பீட்டர் அல்போன்ஸ் மனைவி மரணம்! மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி நேரில் ஆறுதல்!

சென்னை.மே.05., காங்கிரஸ் கட்சியின் முன்னணி தலைவர்களில் ஒருவராகிய பீட்டர் அல்போன்ஸ் அவர்களின் மனைவி ஜெசிந்தா, நேற்று மரணமடைந்தார்.

அதனை தொடர்ந்து அண்ணாநகரில் உள்ள தேவாலயத்தில் அவரது உடல் வைக்கட்டிருந்தது.
இன்று மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன்அன்சாரி அவர்கள் நேரில் சென்று பீட்டர் அல்போன்ஸ் அவர்களுக்கு ஆறுதல் கூறினார்.

அப்போது காங்கிரஸ் MLA ராஜேஷ், கிறித்தவ நல்லெண்ண இயக்கம் இனிக்கோ இருதயராஜ் MLA., உள்ளிட்டோரும் உடனிருந்தனர்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKITWING
#தலைமையகம்
05.05.2021