
சென்னை.பிப்.14.,குகைவாசிகள் பதிப்பகம் சார்பில் 80 புத்தகங்கள் வெளியீட்டு விழா 13.02.2022 அன்று சென்னை மவுண்ட் ரோடு மக்காஹ் பள்ளிவாசலில் நடைபெற்றது.
இவ்விழாவில் பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள், மார்க்க அறிஞர்கள், தொழில் அதிபர்கள் கலந்து கொண்டு நூல்களை வெளியிட்டனர்.
இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது அவர்கள் பேசும் போது…
இந்த நூல்களை எழுதி, தொகுத்த எம்.எஃப்.அலி அவர்கள் 20 ஆண்டுகளுக்கு முன் ஒற்றுமை இதழில் பணியாற்றிய போதே ஆய்வு கட்டுரைகளை எழுதுவதில் அதிகம் ஆர்வம் கொண்டிருந்தார். இன்றைக்கு அவரால் 80 நூல்களை கடுமையான உழைபின் மூலம் வெளியிடப்பட்டிருக்கிறது.
புத்தகங்களை படிக்கும் பழக்கத்தை பிள்ளைகளிடம் உருவாக்க வேண்டும்.
தமிழ்நாடு வக்ஃப் வாரிய தலைவர் அவர்களுக்கு இந்த நல்ல நிகழ்வின் மூலம் ஒரு வேண்டுகோள் வைக்கிறேன். வக்ஃப் வாரியத்தின் சார்பாக ஒரு ஆய்வு நூலகத்தை உருவாக்க வேண்டும். என்று பேசினார்.
இந்நிகழ்வில் தமிழ்நாடு வக்பு வாரிய தலைவர் அப்துல் ரஹ்மான், தமுமுக குனங்குடி ஹனிபா, எஸ்டிபிஐ மாநில தலைவர் முபாரக், வெல்ஃபேர் பார்ட்டி சிக்கந்தர் உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர்.
பொருளாளருடன் மஜக மத்திய சென்னை கிழக்கு மாவட்ட பொருளாளர் அமீர் அப்பாஸ், இராயபுரம் நைனார் முஹம்மது மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#மத்தியசென்னை_மாவட்டம்
13.02.2022