விருதுநகர். ஆக.18., விருதுநகர் வடக்கு மாவட்டம் #வீரசோழன் #மனிதநேய_ஜனநாயக_கட்சி-யின் 5வது ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு நிகழ்ச்சி பொதுக் கூட்ட்த்துடன் நேற்று (17.08.2018) மாலை எழுச்சியாக நடைப்பெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக #நேதாஜி_சுபாஷ்_சேனா கட்சியின் தலைவர் வழக்கறிஞர்.மகாதேவன் கலந்து கொண்டார். அவர் பேசும் போது மஜகவின் அரசியல் , சமூக அணுகுமுறைகளை பாராட்டி பேசினார். எல்லா சமூக மக்களின் பிரச்சனைகளுக்காகவும் சட்டசபையில் மஜக பொதுச் செயலாளர் #மு_தமிமுன்_அன்சாரி_MLA குரல் கொடுப்பதாகவும் பாராட்டி பேசினார். முஸ்லிம்களும், தேவர் சமூக மக்களும் ஒரே மாதிரியாக பாதிக்கப்படுவதாவும், நாம் இரட்டைக் குழல் துப்பாக்கியாக செயல்பட வேண்டும் என்றும் பேசினார்., அ.ம.மு.க மாவட்ட செயலாளர் இன்பத் தமிழன் பேசும்போது, தனது தந்தை தாமரைக்கனிக்கும், தனது தலைவர் TTV . தினகரனுக்கும் தமிமுன் அன்சாரி நண்பர் என்றும் கூறி மகிழ்ந்தவர், மன்னர் ஒளரங்கசீப் பின் நேர்மையான ஆட்சி முறை குறித்து சிலாகித்து பேசினார். தனது தந்தை ஷாஜஹானின் இறுதி சடஙகை அரசு செலவில் செய்யாமல், தனது சொந்த செலவில் செய்ததை வரலாற்று குறிப் போடு பேசினார்., மாநிலச் செயலாளர் நாச்சிக்குளம்.தாஜுதீன் பேசும் போது இந்த ஆம்புலன்ஸ் அனைத்து சமூக மக்களின்
நாகப்பட்டினம் எம்.எல்.ஏ எம்.தமிமுன் அன்சாரி மஜக
நாகப்பட்டினம் எம்.எல்.ஏ எம்.தமிமுன் அன்சாரி மஜக
முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மரணம். மஜக இரங்கல்.
(மனித நேய ஜனநாயக கட்சி பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA வெளியிடும் இரங்கல் அறிக்கை) முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அவர்கள் வய து மூப்பு காரணமாக இன்று மரணமடைந்தார் என்ற செய்தி வருத்தமளிக்கிறது. அவரது அரசியல் சித்தாந்தத்தில் எமக்கு கருத்து வேறுபாடுகள் உண்டு. ஆயினும் மாற்று கருத்து உடையவர்களும் மதிக்கத்தக்கவராக அவர் வாழ்ந்தார் என்பது அவரது சிறப்பை உயர்த்தி காட்டுகிறது. மூன்று முறை பிரதமர், வெளியுறவு துறை அமைச்சர்,நீண்ட காலம் பணியாற்றிய நாடாளுமன்றவாதி என அரசியல் பணியாற்றிய அவரை இழந்து வாடும், குடும்பத்தினருக்கும், அவரது பாரதிய ஜனதா கட்சியினருக்கும் எமது ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறோம். இவண்; #மு_தமிமுன்_அன்சாரி #பொதுச்_செயலாளர் #மனிதநேய_ஜனநாயக_கட்சி 16.08.18
மத்திய சென்னை கிழக்கு மாவட்டம் சார்பில் சுதந்திர தின நிகழ்வுகள்..! மஜக பொதுச்செயலாளர் மாநில பொருளாளர் பங்கேற்பு..!!
