திருவள்ளூர்.மார்ச்.09., திருவள்ளூர் பெரும்பாக்கம் பகுதியில் அமைந்திருக்கும் ‘அஹ்மத் ஷா படேமகான்’ பள்ளிவாசலுக்கு சொந்தமான தமிழ்நாடு வக்ஃப் வாரிய கட்டுப்பாட்டில் இருக்கும் சர்வே எண் 229/3-ல் அமையப்பெற்ற 100 கோடி மதிப்புடைய 2.44 ஏக்கர் நிலம், 3 மாதங்களுக்கு முன்பு தனியார் நிறுவனத்துக்கு சட்டவிரோதமாக விற்கப்பட்டுள்ளது.
இப்பிரச்சனையில் மஜக தலையிட ஜமாத் நிர்வாகிகள் வேண்டுகோள் வைத்தனர். இதனடிப்படையில் இன்று (9.3.2017) மஜக தலைமையகத்திற்கு வருகை தந்தனர்.
இது சம்மந்தமாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூண் ரசீது அவர்கள் ஜமாத் நிர்வாகிகளோடு தலைமைச் செயலகம் சென்று வக்ஃப் அமைச்சர் டாக்டர் நிலோஃபர் கபீல் அவர்களை சந்தித்து முறையிட்டார்.
உடனடியாக அமைச்சர் அவர்கள் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரை தொடர்புகொண்டு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினார்கள். சம்மந்தப்பட்ட அந்த இடத்தில் கட்டிடம் கட்டும் பணி எதுவும் நடைபெற்றால் உடனடியாக தடுத்து நிறுத்தவும் கூறினார்.
மேற்கொண்டு தொடர்ந்து இந்த விசயத்தில் கவணம் செலுத்தி வக்ஃப் சொத்தை மீட்க நவடிக்கை மேற்கொள்வதாகவும் மஜக பொருளாளரிடம் வாக்குறுதியளித்தார்.
இச்சந்திப்பின்போது மாநில செயலாளர் என்.ஏ.தைமிய்யா, மாநில துணை செயலாளர் புதுமடம் அனீஸ், திருவள்ளூர் மாவட்ட செயலாளர் அக்பர் உசேன், வேலூர் மே.மாவட்ட செயலாளர் வாசீம் அக்ரம், திருவள்ளூர் மேற்கு மாவட்ட பொருளாளர் இஸ்மாயில், பூந்தமல்லி நகர செயலாளர் யாசர் அஹமது, ஆவடி நகர செயலாளர் சாகுல் ஹமீது, நகர பொருளாளர் நாகூர் மீரான் உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
தகவல் தொழில்நுட்ப அணி
மனிதநேய ஜனநாயக கட்சி
#MJK_IT_WING
திருவள்ளூர் மேற்கு மாவட்டம்