
பிப்:13.,தஞ்சை (தெற்கு ) மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில் மூன்று வார்டுகளில் மனித நேய ஜனநாயக கட்சியினர் தென்னை மர சின்னத்தில் போட்டியிடுகின்றனர்.
பைசல் அகமது அவர்கள் 05 வது வார்டிலும் , ஹாஜா மர்ஜுக், அவர்கள் 17வது வார்டிலும் சாகுல் ஹமித் அவர்கள் 24 வார்டிலும் போட்டியிடுகின்றனர்.
இன்று மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி அதிரை மஜக தேர்தல் பணிமனைக்கு வருகை தந்து வேட்பாளர்களை சந்தித்து கள நிலவரங்கள் குறித்து விசாரித்தார்.
பிறகு மஜக தேர்தல் பணிக்குழுவினரை சந்தித்து இனி வரும் களப்பணிகள் குறித்து ஆலோசித்தார்.
இங்கு துணைப் பொதுச் செயலாளர் நாச்சிக்குளம் தாஜ்தீன், அவர்கள் அடிக்கடி வருகை தந்து களப்பணிகளை மேற்பார்வையிட்டு வருகிறார்.
இங்கு 20 அம்ச அடிப்படை கோரிக்கைகளை முன் வைத்து மஜக வினர் களப்பணியாற்றி வருகின்றனர்.
பிறகு நல்லிணக்க ஒருங்கிணைப்பு குழுவை சேர்ந்தவர்கள் பொதுச் செயலாளரை மரியாதை நிமித்தமாக சந்தித்து உரையாடினர்.
மஜக சார்பு அமைப்பான MKP யின் ஆஸ்திரேலியா மண்டல செயலாளர் சர்புதீன் காக்கா, அவர்களும் பொதுச் செயலாளரை சந்தித்து உரையாடினார்.
இந்நிகழ்வுகளில் மஜக மாவட்ட செயலாளர் அதிரை ஷேக், மற்றும் நகர நிர்வாகிகள் கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
தகவல்,
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKITWING
#தஞ்சை_தெற்கு_மாவட்டம்
13.02.2022