சென்னை.ஜூலை.26., நீட் தேர்வுக்கு விலக்கு கோரி தமிழக சட்டமன்றத்தில் இயற்றப்பட்ட இரண்டு சட்ட மசோதக்களுக்கு குடியரசுத் தலைவரிடம் ஒப்புதல் பெற்றுத்தர மத்திய அரசை வலியுறுத்தி தமிழ்நாடு மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பாக சென்னையிலுள்ள பெரியார் திடலில் இன்று மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம் நடைப்பெற்றது. இதில் மாணவர் இந்தியா சார்பாக மாநிலச் செயலாளர் முஹம்மது அஸாருதீன், மாநில துணைச் செயலாளர் பஷீர் அஹமது மற்றும் லால்பேட்டை முஸரப் ஆகியோர் பங்கேற்றனர். பல்வேறு மாணவர் அமைப்புகளைச் சார்ந்த பிரதிநிதிகள் மற்றும் பொதுப்பள்ளிக்கான மாநில மேடை அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு உள்ளிட்டோர் இந்நிகழ்வில் கலந்துக் கொண்டனர். தகவல்; ஊடக பிரிவு மாணவர் இந்தியா சென்னை 26.07.2017
மாணவர் இந்தியா
மாணவர் இந்தியா
நீட் தேர்வு விவகாரம் கோவையில் மாணவர் இந்தியா துண்டுப்பிரசுரம் வினியோகம்!
கோவை.ஜூலை.26., நீட் தேர்விலிருந்து நிரந்தர விலக்கு அளிக்கக்கோரி குடியரசு தலைவருக்கு மின்னஞ்சல் அனுப்பும் மாதிரி துண்டுப்பிரசுரத்தை கோவை மாநகர் மாவட்ட மாணவர் இந்தியா செயலாளர் செய்யது இப்ராஹிம் தலைமையில் நிர்வாகிகள் மாணவர்களுக்கு வினியோகம் செய்தனர். இந்நிகழ்வில் மாணவர் இந்தியா நிர்வாகிகள் அனிரூத், விபினேஷ், நவ்பல், அபு, சதீஷ் ஆகியோர் கோவை கிருஷ்ணா கல்லூரி, ஹிந்துஸ்தான் கல்லூரி மற்றும் ஹோப்காலேஜ் ஆகிய பகுதிகளில் மாணவர்களுக்கும், பொது மக்களுக்கும் வினியோகம் செய்தனர். இன்று மட்டும் 1000பிரசுரங்கள் வினியோகம் செய்யப்பட்டுள்ளது . மாணவர் இந்தியா நிர்வாகிகளின் இந்த முயற்சிக்கு பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் மிகுந்த வரவேற்பு அளித்துவருகிறார்கள்! தகவல்: ஊடகபிரிவு மாணவர் இந்தியா கோவை மாநகர் மாவட்டம் 26.07.17
நீட் தேர்வில் இருந்து நிரந்தர விலக்கு கோரி… மாணவர் இந்தியா சார்பில் குடியரசு தலைவருக்கு மின்னஞ்சல்!
நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டிற்கு நிரந்தர விலக்கு அளிக்கும் வகையில் தமிழக சட்டமன்றத்தில் அனைத்து உறுப்பினர்களும் ஒரு மனதாக நிறைவேற்றிய இரண்டு மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்ககோரி, குடியரசு தலைவருக்கு மாணவர் இந்தியா சார்பில் உருவாக்கப்பட்ட மாதிரி மின்னஞ்சல். தமிழக மாணவர்களின் மருத்துவ கல்வி கனவை தகர்க்கும் 'நீட்' தேர்விலிருந்து விலக்கு பெற மாணவர் இந்தியா முன்னெடுத்துள்ள குடியரசுத் தலைவருக்கு மின்னஞ்சல் அனுப்பும் முயற்சிக்கு அனைத்து மாவட்டங்கள் சார்பாக பள்ளி மற்றும் கல்லூரி வாயில்களில் துண்டறிக்கை, போஸ்டர்கள் மற்றும் பேனர்கள் மூலம் மின்னஞ்சல் அனுப்பும் முயற்சியை மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துமாறு கேட்டுக் கொள்கிறோம். தகவல்; ஊடக பிரிவு மாணவர் இந்தியா தலைமையகம், சென்னை. 25.07.2017
மஜக இராமநாதபுரம் மாவட்ட நிர்வாக கூட்டம்! மாநில பொருளாளர் பங்கேற்பு!
