திருப்பூர்.செப்.03., அரியலூர் சகோதரி அனிதா மரணம் தொடர்பாக அவசர ஆலோசனை கூட்டம் திருப்பூர் மாவட்ட மனிதநேய ஜனநாயக கட்சியின் அலுவலகத்தில் நடைபெற்றது. மஜக மாவட்ட செயலாளர் ஹைதர் அலி அவர்கள் தலைமையில் நடந்த இந்தகூட்டத்தில் மாவட்ட பொருளாளர் முஸ்தாக் அகமது முன்னிலை வகித்தார். கூட்டத்தில் மத்திய அரசின் சர்வாதிகார போக்கால் மருத்துவராக வேண்டிய ஓர் அப்பாவி மாணவி தன் உயிரை மாய்த்து கொண்டது குறித்து வருத்தத்துடன் விவாதிக்கப்பட்டது. கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு பேசிய மாணவர் இந்தியா மாவட்ட செயலாளர் நவ்பில் ரிஜ்வான் அவர்கள். இந்த மாணவியின் உயிரிழப்புக்கு காரணமான படுபாதக நீட் தேர்வை இரத்து செய்யக்கோரியும், தமிழகத்தில் பெரும்பாலான கல்வியாளர்களும் மாணவர்களும் கடும் எதிர்ப்பை தெரிவித்த நிலையிலும் தனது சர்வாதிகாரத்தை திணிக்கும் மத்திய அரசை கண்டித்தும், அதன் செவிப்பறைகளை கிழிக்கும் விதமாக, திருப்பூர் மாவட்டம் சார்பாக வருகின்ற செவ்வாய்க்கிழமை 05_09_2017 அன்று திருப்பூரில் போராட்டம் செய்வது என முடிவுசெய்யப்பட்டது. மாணவ, மாணவிகளை ஒருங்கிணைத்து இறுதியாக "சகோதரி மாணவி அனிதாவின் மரணத்திற்கு நியாயம் கேட்டு" இரயில் மறியல் போராட்டம் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் மஜக மாநில செயற்குழு உறுப்பினர் இக்பால் அவர்கள், தகவல் தொழில்நுட்ப அணி மாநில
மாணவர் இந்தியா
மாணவர் இந்தியா
அனிதாவின் படுகொலையை கண்டித்து சென்னையில் மஜக சாலை மறியல் – ஏராளமானோர் கைது..!
சென்னை.செப்.03., அரியலூர், குழுமூர் பகுதியை சேர்ந்த சகோதரி அனிதா 12ம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றும் "நீட்" தேர்வால் மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்காததால் நேற்று முன்தினம் (தற்)கொலை செய்துக் கொண்டார். மத்திய பாசிச மோடி அரசு கொண்டு வந்த நீட்டை கண்டித்தும், அனிதாவின் படுகொலையை கண்டித்தும் ராயப்பேட்டை ஐஸ்ஹவுஸ் பகுதியில் மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் இன்று மாலை சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. சாலை மறியலால் அரை மணி நேரம் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. சாலை மறியலில் ஏராளமானோர் கைது செய்யப்படனர். மஜக மாநிலப் பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரஷீது, மாநிலச் செயலாளர்களான என்.ஏ.தைமிய்யா, சாதிக் பாட்சா , மாநிலத் துணைச் செயலாளர் சமீம், மாணவர் இந்தியா மாநில செயலாளர் அசாருதீன், தகவல் தொழில்நுட்ப அணி மாநில துணைச் செயலாளர் சிக்கந்தர், தலைமை செயற்குழு உறுப்பினர் அபுதாஹிர் மற்றும், மாவட்ட, பகுதி, கிளை நிர்வாகிகள், மாணவர்கள், இளைஞர்கள் உட்பட மனிதநேய சொந்தங்கள் உணர்ச்சிப்பூர்வமாக பங்கேற்று கைதாகினர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING சென்னை 03.09.17
திருச்சி மாவட்டம் மாணவர் இந்தியா சார்பில் மாணவி அனிதாவுக்கு ஆதரவா மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கண்டன கூட்டம்..
