திண்டுக்கல்.ஜூலை:10.,நேற்று திண்டுக்கல் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகளுக்கான நிர்வாக கூட்டம் மாவட்ட செயலாளர் A.ஹபிபுல்லா தலைமையில் மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டம் மாவட்ட பொருளாளர் U.மரைக்காயர் சேட், மாவட்ட துணைச் செயலாளர்கள் A. அபி, A. அப்துல் காதர் ஜெய்லானி, R.உமர் அலி இவர்கள் முன்னிலையில் சிறப்பாக நடைபெற்றன. இதில் தொழிற்சங்க மாவட்ட செயலாளர் R.M. குத்புதீன், மாவட்ட மருத்துவ அணி செயலாளர் B. காதர் ஒலி, தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட செயலாளர் M.அனஸ் முஸ்தபா , இளைஞரனி மாவட்ட செயலாளர் Z.சாகித் கான், மாணவர் இந்தியா மாவட்ட செயலாளர் பிர்தெளஸ், துணைச் செயலாளர்கள் சாகுல், முனாப்தீன் மற்றும் நகர, ஒன்றிய நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தீர்மானங்கள் :- 1) பொதுக்கூட்டத்திற்கு வருகை தரும் பொதுச்செயலாளர், மாநில பொருளாளர், இணை பொதுச்செயலாளர் மற்றும் மாநில நிர்வாகிகள் அனைவருக்கும் சிறப்பான வரவேற்பு அளிப்பது. 2) திண்டுக்கல் மீரான் மைதீன் ( சிறைவாசி) அவர்கள் இல்லத்திற்க்கு மாநில நிர்வாகிகள் அனைவரும் சென்று மருத்துவம் அளிப்பது சம்மந்தமாக ஆலோசனை செய்வது . 3) மாநகர நிர்வாகம் கலைக்கப்பட்டு.திண்டுக்கல் மாநகரில் அதிகமான கிளைகள் உருவாக்குவதற்காக பொறுப்புக் குழு அமைக்கப்பட்டன. அக்குழுவின்
மாணவர் இந்தியா
மாணவர் இந்தியா
பழனி ஆயக்குடியில் மஜகவின் புதிய கிளை மற்றும் கொடி ஏற்றும் நிகழ்ச்சி…
திண்டுக்கல்.ஜுன்.16.,நேற்று திண்டுக்கல் மாவட்டம் பழனி ஒன்றியம் ஆயக்கூடியில் கொடி ஏற்றும் விழா மற்றும் நிர்வாகிகள் தேர்ந்தேடுக்கும் நிகழ்ச்சி மாவட்ட செயலாளர் A.ஹபிபுல்லா அவர்கள் தலைமையில், மாவட்ட பொருளாளர் U .மரைக்காயர் சேட், இவர்கள் முன்னிலையில் நடைபெற்றது. கட்சியின் புதிய கொடியை மாநில துணைசெயலாளர் திண்டுக்கல் M.அன்சாரிஅவர்கள் ஏற்றி வைத்து சிறப்புரை ஆற்றினார். சிறப்பு அழைப்பாளர்களாக தகவல் தொழில் நுட்ப அணியின் மாநில துணைச் செயலாளர் வானவில் காதர் அவர்கள், கொள்கை விளக்க அணி மாநில துணைசெயலார் C.A.சாந்து முகமது ஆகியோர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தார்கள். இந்நிகழ்ச்சியில் மாவட்ட துணை செயலாளர்கள் S .ஜாபர் , R .உமர் அலி, மாணவர் இந்தியா மாவட்ட செயலாளர் A.பிர்தெளஸ், இளைஞரனி ஒன்றிய செயலாளர் A J .ஜவகர், ஒன்றிய செயலாளர் A.ராஜா முகமது, நகர செயலாளர் சையது காதர் மற்றும் பழனி ஆயக்குடி, பாலசமுத்திரம் மனிதநேய சொந்தங்கள் திரளாக பங்கேற்றனர். இறுதியாக ஆயக்குடியில் மஜகவின் புதிய கிளை நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது, அதிகபடியாக கிளைகள் அமைத்து கட்சியை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்ல வேண்டும் என்று முடிவுசெய்யபட்டது. தகவல் : தகவல் தொழில்நுட்ப அணி, மனிதநேய ஜனநாயக கட்சி, திண்டுக்கல் மாவட்டம். #MJK_IT_WING 16/06/2017
