மியான்மார் ரோஹிங்யா முஸ்லிம்கள் இனப்படுகொலைக்கு எதிராக…!! மஜக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்…!!!

image

image

நாகை .செப்.11.,நாகை தெற்கு மாவட்டம்,  திட்டச்சேரி பேரூர் கிளை மனிதநேய ஜனநாயக கட்சி-யின் (MJK) சார்பில் காயிதே மில்லத் பேருந்து நிலையம் அருகில் மியான்மார் ரோஹிங்யா முஸ்லிம்கள் இனப்படுகொலைக்கு எதிரான மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு நாகை தெற்கு மாவட்ட செயலாளர் திட்டச்சேரி ரியாசுதீன் அவர்கள் தலைமை தாங்கினார்.

பேரூர் கழக செயலாளர் செய்யது அஹமது ரிஜ்வான் அனைவரையும் வரவேற்றார். மாநில விவசாய அணி செயலாளர் நாகை முபாரக், மாநில செயற்குழு உறுப்பினர்கள் சதக்கத்துல்லாஹ், தோப்புத்துறை சேக் அப்துல்லா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மேலும், மஜக மாநில இணை பொதுச்செயலாளர் K.M.மைதீன் உலவி அவர்களும், மாநில செயலாளர் நாச்சிக்குளம் தாஜுதீன் அவர்களும் கண்டன உரை நிகழ்த்தினார்கள்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மஜக பேரூர் கழக துணை செயலாளர் ஷேக் பரீதுத்தீன், மாணவர் இந்தியா மாவட்ட பொருளாளர் சுல்தான் சர்கூர் மற்றும் மாவட்ட, நகர, பேரூர், கிளை நிர்வாகிகள் திரளாக கலந்துகொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்.

இறுதியில் பேரூர் கழக துணை செயலாளர் அப்துல் பாஸித் நன்றி கூறினார்.

இதில் ஏராளமான மனிதநேய சொந்தங்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு தங்கள் உணர்ச்சிமிக்க எதிர்ப்பை அங்கு வைக்கப்பட்டிருந்த பதாகையில் எழுத்து பூர்வமாக பதிவு செய்தனர்.

இதில் ஏராளமான மனிதநேய சொந்தங்கள் பொது மக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

தகவல்:

#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி,
#MJK_IT_WING,
#திட்டச்சேரி_பேரூர்,
#நாகை_தெற்கு_மாவட்டம்
11.09.17.