சென்னை.ஜன.09., அரியலூர் மாணவி அனிதா கடந்த ஆண்டு 12-ம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றாலும் மத்திய அரசு கொண்டு வந்த நீட் தேர்வால் மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்கவில்லை. இதனால் மனம் உடைந்த சகோதரி அனிதா (தற்) கொலை செய்து கொண்டார்.
சகோதரி அனிதாவின் படுகொலையை கண்டித்து
கடந்த ( 03.09.2017 ) அன்று
சென்னையில் மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் போராட்டம் நடத்த மாநில பொருளாளர் எஸ்.எஸ். ஹாரூன் ரசீது தலைமையில் மெரினாவை நோக்கி பேரணியாக சென்றபோது காவல் துறையினர் தடுத்து மஜகவினரை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது மற்றும் தகவல் தொழில்நுட்ப அணி துணைச் செயலாளர் சிக்கந்தர் பாட்சா , மத்திய சென்னை மாவட்ட துணைச் செயலாளர் ரவுஃ ரஹிம் , திருவல்லிக்கேணி பகுதி முன்னாள் செயலாளர் பஷீர் அஹமது, ஜாவித் ஜாபர் மற்றும் லத்திப் ஆகியோர் மீது வழக்கு தொடுக்கப்பட்டது.
இன்று (09.01.2018) எழும்பூர் நீதிமன்றத்தில் இவ்வழக்கின் மீதான விசாரணை நடைபெற்றது. இந்த வழக்கில் சிறப்பாக வாதாடிய வழக்கறிஞர் சதாத் அவர்கள் போராட்டத்தின் நோக்கத்தையும், சமுதாய அக்கறையுடன் நடைபெற்றதாகவும் விளக்கம் அளித்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அவர்கள் மஜக நிர்வாகிகள் அனைவரும் விடுதலை செய்யப்படுவதாக தீர்ப்பு வழங்கினார்.
தகவல்
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#மத்திய_சென்னை_கிழக்கு_மாவட்டம்