நாகர்கோவில் பத்திரிக்கையாளர் சந்திப்பு…! பேசக்கூடாத வார்த்தைகள் என்ற அறிவிப்பு ஜனநாயகத்தின் குரல் வளையே நெறிக்க கூடியது..!! மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி பேட்டி..!!!

ஜூலை.16,

இன்று கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கோட்டாரில் மனிதநேய ஜனநாயக கட்சி (மஜக) வின் மாவட்ட அலுவலகத்தை பொதுச்செயலாளர் திறந்து வைத்தார்.

இதை முன்னிட்டு நாகர்கோவில் முழுவதும் இரண்டு கிலோமீட்டர் சுற்றளவுக்கு மஜக கொடிகள் கட்டப்பட்டிருந்தது. மாவட்ட முழுவதும் சுவரொட்டிகளும் ஓட்டப்பட்டிருந்தது.

அலுவலக திறப்பு விழாவுக்கு பின்பு பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள் பத்திரிக்கை யாளர்களை சந்தித்தார்.

அப்பொழுது அவர் கூறியதாவது…

ஜூலை 18 அன்று நாடாளுமன்றம் கூட உள்ள நிலையில், நாடாளுமன்றத்தில் பேசக்கூடாத வார்த்தைகள் என்று ஒரு பட்டியலை நாடாளுமன்ற செயலகம் வெளியிட்டுள்ளது.

ஊழல், சர்வாதிகாரம், வெட்கக்கேடு, பாலியல், துரோகம் செய்தார், நாடகம், திறமையற்றவர், முட்டாள்தனம் போன்ற வார்த்தைகளை பயன்படுத்தக் கூடாது என்று கூறியுள்ளனர்.

இது நாடாளுமன்ற உறுப்பினர்களின் குரல்வளையை நெரிக்கக் கூடியது, ஜனநாயக விரோதமானது.

அரசியலே இந்த வார்த்தைகளை சுற்றிதான் நிகழ்கிறது.

இந்த வார்த்தைகளை பேசக்கூடாது என்றால் வேறு எந்த வார்த்தைகளில் எதை பேசுவது?

அப்படியெனில், ஆளுங்கட்சியை புகழ்ந்து மட்டும் தான் பேச முடியும்.

இந்த வார்த்தைகளை பயன்படுத்தக்கூடாது என்றால் இதற்கு மாற்று வார்த்தைகள் என்ன என்பதை கூற வேண்டும்.

அதன் பிறகு மற்ற இலங்கை பிரச்சனை குறித்தும் பேசினார்.

இலங்கை மக்கள் நடத்திய புரட்சி வெற்றி பெற்றிருக்கிறது. அது ஆசிய-ஆப்பிரிக்க நாடுகளில் வெறுப்பு அரசியலை, பிரிவினை அரசியலை தூண்டுபவர்களுக்கும், வளர்ச்சி அரசியலை மறைத்து திசை திருப்புவர்களுக்கும் எச்சரிக்கை விடுத்திருக்கிறது. எனவே இலங்கை மக்களுக்கு எமது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம் என்றார்.

பிறகு தென் மாவட்டத்தில் கனிம வள கொள்ளை தொடர்பாக பத்திரிக்கையாளர்கள் கேள்வி எழுப்பினர்.

இது குறித்து தமிழக முதல்வர் கவனம் எடுத்து கனிமவளக் கொள்ளையை தடுக்க வேண்டும் என்றார்.

நிகழ்வுக்கு பின் மாநில துணைச் செயலாளர் காயல் சாகுல் அவர்கள் அலுவலக மாடியில் கட்சி கொடியை ஏற்றி வைத்தார்.

இந்நிகழ்வுகளில் மஜக துணைப் பொதுச்செயலாளர் நாச்சிக்குளம். தாஜ்தீன், மாநில துணைச் செயலாளர்கள் பேராவூரணி சலாம், கோட்டை ஹாரிஸ் உள்ளிட்ட மாநில நிர்வாகிகள் பங்கேற்றனர்.

மாவட்ட செயலாளர் பிஜ்ருல் ஹபிஸ், மாவட்ட பொருளாளர் சாதிக் அலி, தலைமை செயற்குழு உறுப்பினர் ரூபிகர் அலி, மாவட்ட துணை செயலாளர்கள் முஜிபுர் ரகுமான், அமீர்கான் உள்ளிட்ட மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் உடனிருந்தனர்.

தகவல்;

#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#கன்னியாகுமரி_மாவட்டம்
16.07.2022