
பிப்:14.,தமிழகமெங்கும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் மனிதநேய ஜனநாயக கட்சியின் வேட்பாளர்களை ஆதரித்து மஜக தேர்தல் பணிக்குழு வழிகாட்டலில் தீவிர களப்பணிகள் நடைப்பெற்று வருகிறது.
தலைமை நிர்வாகிகளும், மேலிட பொறுப்பாளர்களும் ஆங்காங்கே பணிகளை மேற்ப்பார்வையிட்டு வருகின்றனர்.
இந்நிலையில் பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள்
நாகை நகராட்சி 29 வது வார்டில் தண்ணீர் குழாய் சின்னத்தில் போட்டியிடும் மஜக வேட்பாளர் M.ஜென்னத் பேகம் அவர்களை சந்தித்து கள நிலவரம் குறித்து கேட்டறிந்தார்.
அங்கிருந்த தேர்தல் பணிக்குழுவினருடன் ஆலோசனைகளை பகிர்ந்து கொண்டார்.
நாகை 29 வது வார்டில் பொதுச் செயலாளர் அவர்கள் இங்கு MLA வாக இருந்த போது ரேஷன் கடை வந்தது. சாலைகள் அமைத்துக் கொடுத்தது, மின் விளக்குகள் அமைத்து கொடுத்தது, மழை நீர் வடிகால் அமைத்துக் கொடுத்தது, குளம் தூர் வாரிக் கொடுத்தது ஆகியவற்றை எடுத்துக் கூறி பரப்புரை செய்து , இன்னும் பல பணிகளை செய்வோம் என்றும் கூறி மக்களை வென்றெடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வுகளில் மாவட்ட பொருளாளர் சதக்கத்துல்லா, தலைமை செயற்குழு உறுப்பினர் திருப்பூண்டி சாகுல், மாவட்ட துணைச் செயலாளர் கண்ணுவாப்பா, தகவல் தொழில் நுட்ப அணி மாவட்ட செயலாளர் சுல்தான், ஆகியோர் உடனிருந்தனர்.
தகவல்,
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKITWING
#நாகை_மாவட்டம்
13.02.2022