ஜன.18., ஈரோடு மேற்கு மாவட்டம் அந்தியூர் நகரத்தின் சார்பாக ஜல்லிகட்டின் தடையை நீக்ககோரி பேரணி நடைப்பெற்றது. இதில் ஆயிரக்கான மாணவர்கள் கலந்துகொண்டனர் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாவட்ட செயலாளர் ஷானவாஸ் கண்டண கோஷங்களை எழுப்பினார் உடன் மனித உரிமை அணி மாவட்ட செயலாளர் உஸ்மான் அலி, மாணவர் இந்தியா அப்பாஸ், கோபி நகர செயலாளர் சாதிக் பாஷா, அந்தியூர் நகர செயலாளர் ஷபி மற்றும் இளைஞரணி நிர்வாகிகள் முகமது சித்தீக், இளங்கோவன், ஹரி, பாரூக், பிலால் ஆகியோர் திரளாக கலந்து கொண்டு தங்கள் எதிர்ப்பைக் தெரிவித்தனர். தகவல் : மஜக தகவல் தொழில்நுட்ப அணி (IT-Wing) ஈரோடு மேற்கு மாவட்டம்
மஜக போராட்டங்கள்
மஜக போராட்டங்கள்
கோவை ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டத்தில் மஜக மாவட்ட நிர்வாகிகள்…
ஜன.18., ஜல்லிக்கட்டு விவகாரம் தொடர்பாக இன்று கோவையில் நடைபெற்று வரும் மாணவர் போராட்டத்திற்கு மனிதநேய ஜனநாயக கட்சியின் மாவட்ட செயலாளர் M.H.அப்பாஸ் அவர்கள் தலைமையில் செஞ்சிலுவை சங்கத்தில் இருந்து ஊர்வலமாக வ.ஊ.சி மைதானம் சென்று அவர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து அவர்களுக்கு தேவையான தண்ணீர் மற்றும் பிஸ்கட் ஆகியவைகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் மாவட்ட பொருளாளர் ATR.பதுருதீன் மாவட்ட துணை செயலாளர்கள் பாருக், சிங்கை சுலைமான், அமீர் அப்பாஸ், இளைஞர் அணி பைசல், தொழிற்சங்கம் அப்பாஸ், வணிகர் சங்கம் அக்பர் அனைத்து பகுதி மற்றும் கிளைகழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஏராளமாணோர் கலந்துகொண்டனர். தகவல் : மஜக தகவல் தொழில்நுட்ப அணி(IT-WING) கோவை மாநகர் மாவட்டம் 18.1.17
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மதுரையில் தமுக்கத்தில் நடைபெற்று வரும் போராட்டத்தில் மஜக நிர்வாகிகள்…
ஜன.18., மதுரையில் தமுக்கத்தில் நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு நடத்தகோரி மாபெரும் ஆர்பாட்டத்தில் மதுரை மஜக வடக்கு மாவட்டம் சார்பாக தண்ணீர் மற்றும் பிஸ்கட் பாக்கெட்டுகள் போராடும் மாணவர்களுக்கு வழங்கப்பட்டது. இதில் மதுரை வடக்கு மாவட்ட செயலாளர் சேக் அகமது அப்துல்லா, மாவட்ட துணை செயலாளர்கள் அட்வகேட் A.ஜமாலூதீன், ஒத்தகடை பாருக், விவசாய அணி செயலாளர் சசிகுமார், சுலைமான், சிக்கந்தர், சின்னமீரான், ஒத்தக்கடைஅப்துல் அஜீஸ், சீனிவாசன், சையது இப்ராகிம் மற்றும் மஜகவினர் கலந்து கொண்டனர் மேலூம் ஆர்பாட்டத்தில் பங்கு பெற்று மாணவர்களுக்கு மத்தியில் சிறு உரை நிகழ்த்தி ஆதரவு தெரிவித்தனர். தகவல் : தகவல் தொழில்நுட்ப அணி ( IT-Wing) மதுரை வடக்கு 18_01_17
சாலை மறியலில் மதுரை தெற்கு மாவட்ட மாணவர் இந்தியா, மஜக இளைஞர் அணி செயலாளர்கள்…
ஜன.17., இன்று அலங்கா நல்லூரில் நடைபெற்ற ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகவும் பீட்டா அமைப்பை தடைசெய்ய கோரியும் நடந்த மாணவர்கள் மறியல் போராட்டத்தில் மதுரை தெற்கு மாவட்ட மாணவர் இந்தியா செயலாளர் ஏ.அஸ்கர் கான் மற்றும் மனிதநேய ஜனநாயக கட்சியின் இளைஞர் அணி செயலாளர் பவாசிர் ஆகியோர் கலந்துகொண்டு தங்கள் ஆதரவை தெரிவித்தனர். தகவல் : மஜக தகவல் தொழில் நுட்ப அணி, மதுரை தெற்கு 17_01_17
திண்டுக்கல்லில் தடையை மீறி ஜல்லிகட்டை நடத்திய மஜக!
ஜன.15., இன்று மதியம் 3;30 மணிக்கு திட்டமிட்டவாறு திண்டுக்கல்லில் மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் ஜல்லிகட்டு நடைப்பெற்றது. 30 க்கும் மேற்பட்ட காளைகளுடன் மஜகவினர் மாநில துணை செயலாளர் திண்டுக்கல் அன்சாரி தலைமையில் தயார் நிலையில் இருந்தனர். மஜகவின் அறிவிப்பை ஏற்று ஆயிரத்திற்க்கும் மேற்பட்டோர் பார்வையாளர்களாக திரண்டனர். பல்வேறு நெருக்கடிகளை மீறி, காவல்துறையின் அரண்களை உடைத்து இரண்டு காளைகளை மஜகவினர் அவிழ்ந்து விட்டனர். பொதுமக்கள் அதை ஆராவாரம் செய்து கொண்டாடினர். இந்நிகழ்வில் இந்து, முஸ்லிம், கிருஸ்துவ சமூதாயத்தை சேர்ந்த பிரமுகர்களும், பொதுமக்களும் கலந்து கொண்டனர். இதில் மஜக மாவட்ட செயலாளர் ஹபிபுல்லா, பொருளாலர் மரைக்காயர் சேட், ஒன்றிய செயலாளர் குணசேகர், இளைஞர் அணி செயலாளர் முகம்மது நிஸ்தார், இந்தியன் பிரஸ் கிளப் தலைவர் Dr.சாம் திவாகர், நாம் தமிழர் கட்சி கணேசன், கோவில் நிர்வாகி சீனிவாசன், நாயுடு பேரவை கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர். காளையை அடக்கியவர்களுக்கு முடிவில் பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன. தகவல்; தகவல் தொழில்நுட்ப அணி(IT-Wing), மஜக திண்டுக்கல் மாவட்டம்