You are here

மஜக திருப்பூர் மாவட்ட செயற்குழு கூட்டம்..!

image

image

image

திருப்பூர்.செப்.21., மனிதநேய ஜனநாயக கட்சி(மஜக) திருப்பூர் மாவட்ட செயற்குழு கூட்டம்  மாவட்ட தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.

கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் இ.ஹைதர் அலி தலைமை வகித்தார். மாவட்ட பொருளாளர் S.A.முஸ்தாக் அஹமது வரவேற்புரை நிகழ்த்தினார்.

கூட்டத்தில் முக்கிய அஜண்டாவாக வருகின்ற 24_09_2017 ஞாயிற்றுக் கிழமை கோவை மாநகர் மாவட்டம் சார்பில் வின்செண்ட் ரோட்டில் நடைபெறும் பொதுக்கூட்டம் குறித்து விரிவாக பேசப்பட்டது.

மாவட்ட செயலாளர் ஹைதர் அலி அவர்கள் பேசும் போது தற்போதைய அரசியல் அரங்கில் அதிர்வலைகள் ஏற்படுத்தி வரும்
மூன்று MLA க்கள் நமது மஜக பொதுச்செயலாளர் #எம்_தமிமுன்_அன்சாரி_MLA,
கொங்கு இளைஞர் பேரவை நிறுவனர் #உ=தனியரசு_MLA,
முக்குலத்தோர் புலிப்படை நிறுவனர் #சேது_கருணாஸ்_MLA, ஆகியோரை சரியான நேரத்தில்.
இந்த முத்தான மூன்று சட்டமன்ற உறுப்பினர்களையும் ஒருங்கிணைத்து கோவை மாவட்ட நிர்வாகம் மிக பிரமாண்டமான  பொதுக்கூட்டம் ஏற்பாடு செய்துள்ளார்கள்,

மேலும் கோவையில் நடைபெறும் பணிகளை பார்த்தால்., நடக்க இருப்பது பொதுக்கூட்டமா அல்லது மாநாடா என வியக்கும் வகையில் உள்ளது., பாசிச வாதிகள் மக்களை பிளவு படுத்த துடிக்கும் நேரத்தில்., ” பாசிசத்தை வீழ்த்துவோம் சமூக நீதியை வென்றெடுப்போம் ” என்ற ஒற்றை முழக்கத்தோடு நடைபெறும் இந்த பொதுக்கூட்டத்தில்,

திருப்பூர் மாவட்டத்திலிருந்து
நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொள்வது என கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

அடுத்த அஜெண்டாவாக
வருகின்ற 01_10_2017 இயற்கை மருத்து முகாமை சிறப்பாக நடத்துவது குறித்தும் வரும் புதன்கிழமை ஊழியர்கள் கூட்டம் நடத்துவது எனவும் முடிவு செய்யப்பட்டது.

இந்த ஆலோசனை கூட்டத்தில் தகவல் தொழில்நுட்ப அணி மாநில துணைச்செயலாளர் N.காதர் கான், மாவட்ட துணைச் செயலாளர்கள் E.அப்துல் ரஹ்மான் அவர்கள், M.அப்பாஸ் அவர்கள், P.ஈஸ்வரன், வெங்கமேடு மீரான், மாவட்ட இளைஞரணி செயலாளர் சகாபுதீன், மாவட்ட வர்த்தக அணிச் செயலாளர் M.காஜா மைதீன், மாவட்ட மாணவர் இந்தியா செயலாளர் நெளபல் ரிஜ்வான், மாவட்ட செயற்குழு உறுப்பினர் J.மீரான், தாராபுரம் ஒன்றிய  செயலாளர் J.அசார் மற்றும் D.காளிபாளையம் நிர்வாகிகள் பெரியதோட்டம் கிளைச்செயலாளர் அபுதாஹீர், செரங்காடு ஜா.செளகத் அலி, செரங்காடு அப்பாஸ், Sv.காலணி உமர் மற்றும்  மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தகவல்
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#திருப்பூர்_மாவட்டம்
21_9_2017

Top