ரோஹிங்யா மக்களுக்கு ஆதரவாக சென்னையில் தமிழர்கள் திரண்டனர்..!

image

image

image

சென்னை.செப்.22., இன்று சென்னையில் மியான்மர் அரசு பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்ட ரோஹிங்யா முஸ்லிம்களுக்கு ஆதரவாக தமிழக கொங்கு இளைஞர் பேரவை, மனிதநேய ஜனநாயக கட்சி, முக்குலத்தோர் புலிப்படை சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஜாதி, மத பேதமின்றி ஆயிரக்கணக்கான தமிழர்கள் சென்னையில் அணிதிரண்டனர்.

கடந்த இரண்டு நாட்களாகவே சென்னை முழுவதும் மூன்று கட்சிகளின் சார்பில் ஒட்டப்பட்ட சுவரொட்டிகளும், ஆங்காங்கே வைக்கப்பட்டிருந்த பேனர்களும் பொதுமக்களின் கவனத்தை ஈர்த்தன.

ரோஹிங்ய மக்களின் கண்ணீரை கூறும் துண்டு பிரசுரங்கள் ஆங்காங்கே விநியோகிக்கப்பட்டன.

இதனால் இன்று மதியம் 4 மணி முதலே போராட்டம் நடைபெற்ற துறைமுகம் பகுதியில் கட்சி சார்பற்ற பொதுமக்கள் குழுமத் தொடங்கினர்.

பாரி முனை எங்கும் மூன்று கட்சிகளின் கொடிகள் ஒன்றுமையை பறை சாற்றும் விதமாக கம்பீரமாக பறந்து அனைவரையும் வரைவேற்றுக் கொண்டிருந்தது.

4:30 மணிக்கெல்லாம் காஞ்சி, திருவள்ளூர், சென்னை மாவட்டங்களை சேர்ந்த மஜகவினர் வாகனங்களில் ரோஹிங்ய மக்களுக்கு ஆதரவாக முழக்க மிட்டபடியே பாரிமுனை பகுதியில் நுழையத் தொடங்கினர்.  அதுபோல கொங்கு இளைஞர் பேரவையினரும், முக்குலத்தோர் புலிப்படையினரும் ” நமது மாமன் – மச்சான்களுக்கு குரல் கொடுப்போம்” என்ற முழக்கங்களோடு மத்திய அரசுக்கு எதிராக கண்டன முழுக்கங்களை எழுப்பியப்படியே  அலை, அலையாய் குழுமினர்.  இந்த காட்சியும், முழக்கமும் உணர்வுப்பூர்வமாகவும், கண் கொள்ளாக் காட்சியாகவும் இருந்தது.

பர்மா பஜார், பாரிமுனை, மண்ணடி பகுதியை சேர்ந்த வியாபாரிகளும் இக்காட்சிகளை பார்த்து ஒடி வந்தனர்.

துறைமுகம் கடற்கரை சாலை மொத்தமாக தினறியது. மேடை பகுதியில் மூன்று கட்சியினரும் அரன் அமைத்தனர். பத்திரிகையாளர்களும் குவிந்தனர்.

5 மணி அளவில் மூன்று கட்சி தலைவர்களும், தங்கள் சக நிர்வாகிகளோடு வர மத்திய அரசுக்கு எதிரான முழக்கங்களால் போராட்ட களம் அதிர்ந்தன.

உ.தனியரசு MLA, M.தமிமுன் அன்சாரி MLA,  கருணாஸ் MLA ஆகியோர் மேடையில் ரோஹிங்யா மக்களுக்கு ஆதரவான முழக்கங்களை எழுப்பினர்.

சாதி, மத பேதமின்றி தமிழகத்தில் ரோஹிங்யா மக்களுக்கு ஆதரவான குரல் சென்னையில் ஒன்று திரண்டது. மூன்று தலைவர்களின் உரைகளும் ” மத்திய அரசு ரோஹிங்யா மக்களுக்கு அடைக்கலம் தரவேண்டும் ” என்பதையே வலியுறுத்தி இருந்தது.

போராட்ட களத்திற்க்கு பல்வேறு சமூகத்தினரும் வருகை தந்தது ஒரு புதிய எழுச்சியை பார்க்க முடிந்தது. அண்ணா… மாமா… என ஒருவரையொருவர் பாசத்தோடு அழைத்துக்கொண்டதையும் பார்க்க முடிந்தது.

ஈழத்தமிழர்கள் ஆதரவு போராட்டம், ஜல்லிக்கட்டு ஆதரவு போராட்டம் போல ரோஹிங்யா மக்களுக்கு ஆதரவாக இன்று தமிழர்கள் மூன்று கட்சிகளின் ஏற்பாட்டில் ஓரணியாக திரண்டிருப்பது மனிதாபிமானத்தின் வெளிப்பாடு என்றால் அது ஐயமில்லை.

இதில் ரோஹிங்யா மக்களுக்கு ஆதரவாக கருப்பு சட்டை அணிந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.

களப்பணியை மஜக மாநில செயலாளர்கள் N.A.தைமியா, A.சாதிக் பாட்ஷா, மாநில துணை செயலாளர்கள் சைபுல்லாஹ், புதுமடம் அனீஸ், சமீம் அகமது, பல்லாவரம் ஷபி உள்ளிட்டோர் சிறப்பாக அமைத்திருந்தனர்.

மூன்று அமைப்புகளின் நிர்வாகிகளும் ஒருங்கிணைந்து போராட்ட களத்தை சீர் செய்தது
குறிப்பிட தக்கது.

போராட்டம் முடிந்தது மக்கள் கலைந்து செல்ல வெகு நேரமகியது. தமிழர் ஒற்றுமை ஒங்கட்டும்..! ரோஹிங்யா மக்களின் துயரங்கள் மறையட்டும்.

தகவல்:-
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#சென்னை_மண்டலம்
22.09.2017