சென்னை.ஜூலை.28., இன்று சென்னை காவிரி மருத்துவமனைக்கு #கலைஞரின் உடல் நலம் விசாரிக்க #மனிதநேய_ஜனநாயக_கட்சி (மஜக) பொதுச்செயலாளர் #மு_தமிமுன்_அன்சாரி_MLA, மாநில பொருளாளர் #எஸ்_எஸ்_ஹாரூன்_ரஷீது, தலைமை நிர்வாகக்குழு உறுப்பினர் #A_S_அலாவுதீன் , ஆகியோர் வருகை தந்தனர். அவர்களுடன் #தனியரசு_MLA, #கருணாஸ்_MLA ஆகியோரும் வருகை தந்தனர். #திமுக MLAக்கள் செந்தில், எழில், மூர்த்தி, ரவிச்சந்திரன் ஆகியோரும், T.K.S.இளங்கோவன் அவர்களும் வரவேற்று அழைத்துச் சென்றனர். அங்கு பேராசிரியர் அன்பழகன், மு.க.ஸ்டாலின் ஆகியோர் இருந்தனர். சந்திப்புக்குப் பிறகு தமிமுன் அன்சாரி, தனியரசு, கருணாஸ் ஆகியோர் கூட்டாக பத்திரிகையாளர்களை சந்தித்து #கலைஞர் நலம் பெற, தங்கள் வாழ்த்துகளை தெரிவித்தனர்.. தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #மஜக_தலைமையகம்_சென்னை
நாகப்பட்டினம் எம்.எல்.ஏ எம்.தமிமுன் அன்சாரி மஜக
நாகப்பட்டினம் எம்.எல்.ஏ எம்.தமிமுன் அன்சாரி மஜக
MKP தலைமையக நியமன அறிவிப்பு!
#மனிதநேய_கலாச்சார_பேரவை (#MKP) கத்தார் மண்டல துணைச் செயலாளராக பரங்கிபேட்டை அப்துல் ரஜ்ஜாக் (+974 5573 4012) அவர்கள் நியமனம் செய்யப்படுகிறார். மனிதநேய சொந்தங்கள் இவருக்கு முழு ஒத்துழைப்பு வழங்கிட கேட்டுக் கொள்கிறேன். இவண்; #M_தமிமுன்_அன்சாரி_MLA #பொதுச்செயலாளர் 27.07.18
நாகை சட்டமன்ற தொகுதியில் ஐந்து புதிய அரசு கட்டிடங்கள் திறப்பு விழா..! அமைச்சர், சட்டமன்ற உறுப்பினர் மற்றும் மாவட்ட ஆட்சியர் பங்கேற்ப்பு..!!
நாகை. ஜூலை.27., இன்று, நாகை சட்டமன்ற தொகுதிக்கு உட்ப்பட்ட திருமருகல் ஒன்றியத்தில் உள்ள பனங்குடி கிராமத்தில் புதிய ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம் , திருமருகலில் புதிய ஊராட்சி மன்ற கட்டிடம், வடகரை ஊராட்சி திருப்பனையூர் கிராமத்தில் புதிய அங்கன்வாடி மைய கட்டிடம் மற்றும் திட்டச்சேரி பேரூராட்சியில் அரசு சார்பில் கட்டப்பட்ட புதிய பள்ளிக்கட்டிடம், திருமருகல் ஒன்றியம் சேஷமூலை கிராமத்தில் கட்ப்பட்ட குழந்தைகளுக்கான புதிய அங்கன் வாடி கட்டிடம் ஆகிய ஐந்து கட்டிடங்களை தமிழக கைத்தறி மற்றும் ஜவுளி துறை அமைச்சர் திரு O.S மணியன் அவர்கள் திறந்து வைத்தார்கள். நிகழ்வில் நாகை சட்டமன்ற உறுப்பினர் மு.தமிமுன் அன்சாரி, நாகை மாவட்ட ஆட்சியர் திரு. சுரேஷ்குமார் ஆகியோர் பங்கேற்றனர். விழா நினைவாக அனைத்து கட்டிட திறப்பு நிகழ்வுகளிலும், அமைச்சர், சட்டமன்ற உறுப்பினர் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆகியோர் மரக்கன்றுளை நட்டனர். நிகழ்ச்சிகளில் கலந்துக்கொண்ட ஏராளமான பொதுமக்கள் அமைச்சர், சட்டமன்ற உறுப்பினர் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆகியோர்களிடம் கோரிக்கை மனுக்களை அளித்தனர். மனுக்களைப் பெற்றுக் கொண்டு, விரைவில் நடவடிக்கை எடுத்து பூர்த்தி செய்வதாக தெரிவித்தார்கள். தகவல்; #நாகை_சட்டமன்ற_உறுப்பினர்_அலுவலகம். 27.07.2018
மனிதநேய கலாச்சார பேரவை குவைத் மண்டல நிர்வாகிகள் நியமனம்..!
இஸ்லாமிய கலாச்சார பேரவை செயலாளர் : இளையாங்குடி சீனி முகம்மது துணை செயலாளர் : அல்மன்சூர் மனிதநேய கலாச்சார பேரவை (MKP) மக்கள் தொடர்பு செயலாளர் : நீடூர் சர்புதீன் தொழிலாளர் அணி செயலாளர் MTS : கோணுலாம்பள்ளம் அன்சாரி இளைஞர் அணி செயலாளர் : சோழசக்கரை நல்லூர் முகம்மது யாசீன் மண்டல நிர்வாக குழு உறுப்பினர்கள் : - அதிரை பைசல் - நாச்சிக்குளம் அப்துர் ரஹ்மான் - அதிரை ராஜா முஹம்மது. ஆகியோர் நியமனம் செய்யப்படுகின்றனர். இவர்களுக்கு மனிதநேய சொந்தங்கள் முழு ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக்கொள்கிறேன். இவண்; #மு_தமிமுன்_அன்சாரி_MLA பொதுச்செயலாளர். 26.07.2018
விபத்தில் காயமடைந்த மஜக மாவட்ட செயலாளரின் மனைவியை உடல்நலம் விசாரித்த பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி MLA!
சென்னை.ஜூலை.26., கடந்த வாரம் மனிதநேய ஜனநாயக கட்சியின் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலாளர் நாசர் அவர்களது மனைவி திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் கார் விபத்தில் காயமடைந்தார். சென்னை தண்டையார்ப்பேட்டை ஸ்ரீ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர், பாத எலும்பு முறிவு காரணமாக அறுவை சிகிச்சை முடிவடைந்து மருத்துவர்களின் கண்காணிப்பில் ஓய்வில் உள்ளார்.செய்தியறிந்து மனிதநேய ஜனநாயக கட்சி (மஜக) பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி MLA அவர்கள் நேரில் சென்று உடல்நலம் விசாரித்தார். மேலும் விரைவாக குணமடைய இறைவனை பிரார்த்திப்பதாக அவர்களுக்கு ஆறுதல் கூறினார்.உடன் மஜக மாநில செயலாளர்கள் நாச்சிகுளம் தாஜிதீன், N.A.தைமிய்யா, மாநில துணைச்செயலாளர்கள் புதுமடம் அணீஸ், இன்ஜீனியர் சைபுல்லாஹ், தலைமை செயற்குழு உறுப்பினர் அபுதாஹீர் மற்றும் மத்திய சென்னை கிழக்கு மாவட்ட செயலாளர் பிஸ்மில்லாஹ் கான் ஆகியோர் உடனிருந்தனர்.தகவல்;#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி#MJK_IT_WING#மஜக_திருவள்ளூர்_கிழக்கு_மாவட்டம்