மாணவர் இந்தியா-நியமன அறிவிப்பு
திருப்பூர் மாவட்ட மாணவர் இந்தியா மாவட்ட செயலாளராக B.நௌஃபல் ரிஸ்வான் தொடர்பு எண் : 9965158498 அவர்கள் நியமனம் செய்யப்படுகிறார். அமைப்பின் மாவட்டம்,ஒன்றியம்,பகுதி,கிளை நிர்வாகிகள் இவருக்கு முழு ஒத்துழைப்பு தருமாறு கேட்டுக் கொள்கிறேன். இவண் ; முஹம்மது அஸாருதீன், மாநிலச் செயலாளர், மாணவர் இந்தியா 06.06.2017
திண்டுக்கல் மாவட்ட மாணவர் இந்தியா நிர்வாகக் கூட்டம்
திண்டுக்கல் மாவட்ட மாணவர் இந்தியா ஆலோசனைக்கூட்டம் மஜக அலுவலகத்தில் நடைப்பெற்றது. மாவட்ட செயலாளர் முகம்மது பிர்தௌஸ் தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் முகமது நவபில், துணை செயலாளர் முனாஃப், சாகுல் ஆகியோர் முனனிலை வகித்தனர். இக்கூட்டதிற்கு சிறப்பு அழைப்பாளராக ம.ஜ.க.மாவட்ட செயலாளர் திரு.ஹபீபுல்லாஹ் அவர்கள் கலந்து கொண்டு ஆலோசனை வழங்கினார். இதில் மாணவர் இந்திய நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. 1. இதில் வரும் கல்வி ஆண்டில் மாணவர் இந்தியா சார்பாக மாணவர்களுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் தொடங்குவது என தீர்மானிக்கப்பட்டது. 2. பொருளாதார செலவுகளை நிர்வாகிகள் மற்றும் நன்ககொடைகள் மூலம் வசூலிப்பது என தீர்மானிக்கப்பட்டது. 3.திண்டுக்கல் மாணவ, மாணவிகளுக்கு இலவச நோட்டு புத்தகம் வழங்குவது என தீர்மானிக்கப்பட்டது. தகவல் ; ஊடகபிரிவு, மாணவர் இந்தியா திண்டுக்கல் மாவட்டம் 05.06.2017
பாதிக்கப்பட்ட IIT மாணவன் சூராஜை மாணவர் இந்தியா நிர்வாகிகள் நேரில் சந்திப்பு…
சென்னை.ஜூன்.05., சென்னை வானகரம் அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் IIT மாணவர் சூராஜ் அவர்களை மாணவர் இந்தியா மாநிலச் செயலாளர் அசாருத்தீன், மாநிலத் துணைச் செயலாளர் பஷீர், மஜக மத்திய சென்னை மாவட்டத் துணைச் செயலாளர் பீர் முஹம்மது ஆகியோர் நேரில் சந்தித்து உடல் நலம் விசாரித்தனர். சுராஜுக்கு அறுவை சிகிச்சை நடைபெற்று முடிந்துள்ளது. அவர் பூரண குணமடைய இறைவனிடம் பிறார்த்திப்பதாக மாணவர் இந்தியா நிர்வாகிகள் தெரிவித்தனர். உங்கள் பணிக்கு மாணவர் இந்தியா என்றும் துணை நிற்கும் என்று குறிப்பிட்டனர். அங்கு வருகை தந்த மாணவர் அமைப்பின் தலைவர்களுடன் மாணவர் இந்தியா நிர்வாகிகள் கலந்துரையாடினர். தகவல் ; ஊடக பிரிவு மாணவர் இந்தியா சென்னை. 04.06.2017