நல்லிணக்கத்தை உறுதிப்படுத்திய நெய்வேலி! அனைவரையும் அரவணைத்த மஜக!

image

image

image

கடலூர்.ஜூலை.10, கடலூர் (வடக்கு) மாவட்டம் நெய்வேலியில் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் ”இதயங்களை இணைக்கும் ஈத்மிலன்” நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

இதில் எதிரும், புதிருமான கோட்பாடுகளையும், அனுக்குமுறைகளையும் கொண்ட அனைத்து அரசியல் கட்சிகளும், சமூக இயக்கங்களை சேர்ந்தவர்களும், மனிதஉரிமை – சமூக நீதி ஆர்வலர்களும் பங்குகொண்டது பெரும்மகிழ்ச்சியை தந்தது.

அதிமுக, திமுக, மதிமுக, காங்ரஸ், தமாக, தேமுதிக, பாமக, விசிக, தமிழர் வாழ்வுரிமை கட்சி, இந்திய கம்யூனிஸ்ட், SDPI நாம் தமிழர் கட்சி என பல கட்சிகளின் மாநில, மாவட்ட நிர்வாகிகள் பங்குகொண்டு “சமூக நல்லிணக்கத்தை” பேசி கைத்தட்டளை வாங்கினர்.

நாம் ஒருதாய் மக்கள், மதவெறியை வீழ்த்த வேண்டும், எல்லா சமூக மக்களும் ஒற்றுமையாக வாழ வேண்டும் என்பது போன்ற கருத்துக்கள் அனைவரின் வாயில் இருந்தும் கட்சி எல்லைகளை தாண்டி எதிரொலித்தது.

நிகழ்ச்சியில் பல்வேறு சமூகங்களை சேர்ந்த 500க்கும் மேற்பட்ட ஆண்களும், பெண்களும் உற்ச்சாகம் பொங்க பங்கேற்றனர்.

சால்வைகள் இல்லை, மாலைகள் இல்லை, அரசியல் சவடால்கள் இல்லை ஆனால் எல்லோரின் உணர்வுகளிலும் ஒற்றுமை இருந்தது.

மேலும் சமூக சேவையில் பாடுபட்ட K.C.தம்பி (எ) அச்சா, அரிமா சங்க தலைவர் லட்சுமி நாராயணன் போன்றோர்க்கும் அகில இந்திய சிறுபான்மை நல சங்கம் என்ற தொண்டு அமைப்புக்கும் மஜக சார்பில் விருதுகள் வழங்கப்பட்டது.

மஜகவின் 4வது ஆம்புலன்ஸ் சாவியை அனைத்து அமைப்புகள், கட்சிகளின் பிரதிநிதிகள் ஒன்று சேர்ந்து நெய்வேலி நகர மஜகவினரிடம் ஒப்படைத்தனர்.

இதில் மஜக பொதுச் செயலாளர் M. தமிமுன் அன்சாரி MLA, மாநில பொருளாளர் SS. ஹாரூன் ரசீது ஆகியோர் பார்வையாளராக இருந்தனர்.

மூன்று மணி நேரம் அமைதி, இணக்கம், உற்சாகமாக நிகழ்ச்சி நடைபெற்றது. இறுதியாக சூடான, சுவையான பிரியாணியும், விரும்பியவர்களுக்கு சைவ உணவுகளும் பரிமாறப்பட்டது.

நெய்வேலியில் ‘ நெய் மணக்கும் ‘ நல்லிணக்க செயலை மஜக செய்திருப்பதாகவும், அதை தமிழகம் முழுக்க மணக்க செய்வோம் எனவும் மஜக பொதுச் செயலாளர் M. தமிமுன் அன்சாரி நிறைவுரையாக குறிப்பிட்டார்.

இந்நிகழ்வில் மாநில விவசாய அணி செயலாளர் நாகை முபாரக், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் நெய்வேலி ஷாஜகான், M.R.அன்வர்தீன், சிவிங்கை அபுதாஹிர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

மாவட்ட செயலாளர் இப்ராகிம் மிகச்சிறப்பாக பணிகளை ஒருங்கிணைத்து அனைவரின் பாராட்டுக்களையும் பெற்றார்.
நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு சிறப்பித்தவர்களுக்கு புத்தகங்கள் அன்பளிப்பாக வழங்ஙப்பட்டது 
இதில் நகர செயலாளர் O.A.K நூர் முகம்மது, மாவட்ட துணை செயலாளர்கள் அஜ்மீர் கான், அஜீஸ் கான், முகமது யூசுப்,மாவட்ட இளைஞர் அணி துணை செயலாளர் மன்சூர், அப்பாஸ்,மாவட்ட மாணவர் இந்தியா செயலாளர் ரியாஸ் ரகுமான், ஒன்றிய நிர்வாகிகள் ராஜா முகமது காஜா மைதீன், K.Sஆதம் சேட்டு, K.S.பாபர் ஓலி, நகர பொறுப்பாளர்கள்  அப்பாஸ் ஒலி, அஸாருதீன் சதாம் உசேன், அன்சார்,சதீஸ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

இதில் நகர பொருளாளர் ஜாகிர் உசேன் நன்றியுரை ஆற்றினார்கள்.

தகவல்;
மஜக தகவல் தொழில்நுட்ப அணி,
கடலூர் (வ) மாவட்டம்.
#MJK_IT_WING
09.07.2017