ஜனவரி.27.,
மனிதநேய ஜனநாயக கட்சியின் தஞ்சை மத்திய மாவட்ட நிர்வாக ஆலோசனை கூட்டம் மாநில துணை செயலாளரும், மாவட்டத்தின் மேலிட பொறுப்பாளருமான யூசுப் ராஜா தலைமையில் தஞ்சாவூர் முஹம்மது புரம் நேஷ்னல் ஹாலில் நடைபெற்றது. இந்நிகழ்வில் தஞ்சை அப்துல்லாஹ் வரவேற்புரையாற்றினார்.
இதில் சிறப்பு அழைப்பாளராக மாநில செயலாளர் வல்லம் அகமது கபீர் கலந்துக் கொண்டார்.
அப்போது பிப்ரவரி 10, அன்று திருச்சியில் நடைபெறும் மத்திய சிறை முற்றுகை போராட்டத்தின் அவசியம் குறித்து மாநில துணை செயலாளர் யூசுப் ராஜா விளக்கினார்.
அவர் பேசியதாவது…
தற்போது நாம் குறிப்பிடும் 36 சிறைவாசிகள் அவர்களின் சட்டப் போராட்டத்தால் பரோலில் வந்துள்ளனர்.
இது தமிழ்நாடு அரசின் சிறைத் துறை சிரமம் இல்லாமல் செய்து தர வேண்டிய காரியம்.
இதை கூட சட்டப் போராட்டம் நடத்தியே பெற வேண்டியுள்ளது.
இதை கூட சிலர் தங்கள் அமைப்பு பெற்றுக் கொடுத்ததாக கூறி விளம்பரம் தேடுகின்றனர்.
வலுக்கட்டாயமாக கேட்டு நன்றி விளம்பரம் செய்கிறார்கள்.
அவர்கள் விடுதலை ஆகி விட்டதாக போலி பிரச்சாரம் செய்கிறார்கள்.
நாம் பேரறிவாளன் உள்ளிட்டோர் நிரந்தர விடுதலை பெற்றது போல அவர்கள் நிரந்தர விடுதலை பெற வேண்டும் என போராடுகிறோம். அதற்கு முதல்வர் ஸ்டாலின் அமைச்சரவையில் தீர்மானம் போட்டு கவர்னருக்கு அனுப்ப வேண்டும் என்கிறோம்.
இதை வலியுறுத்தியே திருச்சி போராட்ட களத்தை வடிவமைத்துள்ளோம்.
போராட்ட களம் அருகாமையில் இருப்பதால் ஆயிரக்கணக்கான மக்களை திரட்டி செல்ல வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இறுதியில் தஞ்சை மத்திய மாவட்டத்தின் சார்பில் 2500 பேர் புறப்படும் வகையில் பணிகளை தொடங்க வியூகம் வகுக்கப்பட்டது.
ஹ. ஷேக் முகமது அப்துல்லா அவர்களின் நன்றியுரையுடன் நிர்வாகிகள் அனைவரும் மிகுந்த உற்சாகத்துடன் புறப்பட்டார்கள்.
தகவல்:
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#தஞ்சை_மத்திய_மாவட்டம்
26.01.2024.