செப்.30,
மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி, அக்.02 வரை ஒரு வார கால போராட்டத்தை மஜக அறிவித்து நடத்தி வருகிறது.
மாவட்ட, ஒன்றிய, தொகுதி வாரியாக வீரியத்தோடு போராட்டம் நடைபெற, மக்கள் ஆதரவும் பெருகி வருகிறது.
இன்று நாகை தொகுதி திருமருகலில் மாவட்ட துணைச் செயலாளர் முன்சி யூசுப்தீன் தலைமையில் 500 க்கும் அதிகமானோர் பங்கேற்று, பச்சை முண்டாசு கட்டி ஆர்ப்பரித்தனர்.
இந்த சட்டங்களை ஏன் எதிர்க்கிறோம்? என்பதை பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் விளக்கி பேசினார்.
மாநில துணைச் செயலாளர் நாகை முபாரக் கோசங்களை எழுப்பினார்.
இதில் விவசாய சங்க பிரநிதிகள் R.K.பாபுஜி, K.S மதியழகன், G.S ஸ்டாலின் பாபு, ஊராட்சி மன்றத் தலைவர் அன்பழகன், திருவேங்க ரவி, ருக்மணி ராஜா ஆகியோர் உரை நிகழ்த்தினர்.
மாவட்ட செயலாளர் திட்டச்சேரி ரியாஸ் போராட்டத்தை ஒருங்கிணைத்தார்.
இதில் மாவட்ட பொருளாளர் சதக்கத்துல்லா, மாவட்ட துணை செயலாளர் கண்ணுவாப்பா, மாவட்ட அணி நிர்வாகிகள் தெத்தி ஆரிப், ரெக்ஸ் சுல்தான், நாகூர் ஜாகிர், ஜாஸிம், ஏனங்குடி நிசாத், முபின், நிசார் , பேபிசாப் பகுருதீன், முத்து முகம்மது, குவைத் மண்டல செயலாளர் பாசில்கான், ஒன்றிய செயலாளர்கள் திருமருகல் அன்வர்தீன், நாகை ஜலால், மஞ்சை சதாம், ஏனங்குடி பாவா, ஆசிப், பிரவின் நகர செயலாளர்கள் நாகை அஜிஸ் ரஹ்மான், நாகூர் அபுசாலிஹ் சாகிப், திட்டச்சேரி இப்ராஹிம் மற்றும் ஊராட்சி கிளை செயலாளர்கள், உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
MJTS மாவட்ட துணை செயலாளர் ஆதினங்குடி சாகுல் ஹமீது நன்றி கூறினார்.
தகவல் ;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி,
#MJKitTWING
#நாகை_மாவட்டம்.