இராமநாதபுரம்.ஜூலை.18., மனிதநேய ஜனநாயக கட்சியின் இராமநாதபுரம் மாவட்டம் ஆலோசனை கூட்டம் மற்றும் பரமக்குடி நகரம் எமனேஸ்வரம் கிளை நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று (17.07.2017) நடைபெற்றது. இக்கூட்டம் மாவட்ட செயலாளர் முஹம்மது இலியாஸ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 1. வருகின்ற ஆகஸ்ட் 6ஆம் தேதி பரமக்குடி நகர துணைச் செயலாளர் ஜாபர் அலி அவர்களின் திருமணத்திற்கு பொதுச் செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA, மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாருன் ரசீது, தலைமை ஒருங்கினைப்பாளர். மௌளா M.நாசர், இணைப் பொதுச் செயலாளர் மைதின் உலவி ஆகியோரை நேரில் சென்று அழைப்பிதல் கொடுப்பது என்றும், 2. எதிர்வரும் 06/08/17 அன்று பரமக்குடி கிருஷ்ணா தியேட்டர் அருகில் கொடி ஏற்றும் நிகழ்ச்சி சிறப்பாக நடத்துவது என்றும், 3. 06/08/17 அன்று மாலை மாநில நிர்வாகிகளை அழைத்து கருத்தரங்கம் நடத்துவது என்றும், 4. மாவட்டம் முழுவதும் புதிய உறுப்பினர்களை சேர்த்து புதிய கிளைகளை உருவாக்குவது... ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த ஆலோசனை கூட்டத்தில் மாநில செயற்குழு உறுப்பினர் செய்யது அபுதாஹிர், அப்துல் கஃபூர், பைசல்ரசீத், அப்துல்நசீர், பரமகுடிநகர செயலாளர். ஷாகுல், துணை செயலாளர் ஜாஃபர்அலி, கலிஃபதுல்லாஹ், ஷமிர், ரஹ்மான், மாணவர் இந்தியா செயலாளர்
நல்லிணக்கத்தை உறுதிப்படுத்திய நெய்வேலி! அனைவரையும் அரவணைத்த மஜக!
கடலூர்.ஜூலை.10, கடலூர் (வடக்கு) மாவட்டம் நெய்வேலியில் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் ''இதயங்களை இணைக்கும் ஈத்மிலன்" நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் எதிரும், புதிருமான கோட்பாடுகளையும், அனுக்குமுறைகளையும் கொண்ட அனைத்து அரசியல் கட்சிகளும், சமூக இயக்கங்களை சேர்ந்தவர்களும், மனிதஉரிமை - சமூக நீதி ஆர்வலர்களும் பங்குகொண்டது பெரும்மகிழ்ச்சியை தந்தது. அதிமுக, திமுக, மதிமுக, காங்ரஸ், தமாக, தேமுதிக, பாமக, விசிக, தமிழர் வாழ்வுரிமை கட்சி, இந்திய கம்யூனிஸ்ட், SDPI நாம் தமிழர் கட்சி என பல கட்சிகளின் மாநில, மாவட்ட நிர்வாகிகள் பங்குகொண்டு "சமூக நல்லிணக்கத்தை" பேசி கைத்தட்டளை வாங்கினர். நாம் ஒருதாய் மக்கள், மதவெறியை வீழ்த்த வேண்டும், எல்லா சமூக மக்களும் ஒற்றுமையாக வாழ வேண்டும் என்பது போன்ற கருத்துக்கள் அனைவரின் வாயில் இருந்தும் கட்சி எல்லைகளை தாண்டி எதிரொலித்தது. நிகழ்ச்சியில் பல்வேறு சமூகங்களை சேர்ந்த 500க்கும் மேற்பட்ட ஆண்களும், பெண்களும் உற்ச்சாகம் பொங்க பங்கேற்றனர். சால்வைகள் இல்லை, மாலைகள் இல்லை, அரசியல் சவடால்கள் இல்லை ஆனால் எல்லோரின் உணர்வுகளிலும் ஒற்றுமை இருந்தது. மேலும் சமூக சேவையில் பாடுபட்ட K.C.தம்பி (எ) அச்சா, அரிமா சங்க தலைவர் லட்சுமி நாராயணன் போன்றோர்க்கும் அகில இந்திய சிறுபான்மை நல