சென்னை.ஜூன்.05., சென்னை வானகரம் அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் IIT மாணவர் சூராஜ் அவர்களை மாணவர் இந்தியா மாநிலச் செயலாளர் அசாருத்தீன், மாநிலத் துணைச் செயலாளர் பஷீர், மஜக மத்திய சென்னை மாவட்டத் துணைச் செயலாளர் பீர் முஹம்மது ஆகியோர் நேரில் சந்தித்து உடல் நலம் விசாரித்தனர்.
சுராஜுக்கு அறுவை சிகிச்சை நடைபெற்று முடிந்துள்ளது. அவர் பூரண குணமடைய இறைவனிடம் பிறார்த்திப்பதாக மாணவர் இந்தியா நிர்வாகிகள் தெரிவித்தனர்.
உங்கள் பணிக்கு மாணவர் இந்தியா என்றும் துணை நிற்கும் என்று குறிப்பிட்டனர். அங்கு வருகை தந்த மாணவர் அமைப்பின் தலைவர்களுடன் மாணவர் இந்தியா நிர்வாகிகள் கலந்துரையாடினர்.
தகவல் ;
ஊடக பிரிவு
மாணவர் இந்தியா
சென்னை.
04.06.2017