திருவள்ளூர்.மார்ச்.13., திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் திருவொற்றியூர் பகுதி தியாகி சத்தியமூர்த்தி நகர் 6வது தெரு குறுகிய தெருவென்பதால் நீண்ட நாட்களாக சாலை அமைக்கப்படாமல் இருந்தது. பின்னர் மாணவர் இந்தியா மாநில செயலாளர் முஹம்மது அஸாருதீன் மற்றும் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலாளர் நாசர் முயற்சியில் முதலமைச்சரின் தனி பிரிவில் புகார் செய்யப்பட்டது. தேர்தல், வர்தா புயல், நகராட்சி தேர்தல் தாமதம் என நீண்ட முயற்சிகளுக்கு பிறகு இத்தெருவில் சிமென்ட் சாலை அமைக்கப்பட்டது. மனிதநேய ஜனநாயக கட்சி மற்றும் மாணவர் இந்தியாவின் கோரிக்கையை ஏற்று சாலை அமைத்து தந்த அரசு நிர்வாகிகளுக்கு எங்கள் மனமார்ந்த நன்றிகள் பல... தகவல்: தகவல் தொழில்நுட்ப அணி, மனிதநேய ஜனநாயக கட்சி, #MJK_IT_WING திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் 13.03.2017
மஜக போராட்டங்கள்
மஜக போராட்டங்கள்
தாமிரபரணியை பாதுகாக்க மஜக கண்டன ஆர்ப்பாட்டம்!
தூத்துக்குடி. மார்ச்.13., தூத்துக்குடி மாவட்ட மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் "தாமிரபரணி ஆற்றில் நீர் எடுக்கும் பன்னாட்டு ஆலைகளுக்கு நிரந்தர தடைவிதிக்க கோரியும்"", ""தூத்துக்குடி மாவட்டத்தை சுடுகாடாக மாற்றத்துடிக்கும் ஸ்டெர்லைட் மற்றும் DCW ஆலைகள் தண்ணீர் எடுக்க தடை கோரியும்"", ""மீனவ இளைஞர் பிரிட்சோவை சுட்டுக்கொன்ற இலங்கை அரசின் மீது நடவடிக்கை எடுக்காத மத்திய மோடி அரசை கண்டித்தும்"" நேற்று 12-03-2017 மாலை ஆத்தூரில் கண்டன ஆர்ப்பாட்டம் மாவட்ட செயலாளர் ஜாஹீர் உசேன் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட பொருளாளர் நவாஸ், மாவட்ட துணை செயலாளர் காதர் பாட்சா ஆகியோர் முன்னிலை வகிக்க மாவட்ட துணை செயலாளர் முகம்மது நஜீப் வரவேற்புரையாற்றினார். மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது.Mcom., அவர்களும், திராவிட விடுதலைக் கழகத்தின் பரப்புரைச் செயலாளர் #பால்_பிரபாகரன் அவர்களும், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நாடாளுமன்ற தொகுதி செயலாளர் #அகமது_இக்பால் அவர்களும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் #அழகு_முத்துப்பாண்டியன் அவர்களும், மஜகவின் நெல்லை மேற்கு மாவட்ட செயலாளர் #மீரான் அவர்களும், நெல்லை கிழக்கு மாவட்ட செயலாளர் #கலீல்_ரஹ்மான் ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினர். இறுதியாக ஆத்தூர் நகர் செயலாளர் அன்வர் நன்றி கூறினார். தகவல்
கொல்லப்பட்ட மீனவரின் குடும்பத்திற்கு மஜக பொருளாளர் நேரில் ஆறுதல்!
