You are here

மஜக தூத்துக்குடி மாவட்டம் நடத்தும் “தாமிரபரணியைகாக்க” மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்…

image

தூத்துக்குடி.மார்ச்.09.,மனித நேய ஜனநாயக கட்சியின் சார்பில் தூத்துக்குடி மாவட்டம் நடத்தும் தென்மாவட்ட மக்களின் நீராதாரமாம் தாமிரபரணியை காக்க மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

எதிர் வரும் 12-03-2017 அன்று மாலை 4மணியளவில் நடைபெறும் இந்த கண்டன ஆர்ப்பாட்டம் கீழ் வரும் கோரிக்கைகள் முன்வைக்கப்படும்.

1) பன்னாட்டு குளிர்பான ஆலைகள் தாமிரபரணியில் நீர் எடுக்க நிரந்தர தடை செய்ய வேண்டும்.

2) தாமிரபரணி யில் தூத்துக்குடி மாவட்டத்தில் தடுப்பணை கட்டவேண்டும்.

3) DCW, ஸ்டெர்லைட் போன்ற ஆலைகளுக்கு நீர் வழங்குவதை தடுத்து நிறுத்த வேண்டும்.

தலைமை: A.ஜாஹிர் உசேன் (மஜக மாவட்டச் செயலாளர்)

கண்டன உரை :  S.S.ஹாருன் ரசீது M.com., (மஜக மாநில பொருளாலர்)

மற்றும்  தோழமை கட்சியினர், சமூக ஆர்வலர்கள், விவசாய சங்க பிரதிநிதிகள் போன்ற முக்கிய பிரதிநிதிகள் உரையாற்றுகிறார்கள்

அணைத்து சமுதாய மக்களே, இளைஞர்களே, மாணவர்களே, விவசாயிகளே தாமிரபரணியில் நமது உரிமையை நிலைநாட்ட அணிதிரள்வோம் வாரீர்… வாரீர்….

அழைக்கிறது மஜக தூத்துக்குடி மாவட்டம்.

தகவல் :மஜக தகவல் தொழில்நுட்ப அணி.
#MJK_IT_WING
தூத்துக்குடி மாவட்டம்.
09.03.2017

Top