திருச்சி.செப்.03., மாணவர் அமைப்பான மாணவர் இந்தியா சார்பில் திருச்சி 49-வது வார்டு காயிதேமில்லத் தொடக்க பள்ளி அருகில் நீட்தேர்வில் இருந்து நிரந்தர விலக்கு கோரியும், நீட்டுக்கு எதிராக குரல் கொடுத்து உயிர் நீத்த மாணவி அனிதாவுக்கு ஆதரவாகவும் மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும் கண்டன கூட்டம் நடைப்பெற்றது. இக்கூட்டம் மாணவர் இந்தியா திருச்சி மாவட்ட செயலாளர் புரோஸ்கான் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மஜக திருச்சி மாவட்ட செயலாளர் இப்ராம்ஷா, மாணவர் இந்தியா மாவட்ட அமைப்பாளர் மைதீன், தமிழக வாழ்வுரிமை கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் பெரியார் சரவணன் மற்றும் விடுதலை சிறுத்தை மாநில துணைச் செயலாளர் பிரபாகரன் ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினார்கள். நிகழ்ச்சியில் மாவட்ட துணை செயலாளர்கள் ரபீக், ஜம்.ஜம் பஷீர், ஷேக்தாவூத், இளைஞர் அணி சதாம், தகவல் தொழில்நுட்ப அணி சேட் ஆகியோர், கிளை நிர்வாகிகள் பக்கீர் மொய்தீன், அப்துல் காதர், அபுபக்கர் சித்திக், அமீர், ரியாஸ், ரஹ்மத்துல்லா மற்றும் மாணவர்கள் பொதுமக்களும் திரளாக கலந்து கொண்டு மத்திய, மாநில அரசுக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பினர். தகவல்: மாணவர் இந்தியா ஊடக பிரிவு திருச்சி மாநகர் மாவட்டம். 03.09.2017.
மாணவர் அமைப்பினர் கூட்டாக சேர்ந்து பத்திரிக்கையாளர் சந்திப்பு…!
சென்னை.செப்.03., இன்று சென்னை பத்திக்கையாளர் மன்றத்தில் மாணவர் இந்தியா அமைப்புடன் சேர்ந்து பல அமைப்புகள் இன்று மாணவி அனிதாவின் தற்கொலைக்கு நீதி கேட்டும் தமிழகத்தில் நீட் தேர்வை முழுமையாக அகற்ற வலியுறுத்தியும் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது. இச்சந்திப்பில் பேசிய பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் சுந்தர்ராஜன் அவர்கள் அனைவரும் கூட்டாக சேர்ந்து எடுத்த முடிவாக பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் அனைவரும் ஒருநாள் வகுப்பு புறக்கணிப்பை செய்து மாணவி அனிதாவின் கனவான "நீட்''டில்லா தமிழகம் உருவாக ஆதரவழிப்போம் என்றும், அனிதா ஆக்ட் என்ற சட்டம் ஒன்றை உருவாக்க வேண்டும் என்றும் பேட்டியளித்தார். இச்சந்திப்பில் மாணவர் இந்தியா சார்பில் மாநில பொருளாளர் ஜாவித் ஜாஃபர், மாநில துணை செயலாளர் பசீர் மற்றும் ஊடக பிரிவு கார்த்திக், கோட்ஷோ (Cotso) அமைப்பு, டாக்டர்.எழிலன் ஆகியோர் இருந்தனர். தகவல்: மாணவர் இந்தியா ஊடகபிரிவு சென்னை. 03.09.17
மாணவி அனிதாவின் இறுதி சடங்கில் மாணவர் இந்தியா..!
கடலூர்.செப்.03., நீட் தேர்வால் தன்னுடைய மருத்துவ கனவு தகர்ந்த துக்கத்தில் தற்கொலை செய்துக் கொண்ட அனிதாவின் இறுதி சடங்கில் நேற்று கடலூர் வடக்கு மாணவர் இந்தியா மாவட்ட செயலாளர் ரியாஸ் ரகுமான் தலைமையில் கடலூர் மாவட்ட நிர்வாகிகள் கலந்துக் கொண்டு அஞ்சலி செலுத்தினர். உடன் மாஜக மாவட்ட இ.அணி துணை செயளாலர் A.மன்சூர், நெய்வேலி நகர இ.அணி செயளாலர் அசார் ஆகியோர் இருந்தனர். அனிதாவின் இழப்பால் துக்கத்தில் ஆழ்ந்துள்ள அவர்களது குடும்பத்திற்கு அனிதாவின் இறப்புக்கு நீதி கிடைக்கும் வரை மாணவர் இந்தியா உடனிருந்து போராடும் என்று அவர்களது குடும்பத்திற்கு ஆறுதல் கூறினர். தகவல்; #மாணவர்_இந்தியா #ஊடகபிரிவு 02.09.17