You are here

ஹிஜாப் ஏற்படுத்திய மத நல்லிணக்கம்.!

திருச்சி.பிப்.14., ஹிஜாப் என்னும் தனி மனித உரிமை தடுக்காதே என்ற முழக்கத்தோடு மனிதநேய ஜனநாயக கட்சியின் துரைசாமிபுரம் கிளையின் சார்பாக விழிப்புணர்வு அணிவகுப்பு மற்றும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

துரைசாமிபுரம் பள்ளிவாசல் அருகில் தொடங்கிய அணிவகுப்பு தேவாலயம் வழியாக முருகன் கோவில் அருகில் நிறைவடைந்தது.
இந்த விழிப்புணர்வு அணிவகுப்பில் முஸ்லிம் மக்களுடன் இணைந்து இந்துக்களும், கிறிஸ்தவர்களும் பெருந்திரளாய் பங்கேற்று பதாகைகளை ஏந்தி முழக்கங்களை இட்டது சமூக நல்லிணக்கத்திற்கு சான்றாக அமைந்தது.

பின்னர் அங்கு நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட துணைச் செயலாளர் சையது முஸ்தபா தலைமை வகித்தார் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஷேக் மைதீன் முன்னிலை வகித்து கண்டன கோஷங்களை எழுப்பினார்.

இதில் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாவட்ட செயலாளர் பேரா. மைதீன் அப்துல் காதர் மற்றும் துரைசாமிபுரம் பங்குத்தந்தை அருட்திரு. ஆரோக்கிய பன்னீர்செல்வம் மற்றும் மகளிர் பங்கு பேரவை தலைவர் செலின் மேரி ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

இந்த நிகழ்வில் மாவட்ட பொருளாளர் அந்தோணிராஜ், துணைச் செயலாளர்கள் அன்வர்தீன், முஹம்மது பீர்சா, மாவட்ட செயற்குழு உறுப்பினர் சையது முகமது, நிர்வாகிகள் சல்மான், வாஹித், தமீம் அன்சாரி, துபைல் அகமது, அமீர் அம்சா மற்றும் ஏராளமான பெண்கள் கைக்குழந்தைகளுடன் கலந்து கொண்டு தங்களுடைய கண்டனத்தை பதிவு செய்தனர்.

தகவல்,
#MJKitWING
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#மஜக_திருச்சி_மாவட்டம்
14.02.2022

Top