கோவை.செப்.12., மனிதநேய ஜனநாயக கட்சி கோவை மாவட்ட ஆலோசனைக் கூட்டம் மாவட்ட செயலாளர் MH.அப்பாஸ் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட துணை செயலாளர்கள் TMS.அப்பாஸ், ரபீக், ABT.பாருக், இளைஞரணி மாவட்ட செயலாளர் பைசல், தொழிற் சங்க மாவட்ட துணை செயலாளர் ABS.அப்பாஸ், தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட செயலாளர் சம்சுதீன் மற்றும் பகுதி நிர்வாகிகள் காஜா, முத்தலி, ஜாபர், அபு, இம்தியாஸ், அக்பர், ஜமால், ஹாருண் ரஷீது, அஜீஸ் மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டனர். இக்கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 1) மஜக மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் விரைவில் மாபெரும் பொதுக்கூட்டம் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது., 2) விரைவில் மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது., தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #கோவை_மாநகர்_மாவட்டம் 11.09.17
மாணவர் இந்தியா
மாணவர் இந்தியா
தமிழக மாணவ, மாணவிகளிடையே சமூக நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் செயல்..!! மாணவர் இந்தியா கண்டனம்..!!
(மாணவர் இந்தியா மாநில செயலாளர் A.முஹம்மது அஸாருதீன் வெளியிடும் கண்டன அறிக்கை...) தமிழகத்தில் மாணவ மாணவிகளின் சமூக அக்கறை, நல்லிணக்கம், சேவை மனப்பான்மையை ஊக்குவிக்கும் இயக்கமாக சாரணர்-சாரணிய இயக்கம் செயல்பட்டு வருகிறது.அப்படிப்பட்ட இயக்கத்திற்கு இதுநாள் வரை தகுதி படைத்த நபரே தலைவராக இருந்துள்ளனர்.இதற்கு மாறாக தற்போது தமிழக சாரண-சாரணிய இயக்கத்தின் தலைவராக பா.ஜ.க.வைச் சேர்ந்த எச்.ராஜா வை நியமிக்க தமிழக அரசு முயற்சி செய்வது கண்டனத்திற்குரியது. விதிகளை மாற்றி அரசியல் சார்புடைய ஒருவரை,மத்திய அரசின் வாரிய பதவி வகிப்பவரை தலைவராக நியமிக்க முயற்சி செய்வது தமிழக மாணவ-மாணவிகளிடையே பாசிஸ சிந்தனையை புகுத்தி சமூக ஒற்றுமையை சீர்குலைக்கும் பா.ஜ.க வின் திட்டத்திற்கு தமிழக அரசு துணை போகக்கூடாது. மேலும் இதுபோன்ற பதவிகளில் தகுதி படைத்த சகிப்புத்தன்மையுடையவரையே தலைவராக நியமிக்க வேண்டும் என்று மாணவர் இந்தியா சார்பாக கேட்டுக் கொள்கிறோம். இவண், A.முஹம்மது அஸாருதீன், மாநில செயலாளர், மாணவர் இந்தியா. 12.09.17
மியான்மார் ரோஹிங்யா முஸ்லிம்கள் இனப்படுகொலைக்கு எதிராக…!! மஜக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்…!!!
நாகை .செப்.11.,நாகை தெற்கு மாவட்டம், திட்டச்சேரி பேரூர் கிளை மனிதநேய ஜனநாயக கட்சி-யின் (MJK) சார்பில் காயிதே மில்லத் பேருந்து நிலையம் அருகில் மியான்மார் ரோஹிங்யா முஸ்லிம்கள் இனப்படுகொலைக்கு எதிரான மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு நாகை தெற்கு மாவட்ட செயலாளர் திட்டச்சேரி ரியாசுதீன் அவர்கள் தலைமை தாங்கினார். பேரூர் கழக செயலாளர் செய்யது அஹமது ரிஜ்வான் அனைவரையும் வரவேற்றார். மாநில விவசாய அணி செயலாளர் நாகை முபாரக், மாநில செயற்குழு உறுப்பினர்கள் சதக்கத்துல்லாஹ், தோப்புத்துறை சேக் அப்துல்லா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும், மஜக மாநில இணை பொதுச்செயலாளர் K.M.மைதீன் உலவி அவர்களும், மாநில செயலாளர் நாச்சிக்குளம் தாஜுதீன் அவர்களும் கண்டன உரை நிகழ்த்தினார்கள். இந்த ஆர்ப்பாட்டத்தில் மஜக பேரூர் கழக துணை செயலாளர் ஷேக் பரீதுத்தீன், மாணவர் இந்தியா மாவட்ட பொருளாளர் சுல்தான் சர்கூர் மற்றும் மாவட்ட, நகர, பேரூர், கிளை நிர்வாகிகள் திரளாக கலந்துகொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர். இறுதியில் பேரூர் கழக துணை செயலாளர் அப்துல் பாஸித் நன்றி கூறினார். இதில் ஏராளமான மனிதநேய சொந்தங்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு தங்கள் உணர்ச்சிமிக்க எதிர்ப்பை அங்கு
பேரறிவாளனை சந்தித்த மஜக மாநில பொருளாளர்..!
