சென்னை.ஆகஸ்ட்.15., நாடெங்கும் நேற்று (15.08.2018) 72 வது சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது.
சுதந்திர தினத்தை முன்னிட்டு மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் பல மாவட்டங்களில் இந்திய தேசிய கொடி ஏற்றி வைக்கப்பட்டது.
மத்திய சென்னை கிழக்கு மாவட்டம் சார்பில் நேற்று 5 இடங்களில் தேசிய கொடி ஏற்றப்பட்டது.
மத்திய சென்னை கிழக்கு மாவட்டத்தில் கீழ்கண்ட பகுதிகளில் மஜக மாநில பொருளாளர் எஸ்.எஸ் ஹாரூன் ரசீது அவர்கள் இந்திய தேசிய கொடி ஏற்றி வைத்து இனிப்புகளை வழங்கினார்கள்.
1. பூக்கடை – ஆண்டர்சன் தெரு
2. எழும்பூர் – எழும்பூர் மெயின் ரோடு
3. புரசைவாக்கம் – தானா தெரு
4. புரசைவாக்கம் – மாதார்ஷா துணிக்கடை அருகில்
5. புதுப்பேட்டை – ஹாரிஸ் ரோடு, ஆதித்தனார் சாலை
ஆகிய இடங்களில் கொடி ஏற்றி பின்னர் பொதுமக்களுக்கும், சின்னஞ்சிறு குழந்தைகளுக்கும் இனிப்புகளை வழங்கினார்.
இறுதியாக சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள காயிதே மில்லத் அரசு பள்ளிகூடத்தில் மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA, மற்றும் மாநில பொருளாளர் ஹாரூன் ரசீது ஆகியோர் ரத்ததான முகாமை துவங்கி வைத்து, பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டு நிகழ்ச்சியை சிறப்பித்தார்கள்..
இதில் மாநில துணைச் செயலாளர் முஹம்மது சைபுல்லாஹ் , மத்திய சென்னை மாவட்ட செயலாளர் பிஸ்மில்லாஹ் கான், மாவட்ட பொருளாளர் அமிர் அப்பாஸ் , மாவட்ட துணைச் செயலாளர்கள் பீர் முஹம்மது, ரவூப் ரஹீம் ,
தொழிலாளர் அணி செயளாலர் மூசா கனி,
மாவட்ட வர்த்தக அணி செயலாளர் ரியாசுதீன், மாவட்ட வழக்கறிஞர் அணி செயலாளர் முகம்மது ஜாவீத், இஸ்லாமிய கலாச்சார பேரவை மாவட்ட செயலாளர் பிலால் அஹ்மது,தகவல் மாவட்ட தொழில் நுட்ப அணி செயலாளர் மஸ்தான்
சேப்பாக்கம் திருவல்லிக்கேணி பகுதிச் செயலாளர் சாகுல் ஹமீது, பொருளாளர் ஜலாலுதீன் து.செயலாளர் முகமது அலி இசாக், சையது ஜமால், இளைஞர் அணி செயலாளர் சலீம் அலி, இளைஞரணிபொருளாளர், இளைஞரணி துணைச் செயலாளர் சையது, இர்பான் இளைஞர் அணி துணை செயலாளர் முகமது அலி, வர்த்தக அணி செயலாளர் தாஜூதீன், தொழில்நுட்ப அணி செயலாளர் சாதிக் பாட்ஷா, IKP பகுதி செயலாளர் ராஜா, கிளை செயலாளர்கள் முகமது மைதீன், கரீம், மகபூப் பாஷா
63 வது வட்ட செயலாளர் அப்துல் ஜப்பார், பொருளாளர் ஷாகுல், ஹமீத், துணைச் செயலாளர் ஹசன் அலி, 61 துணைச் செயலாளர்கள் பஷிர், ஷராபத் அலி , 77 வது வட்ட செயலாளர் ஷரிப், துணைச் செயலாளர் ஷஃபி ஆகியோர் கலந்து கொண்டனர்.
தகவல்;
#தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#மத்திய_சென்னை_கிழக்கு