பெருநாள் நல்லிணக்க சந்திப்பு..! கேள்வி-பதில், விருது வழங்குதல், கலந்துரையாடல், சான்றோர் மரியாதை என உற்சாகம்! குமரி மாவட்ட மஜகவின் முன்மாதிரி நிகழ்ச்சி..!!!

ஜூலை.16,

கன்னியாகுமரி மாவட்ட மனிதநேய ஜனநாயக கட்சி (மஜக) சார்பில், நல்லிணக்கத்தை வலிமைப்படுத்தும் நோக்கில் தியாகத் திருநாளை (பக்ரீத் பண்டிகை) முன்னிட்டு சர்வ மத நல்லிணக்க சந்திப்பு நிகழ்ச்சி நேற்று மாலை 6.30 மணியளவில் கோட்டார் பாவா காசிம் அரங்கத்தில் நடைப்பெற்றது.

இதில் இந்து – முஸ்லீம் – கிறிஸ்துவ சமூக பிரமுகர்கள் வருகை தந்து ஒன்று கூடி மகிழ்ந்தனர்.

இதில் பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள் வாழ்த்துரை வழங்கிவிட்டு, வந்தவர்கள் தாங்கள் விரும்பும் கேள்விகளை கேட்கலாம் என்றார்.

நல்லிணக்கம், சமூகநீதி, இன்றைய அரசியல், சகிப்புத்தன்மை, ஒற்றுமை ஆகியவை தொடர்பான கேள்விகளுக்கு, பொதுச் செயலாளர் அவர்கள் நல்ல விளக்கங்களை கூறி பார்வையாளர்களை தெளிவுப்படுத்தினார்.

அவரது பதில்களை அனைவரும் கைதட்டி வரவேற்றனர்.

நாகர்கோவில் மாநகர மேயர் திரு. மகேஷ் அவர்கள் வருகை தந்து சிறப்பான ஒரு வாழ்த்துரையையும் வழங்கினார்.

அவர் மஜகவின் சேவைகளையும், பொதுச் செயலாளரின் அரசியல் அணுகுமுறைகளையும் பாராட்டி பேசினார்.

அதுபோல் அருட்பணி காட்ஃப்ரே அவர்களும் நல்லிணக்கம் மிகுந்த வாழ்த்துரையை வழங்கினார்.

இதில் பல தரப்பினரும் பங்கேற்று தங்கள் கருத்துகளை உறி கலந்துரையாடியது நிகழ்வை ஜனரஞ்சகமாக வெளிப்படுத்தியது.

மேலும் கல்வி, மருத்துவம்,மொழி, பண்பாடு, அரசியல், சமூகம் என பல துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு விருதுகள் வழங்கி சிறப்பிக்கப்பட்டது.

நிறைவாக அனைவருக்கும் விருந்தோம்பலும் நடத்தப்பட்டது.

அடுத்து பொங்கல், கிருஸ்துமஸ், சுதந்திர தினம் ஆகியவற்றுக்கும் இது போல் நிகழ்வுகளை எடுக்கவும் உறுதியேற்கப்பட்டது.

இதில் கன்னியாகுமரி முஸ்லிம் ஜமாஅத் கூட்டமைப்பு தலைவர் ஹிமாம் பாதுஷா, தமிழக வாழ்வுரிமை கட்சியின் மாநில அமைப்பு துணை செயலாளர் குமரி.மணிமாறன், காயல் சமூக நீதி பேரவை செயலாளர் வழக்கறிஞர். அஹமத் சாஹிப் ஆகியோரும் வாழ்த்துரை வழங்கினர்.

இதில் மஜக துணைப் பொதுச்செயலாளர் நாச்சிக்குளம். தாஜ்தீன், மாநில துணைச் செயலாளர்கள் காயல் சாகுல், பேராவூரணி சலாம், கோட்டை ஹாரிஸ் உள்ளிட்ட மாநில நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சியை மாவட்ட செயலாளர் பிஜ்ருல் ஹபிஸ், மாவட்ட பொருளாளர் சாதிக் அலி, தலைமை செயற்குழு உறுப்பினர் ரூபிகர் அலி, மாவட்ட துணை செயலாளர்கள் முஜிபுர் ரகுமான், அமீர்கான் உள்ளிட்ட மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#மஜக_கன்னியாகுமரி_மாவட்டம்
15.07.22