ஜூலை’17.,
மொழிப்போர் தியாகியும், குமரி எல்லை காப்பு போராட்ட வீரருமான கொடிக்கால் ஷேக் அப்துல்லாவுக்கு மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கெளரவிக்கப்பட்டது.
நாகர்கோவில் – கோட்டாறில் மஜக சார்பில் தியாகத்திருநாள் நல்லிணக்க சந்திப்பு நடைப்பெற்றது.
அதில் இம்மாவட்டத்தில் கல்வி, மருத்துவம், மொழி, சமூகம், அரசியல் என இக் களங்களில் சேவையாற்றிய சாதனையாளர்கள் 30 பேர் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டது.
அதில் ‘வாழ்நாள் சாதனையாளர் விருது’ தியாகி.கொடிக்கால் ஷேக் அப்துல்லாவுக்கு அறிவிக்கப்பட்டது.
முதுமை காரணமாக நிகழ்வுக்கு வரமுடியாத நிலையில், அவரது வீட்டுக்கு நேரில் சென்று பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள் அந்த விருதை அவருக்கு வழங்கி சிறப்பித்தார்.
இந்திரா காந்தி, கன்ஷிராம், MGR, கலைஞர் போன்ற ஆளுமைகளோடு பழகிய அவர், தற்போதும் வாடகை வீட்டிலேயே வசிக்கிறார்.
பொறியியல், கலை, ஆசிரியர் பயிற்சி நிறுவனம் என 10 கல்லூரிகள் உருவாக வழிகாட்டுநராக இருந்தவர்.
எழுத்து, பேச்சு, இலக்கியம், செயல்பாடு என பணியாற்றிய அவர், தனது 88 ஆம் வயதிலும் நாட்டையும், மக்களையும் பற்றியே சிந்திக்கிறார்.
அவரது இல்லத்தில் திரண்டிருந்த மஜக வினருக்கு அரசியல் அறிவுரைகளையும் கூறினார்.
பொதுச் செயலாளர் தமிமுன் அன்சாரி அவர்கள் MLA ஆனதும், அவருக்கு நாகர்கோவிலில் பல இன தலைவர்களை அழைத்து தான் பாராட்டு விழா நடத்தியதை நினைவு கூர்ந்தவர், அவர் தனக்கு மிகவும் பிடித்த இளம் தலைவர் என்றும் கூறினார்.
மிகச் சிறந்த ஆளுமைக்கு பொருத்தமான கெளரவிப்பை செய்ததற்கு பலரும் மஜக வுக்கு பாராட்டு தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் துணைப் பொதுச் செயலாளர் நாச்சிக்குளம். தாஜ்தீன், மாநிலத் துணைச் செயலாளர்கள் காயல்.சாகுல்,கோட்டை.ஹாரிஸ்,பேராவூரணி அப்துல் சலாம், மாவட்ட செயலாளர் பிஜ்ருல் ஹபீஸ், மாவட்ட துணைச் செயலாளர்கள் அமீர், முஜிப்,மாநகர பொருளாளர் அய்யப்பன், இளம் தொழிலதிபர் ஷபீக், ஐமாத் கூட்டமைப்பு நிர்வாகி ஜாகீர் உள்ளிட்ட பலரும் உடனிருந்தனர்.
தகவல்,
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#கன்னியாகுமரி_மாவட்டம்
16.07.2022