You are here

உருதுமொழி தேர்வுத்தாள் விவகாரம் ஜமாத் நிர்வாகி மஜகவிற்கு நன்றி!

image

சென்னை இராயப்பேட்டை தஸ்தகீர் சாஹிப் ஒலியுல்லா பள்ளிவாசலின் செயலாளரும், உருது மொழி தன்னார்வளருமான M.அஸ்வாக் ரஹ்மான் அவர்கள் இன்று மஜக பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூண் ரஷீது அவர்களை சந்தித்து

பொதுத்தேர்வில் உருது பாடத்திட்டத்திற்கான வினாத்தாள் வெளியிட முறையான நடவடிக்கை எடுத்த மனிதநேய ஜனநாயக கட்சிக்கு நன்றி தெரிவித்தார்.

இச்சந்திப்பில் மாநில செயலாளர் என்.ஏ.தைமிய்யா, மத்திய சென்னை மாவட்ட செயலாளர் ஹாலித் ஆகியோர் உடன் இருந்தனர்.

10 ம் வகுப்பு பொதுத் தேர்வில் உருது பாடத்திட்டத்தில் உருது மொழியில் வினாத்தாள் வழங்கப்பட மாட்டாது என்று பள்ளி கல்வி துறை மறுத்திருந்தன.

இந்நிலையில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அவர்களையும் மற்றும் அதிகாரிகளையும் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில செயலாளர் N.A.தையமிய்யா தலைமையில் மஜக மாநில துணை செயலாளர் பஷீர் அஹமது, தென் சென்னை மாவட்ட செயலாளர் கபீர் மற்றும் மாணவர் இந்தியா மாநில செயலாளர்  அஸார் தீன் உள்பட மாநில நிர்வாகிகள் சந்தித்து உருது மொழியில் வினா தாள்கள் வழங்கப்பட
வேண்டும் என்று வலியுறுத்தினர்.

உடனே அதிகாரிகள் அந்தந்த மாவட்ட அதிகாரிகளுடன் தொடர்புகொண்டு பேசினர். அதன் விளைவாக தமிழகத்தில் கீழ் வரும் பள்ளிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது குறிப்பிடதக்கது.

தகவல் தொழில்நுட்ப அணி
மனிதநேய ஜனநாயக கட்சி
#MJK_IT_WING
தலைமையகம்
09-03-2017

Top