இராமநாதபுரம்.மார்ச்.11., இலங்கை கடற்படையினால் படுகொலை செய்யபட்ட இராமநாதபுரம் தங்கச்சிமடத்தை சார்ந்த சகோதரர் Tk.பிரிட்ஜோ அவர்களின் இறப்பிற்கு ஆறுதல் கூருவதற்க்காக மஜக மாநிலபொருளாளர் எஸ்.எஸ். ஹாருன்ரசீத் M.com, அவர்கள் இராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடம் வருகை புரிந்தார். சகோதரின் இழப்பிற்கு ஆறுதல் கூறி மத்தியஅரசுக்கும் இலங்கை அரசிற்கும் எதிராக மஜக சார்பில் அவர்களின் கண்டனத்தை பதிவு செய்தார்கள். பிறகு பத்திரிக்கையாளர் சந்திப்பில் கலந்து கொண்டுகருத்தை தெரிவித்தார்கள். உடன் மஜக இராமநாதபுரம் மாவட்டம் மரைக்காயர் பட்டினம் மற்றும் இளையான்குடி நகரம் நிர்வாகிகள் உட்பட100க்கும் அதிகமானோர் பங்கு கொண்டனர்... தகவல்: தகவல் தொழில்நுட்ப அணி. மனிதநேய ஜனநாயக கட்சி, #MJK_IT_WING இராமநாதபுரம் மாவட்டம். 11.03.2017
சர்வதேச விசாரனையை விரைவுபடுத்து கைய்யெழுத்து இயக்கம் மஜக பங்கேற்பு!
இலங்கையில் நடந்த இனப் படுகொலைக்கான சர்வதேச விசாரணையை தாமதிக்காமல் நடத்தப்பட வேண்டும் என முத்துக்குமார் வீரவணக்க நிகழ்வு குழு சார்பில் கையெழுத்து இயக்கம் 11.3.2017 காலை சரியாக 9.00 மணிக்கு சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் நடைபெற்றது. இதில் நடிகர் சத்யராஜ் அவர்கள் கலந்துகொண்டு துவக்கி வைத்தார். மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் மாநில செயலாளர் அ.சாதிக் பாஷா மற்றும் வட சென்னை மாவட்ட செயலாளர் அஜீம், மாவட்ட பொருளாளர் தாஹா மற்றும் பூவிருந்தவல்லி நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர். தகவல் தொழில்நுட்ப அணி மனிதநேய ஜனநாயக கட்சி #MJK_IT_WING வட சென்னை மாவட்டம்
மஜக தூத்துக்குடி மாவட்டம் நடத்தும் “தாமிரபரணியைகாக்க” மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்…
தூத்துக்குடி.மார்ச்.09.,மனித நேய ஜனநாயக கட்சியின் சார்பில் தூத்துக்குடி மாவட்டம் நடத்தும் தென்மாவட்ட மக்களின் நீராதாரமாம் தாமிரபரணியை காக்க மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. எதிர் வரும் 12-03-2017 அன்று மாலை 4மணியளவில் நடைபெறும் இந்த கண்டன ஆர்ப்பாட்டம் கீழ் வரும் கோரிக்கைகள் முன்வைக்கப்படும். 1) பன்னாட்டு குளிர்பான ஆலைகள் தாமிரபரணியில் நீர் எடுக்க நிரந்தர தடை செய்ய வேண்டும். 2) தாமிரபரணி யில் தூத்துக்குடி மாவட்டத்தில் தடுப்பணை கட்டவேண்டும். 3) DCW, ஸ்டெர்லைட் போன்ற ஆலைகளுக்கு நீர் வழங்குவதை தடுத்து நிறுத்த வேண்டும். தலைமை: A.ஜாஹிர் உசேன் (மஜக மாவட்டச் செயலாளர்) கண்டன உரை : S.S.ஹாருன் ரசீது M.com., (மஜக மாநில பொருளாலர்) மற்றும் தோழமை கட்சியினர், சமூக ஆர்வலர்கள், விவசாய சங்க பிரதிநிதிகள் போன்ற முக்கிய பிரதிநிதிகள் உரையாற்றுகிறார்கள் அணைத்து சமுதாய மக்களே, இளைஞர்களே, மாணவர்களே, விவசாயிகளே தாமிரபரணியில் நமது உரிமையை நிலைநாட்ட அணிதிரள்வோம் வாரீர்... வாரீர்.... அழைக்கிறது மஜக தூத்துக்குடி மாவட்டம். தகவல் :மஜக தகவல் தொழில்நுட்ப அணி. #MJK_IT_WING தூத்துக்குடி மாவட்டம். 09.03.2017