சென்னை.ஆகஸ்ட்.15., நாடெங்கும் நேற்று (15.08.2018) 72 வது சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது. சுதந்திர தினத்தை முன்னிட்டு மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் பல மாவட்டங்களில் இந்திய தேசிய கொடி ஏற்றி வைக்கப்பட்டது. மத்திய சென்னை கிழக்கு மாவட்டம் சார்பில் நேற்று 5 இடங்களில் தேசிய கொடி ஏற்றப்பட்டது. மத்திய சென்னை கிழக்கு மாவட்டத்தில் கீழ்கண்ட பகுதிகளில் மஜக மாநில பொருளாளர் எஸ்.எஸ் ஹாரூன் ரசீது அவர்கள் இந்திய தேசிய கொடி ஏற்றி வைத்து இனிப்புகளை வழங்கினார்கள். 1. பூக்கடை - ஆண்டர்சன் தெரு 2. எழும்பூர் - எழும்பூர் மெயின் ரோடு 3. புரசைவாக்கம் - தானா தெரு 4. புரசைவாக்கம் - மாதார்ஷா துணிக்கடை அருகில் 5. புதுப்பேட்டை - ஹாரிஸ் ரோடு, ஆதித்தனார் சாலை ஆகிய இடங்களில் கொடி ஏற்றி பின்னர் பொதுமக்களுக்கும், சின்னஞ்சிறு குழந்தைகளுக்கும் இனிப்புகளை வழங்கினார். இறுதியாக சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள காயிதே மில்லத் அரசு பள்ளிகூடத்தில் மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA, மற்றும் மாநில பொருளாளர் ஹாரூன் ரசீது ஆகியோர் ரத்ததான முகாமை துவங்கி வைத்து, பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டு நிகழ்ச்சியை சிறப்பித்தார்கள்.. இதில் மாநில
கேரளா பாலக்காட்டில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் மஜக நிர்வாகிகள் ஆய்வு..!
கோவை.ஆக.16., கடந்த சில நாட்களாக #கேரளா மாநிலம் தாழ்வான பகுதிகளில் ஏற்ப்பட்ட கடும் வெள்ளப்பெருக்கினால் 60க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர், மேலும் பலர் வீடுகளையும், வாழ்வாதாரங்களையும் இழந்துள்ளனர். இந்நிலையில் நேற்று கேரளா #பாலக்காடு பகுதியில் #மனிதநேய_ஜனநாயக_கட்சி துணை பொதுசெயலாளர் சுல்தான் அமீர், கோவை மாநகர் மாவட்ட செயலாளர் மீன் அப்பாஸ், மாவட்ட பொருளாளர் TMS. அப்பாஸ், மாவட்ட துணை செயலாளர் சிங்கை சுலைமான் மற்றும் இளைஞர் அணி செயலாளர் ஃபைசல் ஆகியோர் வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிட்டனர். களபணியில் உள்ள சலபி பள்ளி நிர்வாகிகளுடன் மக்களின் உடனடி நிவாரண உதவிகள் குறித்து ஆலோசனை செய்தனர். கடந்த 11.08.2018 அன்று நடந்த மாநில செயற்குழு கூட்டத்தில், கேரளா வெள்ள நிவாரண நிதி முதற்கட்டமாக 10இலட்சம் ரூபாய் அனுப்புவது என்ற அறிவிப்பை மஜக வெளியிட்டது என்பது குறிப்பிடதக்கது. தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #மஜக_வெள்ள_நிவாரண_பணிக்குழு.
அல் ஷிஃபா இஜாமா மருத்துவமனை திறப்பு விழா மஜக மாநில நிர்வாகிகள் பங்கேற்ப்பு
சென்னை.ஆக.15., சென்னை மவுன்ட்ரோட்டில் புதியதாக துவங்கபட்டிருக்கும் Al-Shifa, Hijama clinic, துவக்கு விழாவில் மஜக மாநில பொதுசெயலாளர் மு.தமிமுன்அன்சாரி Mla, மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாருன்ரசீத் M.com, அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரை நிகழ்த்தினார்கள் மற்றும் கொங்கு இளைஞர் பேரவை தலைவர் தனியரசு Mla, இயக்குனர் அமிர், மஜக மாநில துணை செயலாளர் சைஃபுள்ளாஹ், மாநில இளைஞர் அணி பொருப்பாளர் Sj.அப்சர் சைய்யத், மு.மாநில இளைஞர் அணி துணை செயலாளர் N.அன்வர்பாஷா , தலைமை செயற்குழு உறுப்பினர் முஹம்மது யூசூப், மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #சென்னை