சென்னை.ஜன.09., அரியலூர் மாணவி அனிதா கடந்த ஆண்டு 12-ம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றாலும் மத்திய அரசு கொண்டு வந்த நீட் தேர்வால் மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்கவில்லை. இதனால் மனம் உடைந்த சகோதரி அனிதா (தற்) கொலை செய்து கொண்டார். சகோதரி அனிதாவின் படுகொலையை கண்டித்து கடந்த ( 03.09.2017 ) அன்று சென்னையில் மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் போராட்டம் நடத்த மாநில பொருளாளர் எஸ்.எஸ். ஹாரூன் ரசீது தலைமையில் மெரினாவை நோக்கி பேரணியாக சென்றபோது காவல் துறையினர் தடுத்து மஜகவினரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது மற்றும் தகவல் தொழில்நுட்ப அணி துணைச் செயலாளர் சிக்கந்தர் பாட்சா , மத்திய சென்னை மாவட்ட துணைச் செயலாளர் ரவுஃ ரஹிம் , திருவல்லிக்கேணி பகுதி முன்னாள் செயலாளர் பஷீர் அஹமது, ஜாவித் ஜாபர் மற்றும் லத்திப் ஆகியோர் மீது வழக்கு தொடுக்கப்பட்டது. இன்று (09.01.2018) எழும்பூர் நீதிமன்றத்தில் இவ்வழக்கின் மீதான விசாரணை நடைபெற்றது. இந்த வழக்கில் சிறப்பாக வாதாடிய வழக்கறிஞர் சதாத் அவர்கள் போராட்டத்தின் நோக்கத்தையும், சமுதாய அக்கறையுடன் நடைபெற்றதாகவும்
மஜக போராட்டங்கள்
மஜக போராட்டங்கள்
முகவையில் முத்தலாக் விவகாரம்…! திரண்டது மக்கள் வெள்ளம்..!!
முகவை.ஜன.06., மத்திய அரசு கொண்டுவரும் ஜனநாயக விரோத முத்தலாக் சட்ட மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி #ஜமாத்துல்_உலாமா சார்பில் நேற்று தமிழகமெங்கும் கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் இராமநாதபுரத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மனிதநேய ஜனநாயக கட்சி (மஜக) மாவட்ட செயலாளர் முகவை பீர் முகம்மது அவர்கள் கலந்துகொண்டு கண்டன உரை ஆற்றினார். இக்கூட்டத்தில் பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் இயக்கங்களை சேர்ந்த தலைவர்களும், மார்க்க அறிஞர்களும் உரையாற்றினர். இதில் பல்லாயிரகணக்கானோர் திரண்டனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #மஜக_இராமநாதபுரம்_கிழக்கு_மாவட்டம். 05.01.2018
திருவாரூரில் திரண்ட சமுதாய எழுச்சி..!
திருவாரூர்.ஜன.5., திருவாரூர் மாவட்டம் தெற்கு வீதியில் நேற்று (05-01-2018) வெள்ளிக்கிழமை மாலை 5-00 மணியளவில் மத்திய அரசு கொண்டுவரும் ஜனநாயக விரோத இஸ்லாமிய பெண்கள் முத்தலாக் சட்ட மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி ஜமாஅத்துல் உலாம சபை மற்றும் அனைத்து ஜமாஅத் ஒருங்கினைந்த கூட்டமைப்பு சார்பாக கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கண்டன பொதுக்கூட்டத்தில் அல்ஹாஜ் TMA முஹம்மது இல்யாஸ் உலவி அவர்கள் தலைமைவகிக்க, ஜமால் ஷேக் அவர்கள் வரவேற்புரையாற்றினார். இதில் மனிதநேய ஜனநாயக கட்சி (மஜக) தலைமை நிர்வாககுழு உறுப்பினர் AS.அலாவுதீன், பழ.கருப்பையா போன்ற அரசியல் கட்சிகள் மற்றும் இயக்கங்களை சார்ந்த பல தலைவர்கள் மற்றும் மெளலவி S.பக்ருதீன் பைஜில் போன்ற மார்க்க அறிஞர்கள் பங்கெடுத்து கண்டன உரை நிகழ்த்தினார்கள். இந் நிகழ்ச்சியில் 8 ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு மஜக தலைமை நிர்வாக குழு உறுப்பினர் AS.அலாவுதீன் அவர்கள் சந்திக்கும் முதல் மேடை எனபது குறிப்பிட தக்கது. இதில் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். இறுதியாக ஜலாலுதீன் அவர்கள் நன்றி உரை நிகழ்த்தினார். தகவல்; #மஜக_தகவல்_ தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #மஜக_திருவாரூர்_மாவட்டம். 06.01.2018
சேலத்தில் மக்கள் எழுச்சி..!
சேலம்.ஜன.06., மத்திய அரசு கொண்டுவரும் ஜனநாயக விரோத முத்தலாக் சட்ட மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி #ஜமாத்துல்_உலாமா சார்பில் இன்றும் தமிழகமெங்கும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சேலத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மனிதநேய ஜனநாயக கட்சி (மஜக) பொதுச்செயலாளர் #M_தமிமுன்_அன்சாரி_MLA அவர்கள் கண்டன பேருரை ஆற்றினார். இந்நிகழ்வுக்கு சேலம் மாவட்ட ஜமாத்துல் உலாமா தலைவர் அல்ஹாஜ். #TKM_அப்துஸ்ஸலாம்_மிஸ்பாஹி அவர்கள் தலைமை வகித்தார். இதில் பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் இயக்கங்களை சேர்ந்த தலைவர்களும், மார்க்க அறிஞர்களும் உரையாற்றினர். இதில் பல்லாயிரகணக்கானோர் திரண்டனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #மஜக_சேலம்_மாவட்டம். 06.01.2018
பட்டுக்கோட்டையில் சமுதாய எழுச்சி..!
பட்டுக்கோட்டை.ஜன.06., மத்திய அரசு கொண்டுவரும் ஜனநாயக விரோத முத்தலாக் சட்ட மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி #ஜமாத்துல்_உலாமா சார்பில் நேற்று தமிழகமெங்கும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில் பட்டுக்கோட்டை வட்டார ஜமாத்துல் உலாமா சபை சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மனிதநேய ஜனநாயக கட்சி (மஜக) சார்பில் மாநில துணைச் செயலாளர் #திருமங்கலம் #J_ஷமீம்_அஹமது அவர்கள் கலந்து கொண்டு கண்டண உரை ஆற்றினார். இந்நிகழ்வுக்கு பட்டுக்கோட்டை வட்டார ஜமாத்துல் உலாமா தலைவர் #அய்யூப்கான்_ஹஜ்ரத் அவர்கள் தலைமை வகித்தார். இதில் மஜக மாநில துணைபொது செயலாலர் #மதுக்கூர் #K_ராவுத்தர்ஷா மாவட்ட பொறுப்பு குழு தலைவர். #பேராவூரணி. எஸ்.எம்.எ.சலாம் பொறுப்பு குழு உறுப்பினர்கள் அதிரை.பைசல், அதிரை சாகுல், பட்டுக்கோட்டை குத்து ப்தீன் மற்றும் நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் பல்லாயிரகணக்கானோர் பங்கேற்றனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #மஜக_தஞ்சை_தெற்கு_மாவட்டம். 05.01.2018