடா என வியக்கும் வகையில் உள்ளது., பாசிச வாதிகள் மக்களை பிளவு படுத்த துடிக்கும் நேரத்தில்., '' பாசிசத்தை வீழ்த்துவோம் சமூக நீதியை வென்றெடுப்போம் " என்ற ஒற்றை முழக்கத்தோடு நடைபெறும் இந்த பொதுக்கூட்டத்தில், திருப்பூர் மாவட்டத்திலிருந்து நூற்றுக்கும் மேற்பட்டோர்