சேலம்.ஜுன்.04., இன்று சேலம் ஸ்டோக்ஹால் மண்டபத்தில் மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் ரமலான் நோன்பு திறக்கும் (இப்தார்) நிகழ்ச்சி மிக சிறப்பாக நடைபெற்றது. இதில் மஜக சேலம் மாவட்ட செயலாளர் A.சாதிக் பாஷா தலைமையில், மாவட்ட பொருளாளர் U.அமிர்உசேன் வரவேற்புரையாற்றினார்கள். மாவட்ட நிர்வாகிகள் S.சைய்யத் முஸ்தபா, A.ஷேக் ரபி, Os.பாபு, A.மஹபூப் அலி, A.அம்சத் அலி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மஜக மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாருன் ரசீது M.com. ஜனாப்.யூசூப் பாஷா KMB Granite நிர்வாக இயக்குனர். தோழர்.ஆ.ஜீவானந்தம் மாநில குழு உறுப்பினர் CPI. ஈரோடு பாபு ஷாயின்ஷா மஜக மாநில செயற்குழு உறுப்பினர். திரு.சன்ஜய் குமார் IPS சேலம் மாநகர காவல் ஆனையர். ஜனாப்.S.R.அன்வர் ஜாமியா மஸ்ஜித் முத்தவல்லி. ஜனாப்.ஜமாலுதீன் முஸ்லிம் கல்விசங்க செயலாளர். ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துகொண்டனர். உடன் மாணவர் இந்தியா அஸ்லம்கான், தொழிற்சங்கம் K.சதாம்உசேன் மற்றும் மாவட்ட இளைஞர் அணி அப்ரார் பாஷா ஆகியோர் இருந்தனர். தகவல்; தகவல் தொழில்நுட்ப அணி, மனிதநேய ஜனநாயக கட்சி. சேலம் மாவட்டம். #MJK_IT_WING 04.06.2017
மாணவர் இந்தியா
மாணவர் இந்தியா
நீட் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் : மாணவர் இந்தியா பங்கேற்பு..!
சென்னை.ஜூன்.01., இன்று தலித் கிருத்தவ கூட்டமைப்பு சார்பாக சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைப்பெற்ற நீட் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது. இதில் தலித் கிருத்தவ கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் பே.பெலிக்ஸ் தலைமை தாங்கினார். பொதுப்பள்ளி மேடை தலைவர் பிரின்ஸ் கஜேந்திர பாபு மற்றும் பல்வேறு மாணவர் அமைப்புகள் ஆரப்பாட்டத்தில் பங்கேற்றனர். மாணவர் இந்தியா சார்பாக மாநிலச் செயலாளர் முஹம்மது அஸாருதீன் பங்கேற்று உரையாற்றினார். இறுதியாக தமிழ்நாடு மாணவர் முன்னனி தலைவர் இளையராஜா நன்றியுரையாற்றினார். தகவல்; ஊடக பிரிவு மாணவர் இந்தியா, சென்னை. 01.06.2017
சென்னை IIT மாணவர் சூரஜ் மீது நடத்திய தாக்குதலுக்கு மாணவர் இந்தியா கடும் கண்டனம்.
இறைச்சிக்காக மாடுகளை வெட்டக்கூடாது என்கிற மத்திய அரசின் தடை உத்தரவையடுத்து நாடெங்கும் பலதரப்பட்ட மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மாட்டுக்கறி உணவை சென்னை IIT வளாகத்திலுள்ள உணவகத்தில் சாப்பிட்டதற்காக சென்னை ஐஐடி மாணவர் சூரஜை தாக்கியது பிஜேபி, ஆர்.எஸ்.எஸ்.சின் மாணவர் அமைப்பான ஏபிவிபியைச் சேர்ந்த மனீஷ் குமார் சிங் உட்பட குண்டர்கள் கடுமையாக தாக்கியுள்ளனர். மாணவர் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தியதை மாணவர் இந்தியா வன்மையாகக் கண்டிக்கிறது. தாக்குதலில் ஈடுபட்ட ஏ.பி.வி.பி குண்டர்களை உடனடியாக கைது செய்யுமாறு தமிழக அசை மாணவர் இந்தியா வலியுறுத்துகிறது. ABVP குண்டர்களை கைது செய்வதோடு மட்டமல்லாமல் அவர்களின் தீவிரவாத நடவடிக்கையை தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும். உணவு பழக்கத்தின் மூலம் மக்களிடையே பிளவு அரசியலை ஏற்படுத்தும் சங்பரிவார பிஜேபி யின் பாசிச நடவடிக்கையை முறியடிக்க மாணவர்களை ஒன்றிணைத்து மாணவர் இந்தியா போராட்டம் நடத்தும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். இவண், முஹம்மது அஸாருதீன், மாநிலச் செயலாளர், மாணவர் இந்தியா சென்னை 31.05.2017
