You are here

கூத்தாநல்லூரில் தேர்தல் பணிமனை மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி திறந்து வைத்தார்…

பிப்ரவரி:13., திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் நகராட்சியில் 3 வார்டுகளில் மனிதநேய ஜனநாயக கட்சியினர் போட்டியிடுகின்றனர்.அங்கு தேர்தல் பணிமனையை இன்று பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி திறந்து வைத்தார்.

8-வார்டில் மாவட்ட செயலாளர் சீனி ஜெகபர் சாதிக் அவர்களும் 6 வார்டில் Y.சாகுல்ஹமீது அவர்களும் , 21 வார்டில் PAS.ஜெய்னுப் நாச்சியா அவர்களும் போட்டியிடுகின்றனர்.
பணிமனை திறப்புக்கு பிறகு வேட்பாளர்களை அழைத்து கள நிலவரங்கள் குறித்து பொதுச் செயலாளர் அவர்கள் கேட்டறிந்தார்.

பிறகு தேர்தல் பணிக்குழுவினருடன் இனி வரும் பணிகள் குறித்து ஆலோசித்தார்.
பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி, அவர்கள் கூத்தாநல்லூருக்கு தனி தாலுகா கிடைக்க அன்றைய முதல்வர் ஜெயலலிதா அம்மாவிடம் கோரிக்கை வைத்து பெற்றுக் கொடுத்ததும், கூத்தாநல்லூரின் மின் பற்றாக்குறையை போக்க அன்றைய மாவட்ட அமைச்சர் மூலம் மின்மாற்றி புதிதாக அமைத்து கொடுத்ததும், மஜகவினர் 6 ஆண்டுகளாக இங்கு ஆற்றி வரும் பணிகளும் வாக்களர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

இன்றைய நிகழ்வில் மாநில செயற்குழு உறுப்பினர் ஜெய்னுதீன்,மாவட்ட செயலாளர் சீனி ஜெகபர் சாதிக்,மாவட்ட துணை செயலாளர் நத்தர் கனி,மாவட்ட இளைஞர் அணி செயலாளர் ரஹ்மத்துல்லா, மாவட்ட அணி நிர்வாகிகள் நூரூல் அமீன்,ரிஸ்வான், ஜபரூல்லா, நகர செயலாளர் ஆசிக்,பொதக்குடி கிளை செயலாளர் முனவர்தீன் கூத்தநல்லூர் மற்றும் பொதக்குடி நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர் …

தகவல்
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#திருவாரூர்_மாவட்டம்
13.02.2022

Top