
(மாணவர் இந்தியா மாநில செயலாளர் A.முஹம்மது அஸாருதீன் வெளியிடும் கண்டன அறிக்கை…)
தமிழகத்தில் மாணவ மாணவிகளின் சமூக அக்கறை, நல்லிணக்கம், சேவை மனப்பான்மையை ஊக்குவிக்கும் இயக்கமாக சாரணர்-சாரணிய இயக்கம் செயல்பட்டு வருகிறது.அப்படிப்பட்ட இயக்கத்திற்கு இதுநாள் வரை தகுதி படைத்த நபரே தலைவராக இருந்துள்ளனர்.இதற்கு மாறாக தற்போது தமிழக சாரண-சாரணிய இயக்கத்தின் தலைவராக பா.ஜ.க.வைச் சேர்ந்த எச்.ராஜா வை நியமிக்க தமிழக அரசு முயற்சி செய்வது கண்டனத்திற்குரியது.
விதிகளை மாற்றி அரசியல் சார்புடைய ஒருவரை,மத்திய அரசின் வாரிய பதவி வகிப்பவரை தலைவராக நியமிக்க முயற்சி செய்வது தமிழக மாணவ-மாணவிகளிடையே பாசிஸ சிந்தனையை புகுத்தி சமூக ஒற்றுமையை சீர்குலைக்கும் பா.ஜ.க வின் திட்டத்திற்கு தமிழக அரசு துணை போகக்கூடாது.
மேலும் இதுபோன்ற பதவிகளில் தகுதி படைத்த சகிப்புத்தன்மையுடையவரையே தலைவராக நியமிக்க வேண்டும் என்று மாணவர் இந்தியா சார்பாக கேட்டுக் கொள்கிறோம்.
இவண்,
A.முஹம்மது அஸாருதீன்,
மாநில செயலாளர்,
மாணவர் இந்தியா.
12.09.17