வேலூர்.செப்.11., வேலூர் (மேற்கு) மாவட்டம் ஜோலார்பேட்டையில் ஒரு மாதம் பரோலில் வந்துள்ள தோழர். பேரறிவாளன் அவர்களை அவரது இல்லத்தில் மனிதநேய ஜனநாயக கட்சியின் (மஜக) மாநில பொருளாளர் S.S.ஹாரூன் ரஷீத் அவர்கள் நேரில் சந்தித்தார்கள். மரியாதை நிமித்தமான இந்த சந்திப்பின் போது தனக்கு பரோல் கிடைக்க மிகுந்த உறுதுணையாக இருந்த மனிதநேய ஜனநாயக கட்சிக்கு தோழர். பேரறிவாளன் மற்றும் அவரது தாயார் அற்புதம்மாள் ஆகியோர் மிகுந்த நன்றியினை தெரிவித்து கொண்டார்கள் பின் பேரறிவாளன் தந்தையை சந்தித்து உடல் நலம் விசாரித்தனர். பின்னர் நடந்த பத்திரிக்கையாளர்கள் சந்திப்பின் போது பரோல் கிடைக்க ஆவண செய்த தமிழக அரசிற்கு மனித நேய ஜனநாயக கட்சி சார்பாக நன்றியினை தெரிவித்தார், தோழர்.பேரறிவாளன் நிரந்தரமாக விடுதலை வழங்க வேண்டும் என்று தமிழக அரசிற்கு வேண்டுகோள் விடுத்தார்கள். இந்த நெகிழ்வான சந்திப்பின் போது உடன் மாநில அவைத் தலைவர் S.S.நாசிர் உமரி, மாநில செயலாளர் A.சாதிக் பாஷா, மாநில துணை செயலாளர் J.M.வசிம் அக்ரம், மாணவர் இந்தியா மாநில துணை செயலாளர் S.G.அப்சர் சையத் , மாநில செயற்குழு உறுப்பினர் A.சையத் அபுதாஹிர், மற்றும் தகவல் தொழில் நுட்ப அணி காஞ்சி
மஜக சார்பில் கோட்டைப்பட்டினத்தில் ரோஹிங்யா முஸ்லிம்கள் இன அழிப்புக்கு எதிரான ஆர்ப்பாட்டம்…!
புதுகை.செப்.10., புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம் , மணமேல்குடி ஒன்றியம் மனிதநேய ஜனநாயக கட்சி (மஜக) சார்பில் கோட்டைப்பட்டினத்தில் மியான்மர் ரோஹிங்யா முஸ்லிம்கள் இன அழிப்புக்கு எதிரான கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மணமேல்குடி ஒன்றிய செயலாளர் அப்சல் கான் அவர்களை தலைமை தாங்கினார். கோட்டைப்பட்டினம் கிளைச்செயலாளர் ஹைதர் அலி அனைவரையும் வரவேற்றார். மாவட்ட துணை செயலாளர்கள் அஜ்மீர் அலி, ஒலி முஹம்மது, செய்யது அபுதாஹிர் ஆகியோர் முன்னிலை வகித்தனர் . மேலும் மஜக மாநில செயலாளர் நாச்சிக்குளம் தாஜுதீன், மஜக மாவட்ட செயலாளர் ஆசிரியர் முபாரக் அலி, மஜக தகவல் தொழில்நுட்ப அணி மாநில செயலாளர் கோட்டைப்பட்டினம் A.M.ஹாரிஸ் ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினார்கள். இந்த ஆர்ப்பாட்டத்தில் மஜக அறந்தாங்கி ஒன்றிய செயலாளர் அப்துல் முத்தலிப், ஆவுடையார் கோயில் ஒன்றிய செயலாளர் அப்துல்லாஹ், ஒன்றிய பொருளாளர் முஹம்மது குஞ்சாலி, அறந்தாங்கி நகர அவைத்தலைவர் அப்துல் ஹமீது, அறந்தாங்கி நகர செயலாளர் ஜகுபர் சாதிக், அறந்தாங்கி நகர பொருளாளர் அப்துல் கரீம், தொழிற்நுட்ப அணி மாவட்ட செயலாளர் அப்துல் ஜமீன், மாவட்ட மருத்துவ அணிச் செயலாளர் முகம்மது காலித், மாவட்ட