இளைஞர் அணி ஆலோசனை கூட்டம்! மஜகவில் 10 ஆயிரம் இளைஞர்களை சேர்க்க திட்டம்! தலைவர் மு.தமிமுன் அன்சாரி தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் முடிவு..

பிப்ரவரி.15.,

மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில இளைஞர் அணி ஆலோசனை கூட்டம் தலைமையகத்தில் இளைஞர் அணி மாநில செயலாளர் புதுமடம் ஃபைசல் தலைமையில் நடைபெற்றது.

இதில் தலைவர் மு.தமிமுன் அன்சாரி பங்கேற்று ஆலோசனைகளை வழங்கினார்.

இதில் மாநில செயலாளரும், இளைஞர் அணி மேலிட பொறுப்பாளருமான நாகை முபாரக், இளைஞர் அணி பொருளாளர் கோவை. ஃபைசல், இளைஞர் அணி மாநில துணைச் செயலாளர் ரமேஷ் தேவர் ஆகியோர் பங்கேற்று கருத்து பரிமாற்றங்களை செய்தனர்.

இதில் ஜூன் 1 முதல் டிசம்பர் 31 வரை 6 மாத காலத்தில் 20 முதல் 40 வயதுக்குட்பட்ட 10 ஆயிரம் புதிய இளைஞர்களை கட்சியில் இணைப்பது என்றும், அதற்கான வேலைத்திட்டத்தை ‘மஜக 2.0’ என்ற பெயரில் முன்னெடுப்பது என்றும் தீர்மானிக்கப்பட்டது.

அவர்களில் 1000 பேரை தேர்வு செய்து மண்டல வாரியாக 5 கட்டமாக அரசியல் பயிலரங்குகளை நடத்துவது என்றும் முடிவெடுக்கப்பட்டது.

பல்வேறு சமுதாய இளைஞர்களின் ஆதரவு பெருகி வரும் நிலையில், அதற்கேற்ப வியூகங்களை வகுப்பது என்றும் முடிவு செய்யப்பட்டது.

இளைஞர்களின் கவன ஈர்ப்பு கட்சியாக வளர்ந்திருக்கும் மஜக புத்தெழுச்சிமிக்க புதிய தலைமுறையினரை ‘சமூக நீதி – ஃபாசிச எதிர்ப்பு ‘ என்ற இரட்டை கருத்தியலில் அரசியல் படுத்துவது எதிர்கால தமிழ்நாட்டுக்கு நலம் சேர்க்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

தகவல்:
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#தலைமையகம்
14.02.2024.