(மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயளாளர் M.தமிமுன் அன்சாரி MLA அவர்களின் இணையதள பதிவு..)
அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் நடந்த இசை நிகழ்ச்சியில் 67-வயதான ஸடீபன் பேட்காக் என்பவர் கண்மூடித்தனமாக சுட்டதில் 58 பேர் அநியாயமாக கொல்லப்பட்டுள்ளனர்.
இதில் 500-க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்துள்ளனர்.
இது ஓரு மோசமான வெறிச்செயல் என்பதில் ஐயமில்லை. இச்சம்பவத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம். படுகாயம் அடைந்தவர்கள் அந்த துன்பத்திலிருந்து மீண்டுவர பிரார்த்திக்கின்றோம்.
இது ஒரு தனிநபரின் வெறித்தனமான செயலா? அல்லது இதற்கு வேறு பின்னனியா? என்பது குறித்து புலனாய்வு செய்யப்பட வேண்டும். இத்துயர சம்பவத்தால் அதிர்ச்சியில் ஆழ்ந்திருக்கும் அமெரிக்க மக்களுக்கு எமது ஆறுதலை தெரிவித்துக்கொள்கி்றோம்.
இவண்;
M. தமிமுன் அன்சாரி MLA
பொதுச் செயலாளர்
மனிதநேய ஜனநாயக கட்சி
03-10-2017