75வது குடியரசு தினம்… மஜக விருதுநகர் மாவட்டம் சார்பாக நடைபெற்ற இலவச பொது மருத்துவ முகாம்..

ஜனவரி.27.,

நாட்டின் 75 ஆவது குடியரசு தினத்தை முன்னிட்டு மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பாக தமிழக முழுவதும் தேசிய கொடியேற்று நிகழ்வுகள், மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்வுகள், இலவச மருத்துவ முகாம்கள் என்று பரவலாக நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டது.

அதன் ஒரு நிகழ்வாக மனிதநேய ஜனநாயக கட்சியின் விருதுநகர் மாவட்டம் மற்றும் ஸ்ரீ கிருஷ்ணா மருத்துவமனையும் இணைந்து நடத்திய இலவச பொது மருத்துவ முகாம் மருத்துவ சேவை அணி மாவட்ட செயலாளர் நூர் முகமது தலைமையில் ஆலங்குளத்தில் நடைபெற்றது.

இதில் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட செயலாளர் கண்மணி காதர் அவர்கள் பங்கேற்று மருத்துவ முகாமை துவக்கி வைத்தார்கள்.

இம் முகாமில் 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்று பயனடைந்தனர்.

இந்நிகழ்வை தொழிற்சங்க மாவட்ட செயலாளர் முருகேசன் ராஜா மற்றும் நிர்வாகிகள் தமீமுன் அன்சாரி, காளிராஜ், பெரியசாமி, மகபூப் ஜான், கருப்பையா, ரஹ்மத்துல்லாஹ், முத்துவேல், சம்சுதீன், இட்லி கடை சம்சுதீன் ஆகியோர் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#விருதுநகர்_மாவட்டம்
26.01.2024.