மாட்டிறைச்சி தடை சட்டத்தை கண்டித்து மஜக முற்றுகை போராட்டம்- 300 க்கும் மேற்பட்டோர் கைது…
சென்னை.மே.30., இன்று மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் இறைச்சிக்காக பசு, காளை, எருமை மாடுகளையும், ஒட்டகத்தையும் சந்தையில் விற்பனை செய்வதற்கு தடை விதித்த மத்திய அரசின் சட்டத்தை திரும்ப பெற கோரி சென்னை மவுண்ட் ரோடு, அண்ணா சாலையிலுள்ள தலைமை தபால் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடைபெற்றது. இந்த தடையின் மூலம் விவசாயிகள், தலித், சிறுபான்மை மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு விரோதமான போக்கை அப்பட்டமாக மத்தியில் ஆளும் பாஜக அரசு வெளிப்படுத்தி உள்ளது. மிருகங்கள் வதை தடுப்புச் சட்டத்தில் மத்திய அரசு திருத்தம் கொண்டு வந்து மேலும் மாடு மற்றும் ஒட்டகத்தை பலியிடவும் பாஜக அரசு தடை விதித்து உத்தரவு பிறப்பித்து இருக்கிறது. போராட்டம் மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது தலைமையில் நடைபெற்றது. இப்போராட்டத்தில் மாநிலச் செயலாளர் என்.ஏ.தைமிய்யா, மாநில துணைச் செயலாளர் புதுமடம் அனீஸ், சிறப்பு அழைப்பாளராக எழுத்தாளர் வே.மதிமாறன், பகுஜன் சமாஜ்வாடி கட்சி பொதுச் செயலாளர் வழக்கறிஞர் ரஜினிகாந்த், மாணவர் இந்தியா மாநில செயலாளர் அசாருதீன் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் மாவட்ட, பகுதி, கிளை நிர்வாகிகள் உள்ளிட்ட 300 க்கும் மேற்பட்ட மனிதநேய சொந்தங்கள் கலந்துக்கொண்டு கைதாகினர். தகவல்; தகவல்
மாணவர் இந்தியா 2-நாள் பயற்சி முகாம் : மாணவர்கள் உற்சாகம்…
மகாபலிபுரம்.மே.17., பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு தங்களது தனித் திறமைகளை வளர்த்துக் கொள்ளவும், சமகால அரசியலை புரிந்து கொள்ளவும் வாய்ப்பை ஏற்படுத்தும் வகையில் மாணவர் இந்தியா இரண்டு நாள் பயற்சி முகாமை மகாபலிபுரம் அருகில் உள்ள கடம்பாடி கிராமத்தில் 2017 மே-13 மற்றும் 14 ஆகிய தேதிகளில் ஏற்பாடு செய்தது. முதல் அமர்வு மாணவர் இந்தியாவின் மாநில செயலாளர் A.அசாருதீன் வரவேற்புரை நிகழ்த்தினார். மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில துணைச் செயலாளர் புதுமடம் அனீஸ் அவர்கள் “மாணவர்களும் அரசியலும்” எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார். பாலிமர் தொலைக்காட்சியின் மூத்த செய்தியாளர் ரஹ்மான் அவர்கள் இன்றைய "ஊடகங்கள் உண்மையானதா?” எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார். மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில செயலாளர் என்.ஏ.தைமிய்யா "மாணவர்களின் அறம்” எனும் தலைப்பிலும் பின்னர் மாணவர்களின் பல்வேறு கேள்விகளுக்கு விடையளித்தார். இரண்டாம் அமர்வு தமிழ்நாடு மாணவர் இயக்கத்தின் தலைவர் இளையராஜா அவர்கள் “மாணவர்கள் ஏன் போராட வேண்டும்” எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார். மாலை தேநீர் இடைவேளைக்கு பிறகு : நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் “இன்றைய அரசியலும் மாணவர்களும்” எனும் தலைப்பில் விரிவுரையாற்றினார். தொடர்ந்து மாணவர்களின் பல்வேறு கேள்விகளுக்கும் பதில் அளித்து நிகழ்ச்சியை மெருகூட்டினார்.